ஹைய்யா...ஜாலி...அரட்டை அடிக்கலாம் பாகம் 15

ஹாய் ஃப்ரென்ட்ஸ், முந்தைய பாகத்தில் பதிவுகள் 90 -ஐ தாண்டி விட்டதால் உங்கள் பதிவுகளை இதில் தொடருமாரு கேட்டுக்கொள்கிறேன்.

நீங்க இன்விசிபிள் மோடா யாஹூவில.. நான் எப்பவும் விஸிபிள் தான்... இருக்கேன் பாருங்க...

"The challenge is not to manage time, but to manage ourselves." --Steven Covey

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் இலா,
கூகுளில் ரொம்ப நேரமா நான் காத்திட்டிருக்கேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹலோ செல்விமா,

எப்படியிருக்கீங்க? நீங்க போட்ட பதிவைப் பதிவைப்பார்த்தேன். என்னால் உடனே பதில் போட முடியவில்லை. மன்னிக்கவும். இங்கு புயல் எச்சரிக்கை கொடுத்து இடத்தை evaquate செய்யச் சொல்லிவிட்டார்கள். அதனால் நேற்று தான் வீட்டுக்கு வந்தோம். பரவாயில்லை எங்கள் அபார்ட்மென்ட் எந்த வித சேதமும் அடையவில்லை. அனால் மின்சாரம் போய்விட்டது. இங்கு மின்சாரம் இல்லை என்றால் எதுவும் செய்யமுடியாது. ஏன் சமைக்கக் கூட முடியவில்லை. குளிர்சாதனப் பெட்டியில் உள்ள அனைத்துப் பொருள்களும் வீணாகிவிட்டது. இங்கு குளிர்சாதனப்பெட்டியில்லாமல் இருக்கவும் முடியாது. ஏனென்றால் பால் முதலிய பொருள்களும் வீண். அதைத்தான் எல்லோரும் பேசிக்கொண்டோம் டமிழ்நாட்டில் தினமும் 5மணி நேரம் 6 மணி நேரம் மின்சாரம் போனால் என்னசெய்வது. நேற்றுதான் இன்டர்னெட்டெ வந்தது. மின்சாரம் எதுவும் இல்லாமல் உலகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

ஹலோ இலா,

எப்படியிருக்கீங்க? நியூயார்க் படங்கள் அனைத்தும் அருமை.

ஹலோ கவி.எஸ்,

எப்படியிருக்கீங்க?

ஹலோ கவின் எப்படியிருக்கீங்க?

கவிசிவா நலமா?

ஹலோ ஹரிஹாயத்ரி நலமா?

ஹலோ ஸாதிகா ஆன்டி எப்படியிருக்கீங்க? குட்டி ஆமீர் எப்படியிருக்கான்? நோன்புக்கு purchase எல்லாம்முடிந்துவிட்டதா? நீங்கள் சென்னையில் தானே இருக்கீறீர்கள்.

ஹலோ விஜிமலை எப்படியிருக்கீங்க? நான் மணி, உங்க கூட பேசுவது முதல் முறை. உங்க பசங்கள் நலமா?

ஹலோ விஜிடிவி.எம் நலமா?
ஹலோ தனிஷா நலமா? உங்க குட்டிப்பொண்ணு எப்படியிருக்கா? குட்டி பெயர் அப்ரா தனே?

ஹலோ பிரதி எப்படியிருக்கீங்க?

ஹலோ ஜலீலாஅக்கா எப்படியிருக்கீங்க? நோன்புக்கு ரெடியா? உங்க குட்டி எப்படியிருக்கா? (பொண்ணா அல்லது பையனா எனக்கு தெரியவில்லை) நீங்கள் கூறிய உடல் எடை குறிப்பில் இரவு நேரம் தண்ணீர் அதிகம் குடிட்தால் வயிறு குறையாது என்று குறிப்பிட்டு இருந்தீர்கள் . அப்போ இரவு அதிகம் தண்ணீர் அதிகம் குடிக்கக்கூடதா?

ஹலோ தாளிகா அக்கா எப்படியிருக்கீங்க? குட்டி பெண் எப்படியிருக்கா? பெயர் என்ன?

ஹலோ மாலதி அம்மா எப்படியிருக்கீங்க? வேலை அதிகமா?

ஹலோ ஜெயந்தி மாமி எப்படியிருக்கீங்க? உங்க குடும்பத்தில் அனைவரும் நலமா?

ஹலோ ஹேமா எப்படியிருக்கீங்க? உங்ககூட பேசுவது முதல் முறை. ஆனால் நீங்க முதலி அறுசுவையில் பேசுவதை பார்த்து ர்சித்துள்ளேன். அப்பொழுது எப்படி உங்களுடன் எப்படி கலந்து கொள்வது என்று தெரியாது.

மற்றும் விடுபட்ட தோழ்கள் அனைவரும் நலமா? என் ஹஸ் என்னுடைய லேப்டாப்பிற்கு வெய்ட்டிங்.

