வாழ்த்தலாமே...

சமீபத்தில் திருமணம் முடித்த நமது அறுசுவை சகோதரி ஜானகியை வாழ்த்துவோமா?

ஹாய் ஜானகி இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.உங்கள் இல்லறம் நல்லறமாக இனிக்க இறைவனை வேண்டுகிறேன்.

வாழ்த்துக்கள் நர்மதா,உங்க வீட்டுக்கு குட்டி பாப்பா வந்துட்டாங்க.உடம்பை நன்றாக கவனித்துக்கோள்ளவும்.

அன்பு ஜானகி திருமணம் சிறப்பாக நடந்தது அறிந்து மிக்க சந்தோஷம். தம்பதியர் சீரும் சிறப்புமாக வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்பு நர்மதா உங்களுக்கு குழந்தை பிறநதது குறித்து மிக்க மகிழ்ச்சி. குட்டி தேவதையின் பெயர் என்ன? உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

ஹலோ நர்மதா,

உங்களுக்கும், உங்கள் குட்டிக்கும் எங்களது வாழ்த்துக்கள்.

ஹலோ ஜானகி,

இனிய திருமண நாள் வழ்த்துக்கள். செல்வங்கள் பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ வழ்த்துக்கள்

என வாழ்த்தும்,

மணி

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

அன்பின் இலா, ஸாதிகா, ஜலீலா, ரசியா, ரஜனி, மேனகா, வானதி & மணி, அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். ஜானகிக்கு வாழ்த்து சொல்ல ஆரம்பித்த இழையில் என்னையும் வாழ்த்தியமைக்கு நன்றி :) குட்டிப்பாப்பாவின் பெயர் 'லயா வானதி'. இனி முன்பு போல குறிப்புக்கள் அனுப்புவது கஷ்டம்தான். ஆனாலும் அறுசுவையை பார்க்க வருவேன். மீண்டும் அனைவருக்கும் நன்றி.
-நர்மதா :)

எனது அன்புத் தோழி ஜானகிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்றுபோல் என்றும் தங்கள் வாழ்வில் சந்தோஷம் நிறைந்திட வாழ்த்துகிறேன்.

நர்மதா, உங்களுக்கும் உங்களது குடும்பத்தார்க்கும் குட்டிப் பாப்பாவின் வருகைக்காக ஸ்பெஷல் வாழ்த்துக்கள். குழந்தையின் பெயர் ரொம்ப நல்லா இருக்கு.

உங்களுக்கும், உங்கள் குட்டிப் பாப்பா லயாவிற்கும், குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்களை குட்டி பாப்பா ரொம்ப பிஸியா வைத்து இருப்பாள். அதன் நடுவிலும் என்னை வந்து வாழ்த்தியதில் மிக்க சந்தோஷம்.

ஜானகி

என்னை வாழ்த்திய அனைத்து தோழிகளுக்கும் நன்றிகள் கோடி.

வாழ்த்து கூறிய சாந்தோ, தீபா அருண், ஜலீலா, ஜெயந்தி மாமி, ஸாதிகா மேடம், இலா, விஜி, சோபில், அனு, மேனகா, வின்னி, மணி சாரா, தேவா அனைவருக்கும் நன்றி! நன்றி!

அன்பு சகோதரி ஜானகிக்கு வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று பலாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்தும் (நான் ஏற்க்கனவே வாழ்த்தி பதிவு போட்டேன் ,உங்களுக்கும் மனோ மேடம் மகன் திருமணத்திர்க்கும் என் பதிவை காணோம் அருசுவையில் ஒன்னுமே புறியல.....)
உங்கள் அன்பு
ரஸியா

நர்மதா மேடம் ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களுக்கு முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். குட்டி தேவதை லயா எப்படி இருக்காங்க? இனி நீங்க பிஸி தான். பேரு சூப்பரா இருக்கு. லயாவ கவனித்துக்கொள்ளவும். நீங்களும் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்க.

நர்மதா. வாழ்த்துகள். உங்க குட்டி பாப்பா எப்பிடி இருக்கா? நல்ல பெயர் லயா வானதி.டைம் கிடைக்கும் போது மிண்டும் வந்து நல்ல ரெசிப்பிஸ் குடுங்க.நான் உங்கா ரெசிப்பிஸ் எல்லாம் செய்வேன். நல்லாவும் & ரொம்ப சிம்பிளாகவும் புதிய டைப் ஆகவும் இருக்கும். டேக் கேர் யூ& பேபி.

மேலும் சில பதிவுகள்