ஹைய்யா...ஜாலி...அரட்டை அடிக்கலாம் பாகம் 15

ஹாய் ஃப்ரென்ட்ஸ், முந்தைய பாகத்தில் பதிவுகள் 90 -ஐ தாண்டி விட்டதால் உங்கள் பதிவுகளை இதில் தொடருமாரு கேட்டுக்கொள்கிறேன்.

ஹாய் ஹாய் நேரம் இல்லாததால் அறுசுவைக்கு அடிக்கடி வர முடியவில்லை.

ஜலீலா உங்க மெனுவைப் பார்த்தால் எனக்கு தலை கிர்ன்னு சுத்துது. நம்ப தான் (இந்தியர்கள்) சமையலுக்கு ரொம்ப நேரம் ஒதுக்குகிறோம்ன்னு நினைக்கிறேன்.

இது போதாதுன்னு கனவிலே ட்வார்ஃப் (சித்திரக் குள்ளர்கள்) வந்து குழிப்பணியாரம் செய்து கொடுத்தார்கள். என் பெண் சாப்பிடமாட்டேன் என்கிறாள். என் பையனும் நானும் நல்லாதான் இருக்குன்னு சாப்பிடறோம். அறுசுவையிலே ரொம்ப ஒன்றிட்டேன்னு கிண்டல் வீட்டிலே.

அதிரா தொண்டை சரியாயிடுச்சா. சீக்கிரம் நலம்பெற வாழ்த்துக்கள்.

ஜானகி எப்படி இருக்கு மணவாழ்க்கை. சென்னைக்கு வந்தப்புறம்தானே என்கிறீர்களா? சீக்கிரம் சென்னைக்கு வந்து சம்சார சாகரத்தில் சந்தோஷமாக நீந்த வாழ்த்துக்கள்.

சாதிகா - உங்க வீட்டிலே எப்படி? ஜலீலா மாதிரிதானா. உங்க மெனுவையெல்லாம் கேட்டாலே எனக்கு வயிறு ரொம்பிடுது. அமீர் வேலை செய்ய விடுகிறாரா. நோன்பு வேறு, பேரன் பின்னாடி ஓட்டம் வேறு. ஸ்லிம் ப்யூட்டி ஆகிடப்போறீங்க. ஷாப்பிங் முடிஞ்சாச்சா?

இலா தேடித் தேடி சமைத்து பின்னூட்டம் கொடுக்கிறீங்க. கணவரின் பாராட்டு மழையில் நனைய வாழ்த்துக்கள்.

மணிசாரா உங்க அனுபவங்களைப் படிக்கும்போது கஷ்டமாக இருக்கு. திரும்ப வீடு வந்தாச்சா. சென்னையில் பரவாயில்லை. இப்பொழுது எங்களுக்கு காலையில் 1 மணி நேரம்தான் மின்சாரம் கட் செய்கிறார்கள். இன்று கூட மாளய தர்ப்பணத்திற்கு என் மைத்துனர்களைச் சேர்த்து 8 பேருக்கு சாப்பாடு செய்ய் வேண்டி இருந்தது. காலையில் 4 மணிக்கு எழுந்து முதலில் அரைக்க வேண்டியவற்றை அரைத்து வைத்துக் கொண்டேன். 630 முதல் 730 வரை கட். அறிவித்துவிட்டு பவர்கட் செய்தால் பரவாயில்லை. அதற்கேற்றார்போல் தயார் செய்துகொள்ளலாம். எங்கள் கஷ்டத்தை விட உங்களதுதான் அதிகம். இதுபோல் கஷ்டம் உங்களுக்கு இனி வராமல் இருக்க ப்ரார்த்திக்கிறேன்.

ஸ்வேதா சென்னையில் நல்ல வெஜ் ரெஸ்டாரன்ட்னா எனக்குத் தெரிந்து சரவண பவன் தான். முருகன் இட்லிக்கடையில் நல்லா இருக்குங்கறாங்க. டிபன் நல்லாஇருக்கு. ஆனா சைட் டிஷ் எல்லாம் சுமார்தான். இப்ப கோயம்புத்தூர், ஊட்டி போய்வந்தோம். ஹோட்டல்களில் சுமார்தான் சாப்பாடு.
உங்களைப்போல் என் பெண்ணும் அவல் பிரியை. அவலை ஊறவைத்து தாளித்தால் போதும். தேங்காய் கூட போட வேண்டாம். அவளே செய்து கொண்டும் விடுவாள். வெல்ல அவல் செய்திருக்கிறீர்களா? எனக்கு ரொம்ப பிடிக்கும் வெல்ல அவல் கேசரி.