ஒகே நாளை சந்திப்போம். ஏனென்றால் நாளை அவரும் அலுவலகம் சென்றுவிடுவார்

அன்புடன்
மணி

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

ஹாய் மணி..
இப்ப அங்க எல்லாம் கொஞ்சம் சகஜ நிலைக்கு வந்துவிட்டதா?? படங்கள் பார்த்து ரசித்தீர்களா.. உங்க குடிநீர் இப்ப எப்படி இருக்கு. இன்னமும் பாட்டிலில அடைக்கபட்டது தான் வாங்குகிறீர்களா.. குழந்தையை வைத்துக்கொண்டு எப்படி சமாளித்தீர்கள்...

தமிழ் நாட்டில எல்லாருக்கும் பழகி விட்டதாம்.. இது வழமையா இருப்பதால் அவர்கள் வேலைகளை திட்டமிட்டு முடிக்கிறார்கள் என்று அம்மா சொன்னாங்க...

இப்படி புயலுக்கு புகலிடம் ( இவாக்குவேட் ==Evacuvate என்ன தமிழ் வார்த்தை ) போன போது என்னவெல்லாம் கொண்டு சென்றீர்கள்.. இப்படி புயல் அபாயம் வரும்போது எப்படி சமாளிக்கனும்.. இப்படி கேட்பதற்க்கு மன்னிகவும்.. இது யாருக்கவது அவசர கால ( எமஜெர்ன்சி) தயாரிப்புக்கு பயன்படும் என்று நினைத்தேன்..

மீண்டும் பேசுவோம்

"The challenge is not to manage time, but to manage ourselves." --Steven Covey

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஜலீலா அக்கா தையல் class எப்போ ஆரம்பிக்க போரிங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

கவிசிவா அதுவா எல்லாம் உங்க எல்லாரு மேலயும் பாசம் தான் கவி. ஹா ஹா ஹா ச்ச அதுக்கு உங்களுக்கு விடை தெரியுமா? ரொம்ப கரெக்கிட்

அதுனால் தான் நான் இங்க வந்துட்டேன் நீங்க எல்லாரும் கூட இங்க வந்துடுங்க அப்பறம் யாராவது கோவிச்சுக்குவாங்க.

நானும் உங்க அரட்டையில் கலந்துகளாமா?

By
Subhashini madhankumar

மணிசாரா.உங்கள் விசாரிப்புகளுக்கு நன்றி. நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்?ஆமிர் நன்றாக இருக்கின்றார்.ரம்ஜான் பர்சேஸ் எல்லாம் முடிந்து விட்டது.ஆம் நான் சென்னையில் தான் இருக்கின்றேன்.
வாருங்கள் சுபாஷினி,அரட்டையில் வந்து தாராளமாக கலந்து கொள்ளுங்கள்.உங்களை அன்புடன் ஸ்னேகிதிகளின் சார்பில் வரவேற்கின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் தோ....... தோ..... தோ..... ழிகள் எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? இன்று எப்படியாவது அறுசுவையில் கலந்திட வேண்டும் என்ற முடிவோடு வந்துவிட்டேன்.....

இங்கே அரட்டையில் கலந்து கலக்கிக்கொண்டிருக்கும்... என்னையும் சுகம் விசாரித்திருக்கும் மற்றும் விசாரிக்காத அனைத்து தோழிகளுக்கும் என்னோட நன்றி.

வின்னி, கவிசிவா, ஜலீலாக்கா,புதுமுகம் ராணி,சாதிகா அக்கா, விஜிடிவிஎம், விஜிமலை... அது என்ன ஆன்மீகம் எங்கே இருக்கிறது தலைப்பு?,சைனா மஹா, ஆசியா உமர்,கவி எஸ், ஜெயலஸ்மி,தனிஷா, திவ்யா அருண்,சுவேதா, ஹரிஹாயத்ரி,தையல் றிஸ்வானா,ஹா.... ஹா.... ஹாசினி,இலா, செல்வியக்கா, மணிசாரா, சுபாஷினி....... இங்கிருப்பவர்களை அழைத்துள்ளேன்... இங்கில்லாதவர்களை எழுதவில்லை... அழைக்கிறேன்.

இன்று ஒரு கிழமை முடிந்து நான் கொஞ்சம் நோமல் நிலைமைக்கு வந்துள்ளேன், இருப்பினும் அதிகம் கதைக்க முடியாது, சாப்பிட முடியாது மெடிசினோடுதான் இருக்கிறேன். சாதாரணம் என நினைத்தேன் ஆனால் பாடாய்ப் படுத்திவிட்டது.. நான்கைந்து நாட்கள் நித்திரையே இல்லை பாடாய்ப்படுத்தி விட்டது.... அது போகட்டும் இனி நலமாகினாலே போதும். நிறைய எழுத ஆசை மெது மெதுவாக எழுதுகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்