ஹைய்யா...ஜாலி...அரட்டை அடிக்கலாம் 13 வது பாகம் நிரம்பி தளும்புகின்றது.யாராவது கவனிக்கவில்லையா?105 ப

ஹைய்யா...ஜாலி...அரட்டை அடிக்கலாம் 13 வது பாகம் நிரம்பி தளும்புகின்றது.யாராவது கவனிக்கவில்லையா?105 பதிவுகளுக்கு மேல் போய் விட்டதே?இனி பாகம் 14 க்கு அனைத்து ஸ்னேகிதிகளும் வரும் படி அன்புடன் அழைக்கின்றேன்.அரட்டையை சந்தோஷமா தொடருவோம்.
அன்புடன் ஸாதிகா

என்னை விசாரித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றிகள்.விஜி நான் நல்ல சுகமே.ஹரிகாயத்ரி,கீழே உள்ள உங்கள் பதிவை மட்டும் முதலில் படித்து விட்டு அட நம்ம காயத்ரி நம்மை விட்டுவிட்டார்களே என நினைத்தேன்.பிறகு அதற்கு முந்தைய பதிவை படித்ததும்தான் புரிந்தது.பேரன் நலமாக உள்ளார்.மகளும் நலமே.
மணிசாரா,நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்?நலமா?
காயத்ரி,வாருங்கள்.நோன்பு காலங்களில் எங்கள் வீட்டில் 30 நாட்களும் தடபுடல் தான்.மர்றவர்களுக்கு என் சமையலை தந்து மகிழ்வதில் எனக்கு மிகவும் பிடிக்கும்.சுற்றிலும் ஹிந்து,கிஸ்த்துவ நண்பிகள்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டினருக்கும் அளித்து மகிழ்வோம்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் சாதிகா மேடம் உங்கள் விட்டுட்டு நான் எப்படி ஒரு த்ரெட் போடுவேன். நிச்சயம் வர முயற்சிக்கிறேன். ஆமாம் மேடம் எங்கள் வீட்டு அருகிலும் சில முஸ்லிம் தோழிகள் இருக்கிறார்கள் அவர்களும் கொண்டு வந்து தருவார்கள். அப்போது செய்யும் அந்த நோன்பு கஞ்சியே தனி சுவை தான்.

எங்கு வசிக்கின்றீர்கள்?அவசரமாக நல்லி கிளம்பிக்கொண்டுள்ளேன்.வந்து பதிவுகளி பார்கின்றேன்
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் காயத்ரி நான் நல்லா இருக்கிறேன் நீங்க நலமா? அப்பா எப்படி எல்லைரையும் நியாபகம் வைத்திருந்து சரியா கேட்டு எழுதி இருக்கீங்க. ப்ரண்ஷிப்பை ரினிவல் செய்தாச்சா? ரொம்ப நன்றி என்னையும் நியாபகம் வைத்திருந்து கேட்டதற்கு.

இன்னும் ஒரு பெரிய உதவி செய்ய முடியுமா?? மர்லி வீடுவரை போயி ரெண்டு அடி போட்டுவிட்டு பிசியையும் தூக்கிவர முடியுமா??

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

போன அரட்டை த்ரெட்ல விசாரிச்சு இருந்தீங்க!! இப்பதான் பார்த்தேன்... நான் நலமே!!! நீங்க எப்படி இருகீங்க.. வீட்டில எல்லாரும் நலமா?? எனக்கு சில motivational வார்த்தைகள் பிடிக்கும்... என் மன நிலைக்கு ஏற்ப போட்டுக்குவேன். Untill i find a new one to suit my mood.

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஆன்டி!!! என்ன சமையல் இன்னைக்கு...
எல்லாம் செய்து எனக்கு காலையிலே பசிக்குது.. எதாவது சீரியல்/ஓட்ஸ் தான் சாப்பிடனும்...உங்க வீட்டுக்கு பக்கது வீடு காலியா ஒரு மாசத்துக்கு... டெயிலி உங்க வீட்டில எஞ்சாய் பண்ணலாம்..

