BIG BANG Experiment !!! முடிவிற்காக காத்திருக்கின்றேன்

கிட்டத்திட்ட 14 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் உருவான இந்த யுனிவர்ஸ்ஸின் தோற்றம் குறித்த மிக முக்கிய ஆராய்ச்சி (Big Bang Experiment) ஜெனிவாவில் இன்று நடைபெறுகின்றது. முடிவுகள் என்னாவாக இருக்கும் என்பதை அறியும் ஆர்வத்தில் இப்போதே இதயத் துடிப்புகள் அதிகமாகிவிட்டன.

உலக அறிவியல் ஆராய்ச்சியில் இது ஒரு மிகப் பெரிய ஆராய்ச்சி. நீண்ட காலம் எடுத்து, அதற்கான அமைப்பினை உருவாக்கி, இயந்திரங்களையும் உருவாக்கி, ஏராளமாக செலவு செய்து, மிக பாதுகாப்பாக இந்த சோதனையை செய்கின்றனர். வழக்கம்போல் மதவாதிகள், (போலிச்)சாமியார்கள் எல்லாம் இதற்கு ஏகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அவர்களது அவசர மறுப்புகளில், எங்கே ஏதேனும் உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டு தாங்கள் இத்தனை நாட்கள் போட்ட வேசம் கலைந்துவிடுமோ என்ற அச்சம்தான் தெரிகின்றது. இந்த ஆராய்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றால் இதுநாள் வரை விடை காணாத நிறைய விசயங்களுக்கு விடைகள் கிட்டலாம்.

வெற்றியோ, தோல்வியோ.. முடிவுகள் எதுவாயினும் பரவாயில்லை. இது போன்ற ஒரு முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள அத்தனை அறிவியலாளர்களையும் மனமார வாழ்த்தி, பாராட்டுகின்றேன்.

ஆமாம்.. நானும் இந்த செய்தியை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.. அதுவும் இப்ப தான் ஒரு புத்தகம் படித்தேன்.. Space Oddessey 2001 -Arthur Clark இப்படியெல்லாம் இருக்குமா என்று வியக்கும் போது ஒரு ஆராய்ச்சி.. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதி வெற்றிகரமாக முடிவடைந்து உள்ளது. இந்த ஆராய்ச்சி முடிவுகளை புரிந்துகொள்வதற்க்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும்

"The challenge is not to manage time, but to manage ourselves." --Steven Covey

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

Hi,

Read the following articles. I don't think the result will be positive, may cause some serious damages to our world system.

http://www.dailymail.co.uk/sciencetech/article-1051070/Landmark-experiment-unlock-secrets-Big-Bang-cause-end-world-say-scientists-court-bid-halt-it.html

http://www.theage.com.au/news/opinion/a-whizbang-experiment-with-a-serious-downside/2008/04/12/1207856917065.html

இன்றைக்கு என் ஹஸ் காலை டிவி ஆன் செய்தவுடன் முதல் செய்தி இதுதான் நாங்க பார்த்தோம். ஆவலுடனும், ஆச்சரியத்துடனும் காத்திருக்கோம். இன்னைக்கு இங்க எந்த டிவி சேனல் ஓபன் செய்தாலும் இது தான் ஹாட் நியுஸ். என் ஹஸ் இதை என்னிடன் ரிக்கார்ட் செய்ய சொல்லி வேலைக்கு சென்றுள்ளார். ஆமாம் அட்மின் வெற்றியோ தோல்வியோ முடிவுகள் எதுவா இருந்தாலும் நம்ம மூத்த திறமைசாலியான ஆராய்ச்சியாளர்களையும் அறிவிய்லாளர்களையும் கண்டிப்பா வாழ்த்த தான் வேண்டும், நானும் வாழ்த்துகிறேன்.

அந்த ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டிருந்த 2000 அறிவியலாளர்களில் 30 பேர் இந்தியர்கள். மொத்தத்தில் 200 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள்.

