சில விதி

இது நான் விகடன்.காமில் படித்து காபி பேஸ்ட் பண்ணியிருக்கேன் பிடித்து இருந்தால் உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்கள்

சில நேரங்களில்.. சில விதிகள் எப்போதும் மாறாதுங்கோ.. இதோ சாம்பிளுக்கு சில..

எதுக்காகவோ வரிசையில் நிக்கிறோம்னு வைங்க... நாம நிக்கிற வரிசை மட்டும் நகரவே நகராது. மத்த வரிசையெல்லாம் கிடுகிடுன்னு கரையும்... கரெக்ட்டா?

ரிப்பேரான பைக்கை ரிப்பேர் பார்த்துட்டு, கை பூரா க்ரீஸா நிக்கும்போதுதான் மூக்கு நொணநொணனு அரிக்கும். உண்மைதானே பங்காளி..?

உங்க முதலாளி 'ஏன் லேட்..?'னு கேட்டா, 'வண்டி பஞ்சர் சார்'னு சொல்லி சமாளிச்சுடுவீங்க. மறுநாள் உண்மையாவே வண்டி பஞ்சர் ஆகி, முதலாளி முன்னாடி
பேய் முழி முழிச்சிருக்கீங்க தானேப்பா?

வீட்டை பூட்டிட்டு வெளியே கிளம்பும் போதுதான் போன் மணி அடிக்கும். திறந்துட்டு உள்ளே ஓடி வர்றக்குள்ளே நின்னுரும். அதுக்கப்புறம் அரை மணிநேரம் தேவுடு காத்தாலும் ரிங்கே வராது. அப்புறமென்ன... போய்ச் சேர வேண்டிய இடத்துக்கு ரொம்ப லேட்டாதான் போகணும். சரிதானே சார்?

ஒரு முக்கியமான ஆள், உங்க ஃப்ரெண்ட்ஸ்ல ஒருத்தரை மென்ஷன் பன்ணி, 'அவன்கூட சேராதே!'னு சொல்லியிருப்பாங்க. நீங்களும் தலையாட்டியிருப்பீங்க. மறுநாளே, அவனோட சுத்துறதை முக்கியமானவங்க பார்த்து தொலைச்சுருவாங்க... கரெக்ட்டா..?

ஒரு மேஜிக்கோ, வித்தையோ வித்தியாசமா எதையாவது சின்ஸியரா கத்துட்டு வந்திருப்பீங்க.ஒரு ஆளை அசத்திரணும்னு டார்கெட் வெச்சு, அவங்ககிட்டே செய்து காட்டும்போதுதான், மேட்டர் சொதப்பிடும். அவங்க போனதும் ஒரு தடவை செஞ்சு பார்ப்பீங்க. கரெக்டா வரும்... நொந்து நூடுல்ஸாகி இருக்கீங்களா... இல்லையா?

ha.. ha..ha... its true.

alhamdhulillah

ஹாய் ஸ்வேதா நலமா? எனக்கும் இது போல நிறைய நடந்துள்ளது.அதிகமாக நடந்தது இந்த வரிசையில் நிற்கும் போதுதான்.
நான் அதிகமாக நிற்பது குடிநுழைவு வரிசையில்தான்(அதான் immigration Q).
நிற்கும் 4வரிசையில் நீளம் குறைவான வரிசையில் போய் நிற்பேன். சரியாக நான் நிற்கும் வரிசையில் ஒருவரின் டாக்குமெண்டுகள் சரியில்லாமல் மாட்டுவார்.அவ்வளவுதான் மற்ற வரிசையெல்லாம் சீராக நகரும்.இந்த வரிசை மட்டும் அசையாமல் நிற்கும்.சரின்னு மெதுவாக அடுத்த வரிசையில் போய் நின்றால் அங்கே ஒருவர் மாட்டுவார்.நொந்து நூடுல்ஸாகி விடும் எனக்கு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆமாம்ப்ப ஆமா..நீங்க சொல்ற மாதிரி தான் எப்பவும் நடக்குது..எனக்கு எப்பவும் இந்த வரிசையில் நிற்பது ஒத்து வர மாட்டேங்குது..அதனால் எப்பவும் என் கணவரும் நானும் வேறு வேறு வரிசையில் நிற்போம்..எது முதலில் நகர்கிறதோ அதில் பில் போடுவோம்..போன் முறை இந்தியாவில் இருந்து கிளம்பும் போது முதலில் போர்டிங் செய்தால் குழந்தைக்கு பேசினட் கிடைக்கும் என்று சொன்னார்கள்..So முதலில் வரிசையில் நின்றது நாங்கள் தான்..ஆனால் கடைசியில் போர்டிங் வாங்கியதும் நாங்கள் தான்..ha ha ha..நள்ளிரவில் கால் வலிக்க வலிக்க நின்றதை அப்பப்பா இன்னும் மறக்கமுடியவில்லை

சில பிரபலமான கோவில்களில் 4 அல்லது 5 மணி நேரம் வரிசையில் நின்று உள்ளே போனவுடன் தரிசனம்செய்யவிடாமல் வெளியே போக சொல்லும்போது மனது கஷ்டமாக இருக்கும்.வாழ்க வளமுடன்

அன்பு தோழிகளே,

ஹ ஹ ஹ படிப்பதற்கு ரொம்ப சிரிப்பா இருக்கு,ஆனா இத அநுபவிக்கறவங்களுக்குதான் தெரியும் ஆனா அத நினைச்சு நாமலே ஒருநாள் சிரிச்சுக்குவோமில்ல,
என்னோட வாழ்க்கையில தினமும் நான் சந்திக்கும் சில விதிகள்.
குழந்தைய ஒரு மணிநேரமா கஷ்டப்பட்டு தூங்க வைப்போம்,அவங்க தூங்க ஆரபிக்கும்பொழுது கரெக்டா நம்ம வீட்டுக்கிட வந்து, யாரவது வண்டியில போறவங்க வண்டி ஹார்ன பீ னு அடிசிட்டு போவாங்க.ஒரு மணி நேரம் கஷ்டப்பட்டது வீணா போய் திரும்பவும் ஒருமணி நேரம் தூங்க வைக்கணும்.

அடுத்து கஷ்டப்பட்டு தூங்க வெச்சிட்டு குழந்தை தூங்கும்போதே வேலையெலாம் சத்தமில்லாமல் மெதுவாசெய்லாமுன்னு மெதுவா செய்ய ஆரம்பிச்சு செஞ்சிட்டுஇருக்கும்போது கரெக்டா யாரவது வந்து காலிங்பெல் அழுத்துவாங்க இல்லன கதவையே போட்டு உடைக்கற மாதிரி தட்டுதட்டுனு தட்டுவாங்க .:-( அப்புரமென்ன குழந்தை தூக்கத்தைவிட்டு ஒரே ஆட்டம் வேலை செயலாமுனு நினைக்கிற அம்மாவுக்கு ஒரே திண்டாட்டம்.

மேலும் சில பதிவுகள்