வாழ்க்கை குறிப்பு

பெரிசா புலம்பி ஒரு பதிவு போட்டேன், தேவா தளிகா போன்றோரின் பூர்வ ஜென்ம புண்ணியம், பதிவு காணாமல் போய் உங்களை எல்லாம் காப்பாத்திடுச்சு.

சுருக்கமா: வொர்க்- லைஃப் பேலன்ஸ்னு பெரிசா பேசிக்கறாங்க எல்லாரும், எப்படி செயல் படுத்தலாம் வாழ்க்கைலனு அனுபவசாலிகள் சொல்லலாமே.. குழந்தை பிறந்தா எப்படி சமாளிக்கலாம்னும் டிப்ஸ் குடுக்கலாம். வேலைக்கு போயிட்டே எல்லாம் குழந்தையை வளர்க்க முடியாது *எச்சரித்து* கொண்டே இருப்பவர்களுக்கு ஓரளவுக்கு இல்லை என்று நிரூபணம் பண்ணனுமா இல்லியா?

அன்புடன்,
ஹேமா.

ஹேமா, நான் வேலைக்குப் போக ஆரம்பிச்சு கிட்டத்தட்ட 2 வருஷம் ஆகுது. வேலைக்குப் போறது, குழந்தையை கவனிச்சுக்கறது ரெண்டும் பாலன்ஸ்டா இருக்க நான் பின்பற்றுவதை சொல்றேன். நிச்சயம் என்னைவிட பெஸ்ட் ஐடியாஸ் இங்கே நிறைய அனுபவசாலிகள் கொடுப்பாங்க. இது முதல் பதிலா இருக்கட்டுமே. இந்தியாவில் வேலை செய்றவங்களை விட, வெளிநாட்டில் முக்கியமா US, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வேலை செய்யறவங்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறைங்கறதால கொஞ்சம் நல்லாவே ப்ரீ பிளாண்டா இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை குழந்தை பிறந்து, அதுக்கு தானா சாப்பிட, பாத்ரூம் போகத் தெரியறவரை நம்ம கண்காணிப்பில் வெச்சுக்கறது பெட்டர். அப்படி நம்மளால முடியாட்டி, ஊரிலிருந்து நம்ம பெற்றோர்களை கூட்டிட்டு வந்து நம்ம கூடவே இருக்க சொல்லலாம். அவங்க குழந்தைங்களை நம்மளைவிட இன்னும் செல்லமா பார்த்துப்பாங்க.

பிரெக்னெண்டா இருக்கும்போது வேலைக்குப் போறது கஷ்டமே இல்லை. வயிறு பெரிசா இருக்கும், வாந்தி, டயர்ட்னெஸ்னு பிரச்சனை இருந்தாலும் அது சமாளிச்சுடலாம். நம்மை கவனிச்சுக்கறது ஈசிதானே. குழந்தை பிறந்த பிறகுதான் ஒரு வருஷம் வரை லீவ் எடுக்கலாமே. Without pay ஆக இருந்தாலும் குழந்தைக்கு அப்போ நாம் அருகில் இருக்கறது அவசியம்ங்கறதால அப்படி லீவ் எடுத்துக்கலாம். இது தவிர பர்சனல் லீவ், சிக் லீவ்னு இருக்கறதால குழந்தைகளை வெச்சுட்டு வேலைக்குப் போறது அத்தனை கஷ்டமில்லை (அதே சமயம் அப்படி வேலைக்குப் போறது பிடிச்ச விஷயமாவும் இல்லை.).

என் பையனுக்கு 2 ஆவது வயதில், என் அப்பா, அம்மா இங்கே இருந்ததால, முதலில் நான் வேலைக்கு செல்ல ஆரம்பிக்கும்போது அத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணல. ஒரு வருஷம் அவங்க இங்கே என்கூட இருந்தாங்க. அப்போதிலிருந்தே Child Care ஒரு நாளைக்கு 3 மணி நேரம்னு அனுப்பி பழக வெச்சேன். இப்படியே ஒரு வருஷம் தெரியல. அப்புறம் ஊரிலிருந்து ஒரு மெயிட் கொண்டு வந்து வெச்சுக்கிட்டேன். ஆனாலும் என் பையனை ஸ்கூல் அனுப்பறதை நிறுத்தல. எனக்கு ஸ்கூல்ல ட்ராப் பண்ற வேலை, பிக்கப் பண்ற வேலை கிடையாது. காலையில் லேட்டா எழுந்து அவனை அந்தம்மா ஸ்கூலில் விட்டுடுவாங்க. மதியம் அழைச்சுட்டு வந்துடுவாங்க. ஸ்கூல் வீடு அருகிலோ, ஆபிஸ் அருகிலோ இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நான் வீட்டுக்குப் போனதும் படிப்பு, விளையாட்டுன்னு இரவு தூங்க நேரம் ஆகும். ஆனாலும் அவன் கூட 6 மணி நேரமாவது செலவழிக்க முடியுதேன்னு இருக்கும். வீட்டில் தமிழ் மட்டுமே பேசறதால இந்த ஊர் Accent ல் ஆங்கிலம் பேச, புரிந்துக் கொள்ள இப்படி Learning School அனுப்பறது நல்லது. இல்லாட்டி குழந்தைங்க ஒரு வித தனிமை உணர்வோட இருப்பாங்க. ஆனால் இப்படி மெயிட் வெச்சுக்கறது எல்லாருக்கும் சரிவராது. என் மெயிட் இப்ப விசா முடிஞ்சு இந்தியா போயிருக்காங்க. அவங்க இல்லாமலேயே 15 நாளா இப்ப ஈசியா இருக்கறதால சமாளிக்க முடியும்னு தோணுது.

