ஹைய்யா...ஜாலி...அரட்டை அடிக்கலாம் பாகம் 15

ஹாய் ஃப்ரென்ட்ஸ், முந்தைய பாகத்தில் பதிவுகள் 90 -ஐ தாண்டி விட்டதால் உங்கள் பதிவுகளை இதில் தொடருமாரு கேட்டுக்கொள்கிறேன்.

என்னையும் நினைவுவைத்து தோழிகள் லிஸ்டில் சேர்த்தமைக்கு நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஜலீலா மேடம்
எப்படி இருக்கீங்க.
டூ விட்டது நான் பேசறது கவிசிவாவிடமா, நீங்களும் கவிகளில் குழம்பிவிட்டீர்களா?

ஸாதிகா மேடம், பையன் நல்லா இருக்கான்
நான் உங்க அவாப்படியே நடக்க முயற்ச்சி பண்ணுகிறேன்.

விஜிடிவிம் எப்படி இருக்கீங்க உங்களுக்கு குழந்தைகள் இருக்கா?

செல்வி மேடம் எப்படி இருக்கீங்க என் பையன் எனக்கு நேரம் குடுக்கும்பொழுது உங்களுக்கு மெயில் பண்ணுகிறேன்.

அதிரா உடம்பை பார்துக்கொள்ளுங்கள்.

தமிழ்,ஜெயலஷ்மி எப்படி இருக்கீங்க,

ராணி நீங்களும் வந்து கலந்துடுங்க.

கவிசிவா எப்படி இருக்கீங்க உங்க புண்ணியத்தாலும் என் புண்ணியத்தாலும் இங்க நிறைய பேர் குழம்பி இருக்காங்க.

இலா எங்க போயிட்டீங்க.

ஹாய் ஹேமா எப்படி இருக்கீங்க எனக்கு கூட ஹேமான்னு ஒரு பிரண்டு ஸ்கூல் படிக்கும்போது இருந்தா ஆனா அவ ரொம்ப நல்ல பொண்ணு(ஹி ஹி ஹி) நீங்க ரொம்ப வாலு(அப்பா நமக்கும் ஒரு ஆள் கிடைச்சிருக்கு கலாய்க்க) தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.

ஹாய் மஹா இந்தியாவில்தான் இருக்கிறீர்களா? கல்யாணம் நல்லபடியாக நடந்ததில் சந்தோஷம் புது அண்ணி எப்படி இருக்காங்க, யுவனை ஹாஸ்பிடலுக்கு கூட்டி வந்தேன் என்று போட்டிருந்தீர்கள்?
ஹாய் ஆசியா எப்படி இருக்கீங்க.

நிறைய பேரை கேட்க முடியல்ல கொஞ்சம் வேலை இருக்கு நான் அப்புறமா வரேன்.

ஹாய் கவி&கவி,

எப்படி இருகிங்க நான் நல்லா இருகேன். நானும் குழப்பத்துலதான் இருக்கேன்.ரெண்டு கவில நான் யார் கிட்ட ஜோக்ஸ் கேட்டேன் தெரியல அதுக்கு இன்னும் பதில் வரல.

நான் ஸ்கூல் படிக்கும்பொழுது +1,+2 எனக்கு கவிதா அப்படினு ஒரு ப்ரண்டு அவ ரொம்ப டியர்ஸ்டு. ஆனால் அவ இப்போது எங்கே இருக்கா தெரியல. நான் ஸ்கூல் லீடரா இருந்ததால தனி மரியாதை..அது ஓரு பொற்காலம். சரி நம்ப கதைக்கு வரலாம் அதனால கவி நா எனக்கு என் ப்ரண்டோட ஞாபகம் வருதுபா.
இங்கே இருக்குர கவில யாரவது என் கூட படிசிங்கலா?

சும்ம்மா கேட்டேன்.

என்றும் அன்புடன்
ஜெயலக்ஷ்மிசுத்ர்சன்

கவி எப்படி இருக்கீங்க. ஷாம் என்ன பண்றார். என்னம்மா ரொம்ப பிஸியா. ஆளையே காணோம். ஜெயலக்ஷ்மி, ராணி வந்து கலக்குங்க.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் Thanisha,
எப்படி இருகிங்க
நான் உஙகளிடம் இப்போது தான் பேசுகிறேன்.

ஹாய் விஜி,மஹா விசாரித்ததற்க்கு நன்றி.மஹா யுவனுக்கு உடல் நலமில்லையா?
ஜலீலாக்கா எப்படி இருக்கீங்க?நோன்புக்கு ரெடி ஆகியாச்சா?நோன்பு கஞ்சி கேள்விபட்டிருக்கிறேன்.சாப்பிட்டதில்லை.உங்க வீட்டுக்கு வரேன்.செஞ்சு தாங்க.பசங்க எப்படி இருக்காங்க?
தளிகா ரொம்ப பிஸியா?ரீமா எப்படி இருக்கா?இந்தியா டிரிப் எப்படி இருந்தது?
அதிரா விரைவில் குணமாகி கதைக்க வர இறைவனை வேண்டுகிறேன்.
எல்லார் கூடவும் அரட்டை அடிக்க ஆசைதான்.என் செல்லம் விட மாட்டேங்குது.யூரின் போய் முழிச்சா கூட உடனே தூங்க மாட்டா.நான் தான் தூங்க வைக்கனும்.இல்லாட்டி அழுவா.முழிச்சிருந்தா பக்கத்திலலே இருக்கனும்.ஆள் பக்கதில இல்லைனாலும் அழுவா.தனியா கொஞ்ச நேரம் தான் வேடிக்கை பார்ப்பா.பக்கத்தில உட்கார்திருந்தா,அவ கூட பேசிட்டு இருந்தா எவ்வள்வு நேரம் வேணா சும்மா இருப்பா.அம்மா இப்படியே இருந்தா கொஞ்சம் வளர்ந்ததும் உன்னை வேல செய்ய விட மாட்டா பாருன்னாங்க.இப்ப அம்மா பாத்துகறதுனால அவ கூட முழுசா இருக்க முடியுது.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