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் எல்லோருக்கும்

எல்லோரும் எப்படி இருக்கீங்க
பழைய வரவுகள் நிறைய பேர் வந்திருக்கிறீர்கள்,புது வரவுகள் உங்களை வரவேற்கிறோம்(எத்தனை நாளைக்குத்தான் புது வரவுகளை வரவேற்கிறோம்னு சொல்றது அதுதான் வித்தியாசமா!!)

ஸாதிகா மேடம் எப்படி இருக்கீங்க பழைய ஆட்கள் வந்தவுடனேதான் எட்டி பார்க்கிறீங்க, நல்லீல போய் என்ன அள்ளி வந்திருக்கிறீங்க(ஹய் எதுகை மோனையெல்லாம் வருது).

ஹாய் காயத்ரி
எப்படி இருக்கீங்க
உங்களுக்கு கல்யாணமாயிடுச்சா? தப்பா நினைச்சுக்காதீங்க உங்கள பத்தி எனக்கு தெரியாது அதான் கேட்டேன்.

ஹாய் பிரதீபா எப்படி இருக்கிங்க எங்க ஆளையே காணோம் .
ஹாசினி எப்படி இருக்கீங்க ஹர்ஷினி எப்படி இருக்காங்க.

தனீ எப்படி இருகீங்க அfரா எப்படி இருக்காங்க
மர்லி எப்படி இருக்கீங்க ரொம்ப நாள் கழிச்சு வந்து பதிவு போட்டுருக்றீங்க உடம்ப பார்த்துக்கோங்க தேவையில்லாத டென்ஷன் எடுத்துக்காதிங்க ப்ளீஷ் மரியத்தை கேட்டேனு சொல்லுங்க.

நாகர்கோயில் ராணிகள் கவிசிவா, லதாகணேஷ், செல்வின்,ஷராபூபதி எல்லாரும் எப்படி இருக்கீங்க.

குருவி எப்படி இருக்கீங்க என்ன பறந்து போய்டீங்களா ஆளையே காணோம்.

ஹாய் ரேவதி எப்படி இருக்கீங்க.

அம்பிகாதேவி எப்படி இருக்கீங்க.

ஆண்டாள் பிறந்தநாள் கொண்டாட்டமெல்லாம் பலமா?

தளிக்கா எப்படி இருக்கீங்க நான் ஏற்கனவே உங்க கூட பேசிருக்கேன் ஞாபகம் இருக்கா?

ஹாய் சுகன்யா எப்படி இருக்கீங்க

தமிழ் எப்படி இருக்கீங்க

ஹாய் இலா உங்க கூட முதல் முறையா பேசுறேன்

ஜலீலா மேடம் எப்படி இருக்கீங்க

ஹாய் மணிமேகலை எப்படி இருக்கீங்க

ஜெயலஷ்மி எப்படி இருக்கீங்க

ஜெயந்தி மாமி எப்படி இருக்கீன்க கல்யாண்மெல்லாம் நல்லபடியா முடிஞ்சதா
எனக்கு தெரிஞ்சவரை எல்லரையும் விசாரிச்சுட்டேன்னு நினைக்கிறேன் யாரையாவது விட்டிருந்தா அவர்களுக்கும் ஒரு ஹாய்.

இலா ,மர்ழி பாவம்.பிள்ளை தாய்ச்சிப் பெண்.ரம்ஜான் பெரு நாள் கழித்து அவரது வீட்டிற்கு போக உள்ளேன்.பிஸியை தூக்கிக்கொண்டு வரவா?அவ்வளவுதான்.மர்ழி,உருட்டுக் கட்டை எடுத்துக்கொண்டு வருவார்.காப்பாற்ற ஓடி வந்து விடுவீர்களா?
ஸாதிகா

arusuvai is a wonderful website

கவி.எஸ்.புதியவர்,பழையவர் என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை.நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அறுசுவையில் ஐக்கியம் ஆகிவிடுவேன்.ரம்ஜான் வருகின்றது அல்லவா?இப்போது இருந்து துணிகள் எடுக்க ஆரம்பித்தால் தான் வசதியாக இருக்கும்.நீண்ட நேரம் நோன்பு இருந்து கொண்டு ஷாப்பிங் செய்வது கஷ்ட்டமாக இருக்கும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்