இது தவிர சில விஷயங்கள். வார இறுதியில் இட்லி மாவு அரைச்சு ரெண்டு தனி பாத்திரத்தில் எடுத்து வெச்சுட்டா (ஒண்ணு பாதி தீர்ந்தப் பிறகு அதை தோசை சுட வெச்சுக்கலாம்) வார நாட்களில் காலை டிபன் ஈசியா இருக்கும். தினமும் இரவுதான் நான் சமைப்பேன். அப்போதே லஞ்ச் பாக் பண்ணி ப்ரிட்ஜில் வெச்சுடுவேன். இதனால் காலையில் எழுந்து நாமளும் கிளம்பி, குழந்தையையும் கவனிக்க ரிலாக்ஸ்டா இருக்கும். எப்பவாவது நேரம் கிடைச்சா புளிக்காய்ச்சல் போன்றவற்றை ரெடி செய்து வெச்சுக்கலாம். தேங்காயை துருவி ப்ரீஜரில் வெச்சுக்கலாம். எலுமிச்சை சாறை பிழிந்து ஐஸ் க்யூபாக மாற்றி ஸ்டோர் செய்துக் கொள்ளலாம். வேலை போவது ஈசியாக இருக்க முக்கியமான டிப்ஸ் பிளானிங் தான். 5 நாளைக்கான டிரசை ஞாயிறு அன்றே ரெடி செய்து ஹேங்கரில் மாட்டி விடுங்க. குழந்தைங்க டிரஸ்சும் அப்படியே. காலையில் எழுந்து குழம்ப வேண்டாம். இரவு சமையலையும் முன்பே திட்டமிட்டு விடுங்கள். இதிலேயே பாதி சிரமம் போயிடும். டைம் மேனேஜ்மெண்ட் சரியா இருந்தா மீதி சிரமமும் ஏற்ற்படாது. இத்தனை மணிக்கு எழுந்திரிக்கணும், இதுக்கு இவ்வளவு நேரம் ஆகும்னு முன்னாடியே திட்டமிட்டுக் கொண்டால் எளிது. கணவரின் ஒத்துழைப்பு இருந்தால் இன்னும் தொல்லை இல்லை.

குழந்தை எத்தனை நேரம் உங்ககூட இருக்குன்றதைவிட, அப்படி இருக்கும்போது நாம செலுத்தற கவனம்தான் முக்கியம். காலையிலிருந்து மத்தவங்க கூட பழகினாலும், நாமதான் அதுக்கு பாதுகாப்பு உணர்வை கொண்டுவர முடியும். வேலை முடிஞ்சு வந்ததும், அய்யோ நான் டயர்டா இருக்கேன், முடியலன்னு சோம்பிடாம குழந்தைகூட ஜாலியா பொழுதை கழிக்கணும். நாம சேரில் உட்கார்ந்துட்டு, மூளையைத் தானே உபயோகிச்சு வேலைப் பாக்கறோம். உடம்பு உழைப்பு அதிகமில்லையே. குழந்தையை சாக்கா வெச்சுட்டு, தோட்டத்தில் ஓடிப்பிடிச்சு விளையாடலாம், பார்க் அழைச்சுட்டுப் போகலாம். நமக்கும் நல்ல உடற்பயிற்சியா இருக்கும். ஆபிஸ், வேலைன்னு மறந்து நிம்மதியாவும் இருக்கலாம். குழந்தைகளும் சந்தோஷமா இருப்பாங்க. நம்மோடவே சேர்ந்து குழந்தையை ஸ்கூல் அழைச்சுட்டுப் போய் விடறதாயிருந்தா அவங்களை சீக்கிரம் தூங்க வெச்சுப் பழக்கணும். அப்போதான் நம்மளை கவனிச்சுக்கவும், வீட்டுக்காரரை தொண தொணக்கவும் நேரம் கிடைக்கும். தினமும் Child care லோ, ஸ்கூலிலிருந்தோ வந்தவுடன் குளிப்பாட்டி விட்டால் நைட் நல்லா தூங்குவாங்க. வார இறுதியில் வெளி நாட்டில் வாழும் சில இந்தியர்களைப் போல டான்ஸ், பாட்டு, தமிழ், நீச்சல்னு தங்களுக்கு வராத வித்தையெல்லாம் கத்துக் கொடுக்கறதுக்காக , பசங்க உயிரை வாங்காம அவங்களை லைபை என்ஜாய் பண்ண விடணும். எதாவது ஒரு கிளாஸ், 2 கிளாஸ் போதும். அதுவும் அவங்களுக்கு விருப்பம் இருந்தால். நாம சின்ன வயசில் அனுபவிச்ச குட்டி குட்டி ( அப்ப அதுதான் பெரிசு) சந்தோஷம் அதையுமே வெளிநாட்டில் இருக்கற குழந்தைங்க அனுபவிக்கறது இல்லை. அப்பா, அம்மா கூட பீச், பார்க், சினிமா நீண்ட நேர தூக்கம் போன்ற சந்தோஷமாவது அவங்களுக்கு வீக் எண்ட்டில் இருந்தால் நல்லா இருக்கும். நமக்குமே ரிலாக்ஸ்டா இருக்கும்.