ஜெய் ஹிந்த் என்று உற்சாகமாய் குரல் கொடுக்கலாம்.

மேலும் தகவலுக்கு யாஹூவில் இந்த பதிவினை படியுங்கள்.

http://in.news.yahoo.com/20/20080910/1416/tnl-indian-connection-in-big-bang-experi.html

அட்மின் இதை படிக்கும் போது மனதிற்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நானும் அந்த தளத்தைதான் பார்த்துட்டு இருக்கேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

பயப்படத் தேவையில்லை. நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் இரண்டு வருடத்திற்கு முன்பு இப்போது ஆராய்ச்சி நடக்கும் அந்த இடத்திற்கு சென்றிருக்கின்றார். இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த யாஹூ பதிவை பார்க்கவும்.

http://in.news.yahoo.com/139/20080910/808/tnl-kalam-says-big-bang-experiment-spell.html

அவர் சொல்லியுள்ளது இதுதான்.. அவரும் நாம் எப்படி பிறந்தோம், உலகம் எப்படி பிறந்தது என்பதை அறியும் ஆவலில் இருப்பதை இது காட்டுகின்றது.

"I was there, two years back, I was in the exact spot where they are doing the experiment. I have seen the facility and what they are trying to do, they want to split the particles, you know, the ions and positron and <b> this is going to give us how we are born, how earth is born, how we are born. </b> For physics, it is going to be a very important contribution there is no danger, it is underground,"

நான் இதோ அதை தான் படித்து கொண்டு இருக்கேன்.
கண்டிப்பா நம்க்கு எல்லாம் பெருமை + சந்தோஷம் நம்மவர்கள் இவ்வளவு பேரா நம்பவே முடியல்ல.

இதோட ரிசல்ட் 4 வாரம் ஆகலாம் என்று சொல்கிறார்கள். அதுவும் அது எப்படி வரும் என்று தான் ஆவலோட இருக்கு இல்ல புஸ்ன்னா போகுமான்னும் தெரியல்ல.

டிவியில் சுட்டது:

ஸ்விஸ் ஃப்ரென்ச் பார்டரில்தான் 17 மைல் நீளமுள்ள ஒரு டணலில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த ஆய்வினால் ஏதேனும் ப்ளாக் ஹோல்ஸ் போன்று உருவாகி உலகம் அழிந்துவிடும் என பயப் படத்தேவையில்லையாம் (நம்பிக்க வேண்டியதுதான்:-)

இந்த ஆராய்ச்சியின் முடிவு பல வாரங்களும் அதை உலகம் முழுதும் உள்ள அறிஞர்கள் அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர பல ஆண்டுகளும் ஆகுமாம்.

ஆராய்ச்சியை ஆரம்பிச்சாச்சு. இனிமே பயந்து ஒன்றும் ஆகப் போவதில்லை:) என்னதான் நடக்குதென்று பார்ப்போம்.

Me@gmail.com : Hi EM!!
Me@gmail.com : Good Morning !!
Me@gmail.com : How are you ?
MyCollegue : good morning
MyCollegue : i am fine, how about yourself
Me@gmail.com: good.. thank you
Me@gmail.com: u heard about the big bang expiriment?
MyCollegue : yes, i read about it
Me@gmail.com : i am worried
MyCollegue : you would feel no pain, one minute we are here, the next...
Me@gmail.com : oh...
Me@gmail.com : em!!... it is nice working with you!!!
Me@gmail.com : you a great person i hv ever worked with
Me@gmail.com : thanks for your patience with me
MyCollegue : that sounds like a farewell speech, i hope not
Me@gmail.com : :-))
Me@gmail.com : what if something happens.. the world ends
Me@gmail.com : ok ed. i will let you go back to work
Me@gmail.com : i am calling india
MyCollegue : all of your debts would be erased
Me@gmail.com : i hv very less
Me@gmail.com : only if i knew i would have borrowed more and enjoyed

"The challenge is not to manage time, but to manage ourselves." --Steven Covey

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்