ஹாய் ஜெயலஷ்மி நீங்க என்க்கிட்டத்தான் கேட்டீங்க (என்ன கொடுமை அம்மனி இது) நான் அப்பவே அதுக்கு பதில் சொல்லிட்டேனே போய் பழைய பதிவில் பாருங்க. அப்புறம் உங்க கூட படிச்ச ப்ரண்டு நான் இல்லப்பா.

ஹாய் தனீ சாம் தூங்கறான்,உங்க பொண்ணு என்ன பன்றாங்க?
நான் பிஸி எல்லாம் இல்ல தனீ உங்களுக்கு மேலேயே பதிவு போட்டிருக்கேன் பார்க்கலையா?
ஏதோ ஒரு பதிவில் என் வீடுக்காரர் ஊருக்கு போய்யிட்டு வந்துட்டாரான்னு கேட்டிருந்தீங்க போய்ட்டு வந்தாச்சு.

ஹாய் திவ்யா எப்படி இருக்கீங்க
உங்க பொண்ணு எப்படி இருக்காங்க எவ்வளவு நாள் ஆகிறது உங்க பொண்ணுக்கு?

ஹாய் கவி.S அறுசுவையில் ரெண்டு கவி மட்டும் இல்லை அருண்கவி கவின் கவிதாகன்னன் இன்னும் நிறைய.அதனால் ஒரே குழப்பம்தான் போங்க.உங்களை மாதிரி நான் கூட எங்க அம்மாகிட்ட சண்டை போட்டிருக்கிறேன் ஏம்மா கவிதான்னு பேர் வச்சீங்கன்னு கேட்டு.பள்ளியில் ஒரே வகுப்பில் 3கவிதாக்கள்.என்னை பள்ளியில் யாருமே ஆசிரியர்கள் உட்பட கவிதான்னு கூப்பிடுவதில்லை.என் இனிஷியல்தான் என் பெயர்.இப்போது பள்ளி தோழிகள் அப்படிதான் கூப்பிடுவாங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் விஜி எப்படி இருக்கீங்க? உங்களை தான் தேடி தேடி டயர்டா ஆயிட்டேன்)-: மெக்ரோனுக்கு பதிலே இல்லை! சுகினியிலும் கேட்டுருந்தேன் பதிலே இல்லை பயங்கற பிசியா? உங்க கிட்ட இருந்து ஒரு ரிப்ளேயும் வரவில்லை நான் கேட்டதற்கு கூட நீங்க பதில் அனுப்பவில்லை பிசி நினைக்கிறேன் மறந்து விட்டீங்கள!!!! உங்க ஐ டி தப்பா இல்ல அதே தானா சொல்லுங்க

ஜலீலா நானும், கலாவும் நல்லா இருக்கோம். உங்க அன்பான விசாரிப்புக்கு மிக்க நன்றி. நோன்பில் பிஸியா இருக்கீங்களா? நோன்பெல்லாம் நல்ல படியாக முடித்து விட்டு பழையபடி வ்ந்து கலக்குங்க.

மஹா ஊரில் இருக்கும் மீதி மாதங்களையும் சந்தோஷமாக கழித்துவிட்டு வாருங்கள். இங்கு வந்த பிறகு நிறைய பேசலாம்.

விஜிமலை எப்படி இருக்கீங்க? ஏதோ ஒரு பதிவில் என்னை விசாரித்து இருந்தீங்க. மிக்க நன்றி. உங்களுக்கு சமையலில் அனுபவம் அதிகம் போல உள்ளதே (உங்கள் ப்ரொஃபைலை பார்த்து தெரிந்து கொண்டேன்) அப்ப எனக்கு நீங்க அக்காவா இல்லை தங்கையா:-)

ஹரி காயத்ரி எப்படி இருக்கீங்க. ஸாரிம்மா. நீங்க எப்பவோ என்னை கேட்டு எழுதியிருக்கீங்க. நான் அதை இப்பதான் பார்த்தேன். (அந்த த்ரெட்டை தூசி தட்டிய கவி(சிவா)க்கு நன்றி) நீங்க ஒரு முறை மேல் படிப்பு படிக்க கேட்டு இருந்த போது (அது நீங்க தானே) ஒரு பெரிய பதிவு டைப் செய்து அதை அனுப்புவதற்குள் எரேஸ் ஆகி போய் விட்டது. அது இருக்கட்டும் இப்ப நீங்க என்ன செய்றீங்க?

மேலும் சில பதிவுகள்