காலையில் வாயில் வெச்சுட்டு மெல்லாமல், நேரத்தை சாப்பிடற குழந்தைகளுக்கு பாரிட்ஜ் மாதிரி சத்து மாவு , லிக்விட் புட் ஊட்டறது ஈசி. எனக்கு அதுதான் கைகொடுக்கும். பசங்க பேகில் ஸ்நாக்ஸ் பாக்ஸ் ஒண்ணு எப்பவும் இருக்கட்டும். காரில் வரும்போதே எதாவது சாப்பிடக் கொடுத்துட்டா வீட்டுக்குள் நுழைஞ்சதும் கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம். மத்தவங்க என்ன டிப்ஸ் தராங்கன்னு பார்ப்போம்.

எனக்கு இந்த நைட் சமைச்சு வெக்கறது தான் அவ்வளவு ஒத்து வர மாட்டேங்குது.. மாத்த ட்ரை பண்ணனும்.. நேத்து நான் டைப் பண்ணின புலம்பல் பதிடு மட்டும் வந்துருந்த, இன்னிக்கு தான் படிச்சு முடிச்சுருப்பீங்க. ஹும்ம்ம்ம்ம்..

வீக் எண்ட் தான் வீக்டேஸை விட ஹெக்டிக்கா இருக்கு. புத்தகம் படிக்கறது, சும்மா ஷாப்பிங் (க்ராஸரி இல்லை) போறது, போர்ட் கேம்ஸ் விளையாடுறது, நல்லா தூங்கறது எல்லாம் போன ஜென்ம விஷயம் ஆகிடும் போல இருக்கு :-( இன்னும் ட்ரைவிங் வேற கத்துக்கணும்!

வாழ்க்கைலயும், வேலைலயும் நிறைய மாற்றங்கள் கொண்டு வரணும்னு சபதம் எடுத்துருக்கேன், உங்க டிப்ஸையும் போட்டு கலக்கறேன். ஜெ மாமி, டிசென், வேலைக்கு செல்லும்/செல்லாத சகொஸ் எங்கே போயிட்டீங்க?

அன்புடன்.
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

என்னோட அனுபவங்கள்...

முதல் நாள் இரவே சமையலும் அடுத்த நாளுக்கான மதிய உணவும் பேக் பண்ணிடுவேன்... என் ப்ரெண்ட் வாரம் ஒரு முறை சமைத்து வைத்துவிடுவார்கள... தினமும் சாலட் / காய்கறி/ ஒரு நான் வெஜ் அவங்க வீட்டில் இருக்கும்... இதனால அவங்க குழந்தையுடன் அதிக நேரம் செலவு செய்வார்கள்...

வாரத்தில ஒவ்வொரு நாளும் ஒரு வேலைன்னு வச்சு புதன் - பாத்ரூம் கிளீனிங் , வியாழன் - துணி துவைத்தல் வெள்ளி - வேக்குவம் .. வர வழியில் ஃக்ரோசரி..அப்ப சனி ஞாயிறில் வெருமே வீட்டு வேலை செய்த மாதிரி இருக்காது...

ஒவ்வொரு வேளையும் என்ன சாப்பிடனும் என்று நினச்சு காய் வாங்கி வைத்தா நல்லது.. எழுதியும் வச்சுடுவேன்.. ஒரு வேளை சாம்பார் பீட்ரூட் கறி வைக்கனும்ன்னு முடிவு செய்து இருந்தா .. முடியலன்னா ஒரு ரசம் வைத்து பீட்ரூட் செய்திடுவேன்...

காய் வெட்ட முக்கியமா முட்டைகோஸ்/பீட்ரூட்/கேரட் இதெல்லாம் புட் ப்ராசெச்ச்ரில் வெட்டிவிடுவேன்... வடநாட்டு உண்வு செய்ய எப்பவும் தக்காளி ஸ்டுயுட் வைத்து இருப்பேன் 2 நிமிஷத்தில் வேலை முடியும்

பழங்களும் மெலன்ஸ் எப்பவும் வெட்டி வைத்துவிடுவேன்...

காலையில ஒரு வேலையும் வைத்துக்கொள்ள மாட்டேன்... முதல் நாள் இரவே காப்பி பில்டரும் செட் செய்துவிடுவேன்... ஜிம் போய்க்கொண்டு இருந்த நாட்களில் தினமும் ஜிம் உடையும் ஒரு டவல்/தண்ணி பாட்டில்/ சீரியல் பார் எப்பவும் கைவசம் இருக்கும்...

இது உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும்ன்னு நினைக்கிறேன்... குறிப்பிட்டு எதாவது கேள்வின்ன உடனே பதில் சொல்ல முடியும் பொதுவாக இது தான் நினைவுக்கு வருகிறது...

"The challenge is not to manage time, but to manage ourselves." --Steven Covey

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நன்றி இலா.. பொதுவா எப்படி டைம் சேவ் பண்ணலாம்னு தான் கேட்டேன். பொது தவிர வேற ஏதாவது ஸ்பெசிஃபிக்கா செய்யறீங்கன்னாலும் சொல்லுங்க. பரவாயில்லை, நான் ஓரளவிற்கு இப்போது செய்கிறேன் என்றே தோன்றுகிறது - நீங்க சொன்னதுல நைரய விஷயம் நானும் செய்வதே. ஆனா ஒரு வாரத்துக்கு சமைக்கறது மட்டும் பிடிக்கறது இல்லை. :( அமா உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா இல்லியா? ப்ரொஃபைல்ல ஒண்ணுமே பொடலியேனு கேள்வி.

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

ஹேமா!!!
என் ப்ரொபைலில் மாற்றம் செய்துவிட்டேன்.. கல்யாணம் ஆகி 5 வருஷம் 10 மாசம் ஆகுது... ஸ்பெசிபிக்கான்ன கேள்வி கேளுங்க பதில் தர்றேன்.. குழந்தை+வேலை இந்த சினாரியோ எனக்கு அனுபவமில்லை.. அதைதான் கேக்கிறீங்களா?? சாரிடோ!!

இன்னும் டிரைவிங் பழகலையா? நமக்காகத்தான் ஸ்லோ லேன் வச்சு இருக்காங்க.. நானும் கார் ஓட்ட ஆரம்பித்தது ஒரு தேவையினால் தான் .. முதல் வேலைக்கு 50 மைல் ஒன் வே ஓட்டனும்... குளிர்/பனியில்... நமக்கு புதுசா கார் ஓட்டும் போது நல்லா சூரிய வெளிச்சம் இருக்கனும்.. இல்லன்ன பயம்.. 6 மாசம் கழிச்சு.. "நானும் 18 வீலரும்" ன்னு டாக்குமென்ட்ரி எடுக்கும் அளவுக்கு ஓட்டுவேன்.. இப்ப பாருங்க இன்டெர்ஸ்டேட்ல 5 மணி நேரம் தனியா வந்தும் இருக்கேன்...விடியகாலை 4 மணிக்கு எழுந்து 5 மணிக்கு ஓட்ட ஆரம்பித்தால் 9 மணிக்கு பாஸ்டனில் இருப்பேன்... நான்ஸ்டாப்...

"The challenge is not to manage time, but to manage ourselves." --Steven Covey

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஓ சரி சரி.. இல்ல நான் குழந்தை இருந்தாலும் ஒத்து வர்ற மாதிரி எப்படி ரொட்டீன் கொண்டு வர்றதுனு கேட்டேன்.. ;-) இதெல்லாம் ஓவர்னு சொல்றீங்களா.. என்ன பண்ரது அடிக்கடி ரொட்டீன் மத்தறது எரிச்சலா இருக்கே!

என்னிகாவது அவசரத்துக்கு காரை எடுக்க முடியாம பட்டா தான் அறிவு வருமோ என்னவோ.. கத்துக்கணும் ஆண்டவா.

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

மேலும் சில பதிவுகள்