கவிஸ், ஹரி காயத்திரி, ஹா ஹா ஹாசினி, விஜிமலை, மொழி, ரூபி (கனவு காணும் கன்னிகள் 2 பேர்), செல்வி, பிரதீபாலா, ஹேமா, தேவா, மர்ழி, சசி, ராணி, தமிழ், ஜெயலெட்சுமி,தளிகா (ரீமாக்குட்டி எப்படி இருக்கா?), மஹா(யுவன் எப்படி இருக்கான்?) , மாலதி, தனிஷா (அஃப்ரீனா எப்படி இருக்கா?), வின்னி, விஜிஸ், சரஸ்வதி, மனோகரி, மனோ, ரமணிஸ், கதீஜா, ரசியா,ரஜினி, விமலா கந்தசாமி, மேனகா (டெலிவரி எப்போ), சந்தோ, திவ்யா அருண், அறுசுவையை எட்டிப்பார்க்காத சாரதா (குட்டிக்குழந்தைகளுக்கு நிறைய கதை வைத்திருக்கிறேன், நேரம்தான் போதவில்லை. இந்தப் பதிவை 11 மணியிலிருந்து தயார் செய்து கொண்டிருக்கேன். இப்ப மணி ஒன்றரை. வயிறு பசிக்குது. இன்று ஒருபொழுது வேறு. சாப்பிடப் போகிறேன்.)
யாருடைய பெயராவது விட்டுப்போயிருந்தால் அவர்களுக்கும் ஒரு பெரிரிரிரிரிரிரிரிரிரிய ஹாய்
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஆஹா,ஜெயந்திமாமி,வாருங்கள்.தலைப்பை சமீபத்திய கருத்துக்களில் பார்த்ததுமே அட மாமி என்று நினைத்து கிளிக் செய்தால் மாமியேதான்.நலமா?வீட்டில் அனைவரும் நலமா?அறுசுவை பக்கமும் ,என் வீட்டு பக்கமும் ஆளையே காணோமே? ஸ்லிம்பியூட்டி...நேரில் வந்து பாருங்கள்.இருந்தாலும் உங்கலை கற்பனை பண்ணி பார்க்கும் பொழுது சற்று பொறாமையாக இருக்கின்றது மாமி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

எல்லாரும் எங்கேப்பா போயிட்டீங்க?
தளிகா நலமா?ரீமா குட்டி எப்படி இருக்கறா?ஜலீலாக்கா ஷாதிகா மேடம் சொல்லுவது போல மொட்டை போடறதுதான் நல்லது.நல்லா அடர்த்தியா வளரும்
தனிஷா எப்படி இருக்கீங்க?அஃப்ரா நலமா?உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
ஷாதிகா மேடம் நோன்பு பெரு நாள் ஷாப்பிங் எல்லாம் முடிச்சாச்சா?
ஜெ மாமி நலமா?வீட்டில் திருஷ்டி படம் மாட்டியாச்சா?:)).அய்யோ அடிக்காதீங்க!
ஹரி காயத்ரி நலமா?
ஹேமா என்ன வேலை அதிகமா?(ஆனாலும் லொள்ளு மட்டும் குறையவே இல்லை.தேவாவின் ஸ்பெஷல் கிஃப்ட் பத்தின உங்கள் பதிவை பார்த்து இப்போ என் மண்டையும் காயுது!)
ஜெயா எங்கே போயிட்டீங்க?
ஜலீலாக்கா எப்படி இருக்கீங்க?ரொம்ப பிசியா?
செல்விம்மா எப்படி இருக்கீங்க?ஆளையே காணோம்.
வின்னி நலமா?பேசி ரொம்ப நாளாச்சு.
அப்புறம் பெயர் விட்டு போன எல்லா தோழிகளும் எப்படி இருக்கீங்க?எல்லாருக்கும் ஹாய் ஹாய் ஹாய்(விவேக் மாதிரி படிக்கணும் சரியா)
எல்லாரும் எப்படிப்பா இப்படி பெரிய பதிவா போடறீங்க.ரொம்ப பொறுமை வேணும்.இதுக்கு மேல என்னால முடியல

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கவி நான் இங்கே தான் இருக்கேன்.

நலமா. வீட்டில் அனைவரும் நலமா? என் மகள் பெயர் அப்ரினா இல்லை. அப்ரா.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நல்ல வேளை அப்ரா பெரியவளாகி என் பெயரை இப்படி மாத்திட்டீங்களேன்னு கேக்கறதுக்கு முன்னாடி திருத்திக்கிட்டேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மாமி ரொம்ப நாளைக்கு அப்புறம் ஆன்லைன்ல இருக்கீங்க போல. வேலை எப்படி போயிட்ருக்கு.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

என்ன இலா டீ ஊத்தவோ எனக் கேட்டிட்டு ஓடிட்டீங்க, நான் எவ்வளவு நேரம் தான் காத்திருப்பது? இன்னுமா ஊத்திமுடியல்ல/தெரியாதோ?

சுபாஷினி, வாங்கோ வாங்கோ உங்கள் கதைகளையும் சொல்லுங்கோ.

சுவேதா எப்படி இருக்கிறீங்க? நீங்க சொன்னதுபோல் தான் அநேகம் பேர் சொன்னார்கள் 2/3 நாளில் எல்லாம் சரியாகிவிடும் என்று என் கஸ்ப... கூட அப்படித்தான் கூறிவிட்டார், ஆனால் சிகிச்சையின் பின்னர்தானே தெரிந்தது வேதனை. என்னைப்பொறுத்து இப்படி வேதனை என முன்னமே தெரிந்திருந்தால் ஓம்பட்டிருக்கமாட்டேன். இரண்டு மூன்று இரவு நான் போட்ட சத்தத்தில் அப்பா, அம்மா ஓடித்திரிந்தார்கள் அப்படி வேதனை, பகலில் குறைவு, இரவில் அதிகம் காய்ந்து விடுவதால் வலி அதிகம். இன்று 10 நாளாகிவிட்டது, நேற்று வரை ஒழுங்காக சாப்பிடவில்லை, 2 இடியப்பம் சாப்பிட 1/2 மணித்தியாலம் எடுக்கிறது, கொஞ்சம் கதைத்தாலே வலி அதிகமாகிறது. இருப்பினும் இப்ப எவ்வளவோ மேல்.

றிஸ்வானா உண்மைதான் இப்போ காலநிலையும் மாறுகிறது தானே இனி வருத்தங்கள் வரத் தொடங்கிவிடும்.
நன்றி ஹாசினி எல்லோரும் நலம்.
கவிசிவா ஏதோ ரூர் என்று காதில் விழுந்தது அதுதான் , அதிராக்குத்தான் வருத்தமாயிறே விட்டுவிட்டுப்போவோம் என நினைப்பீர்கள் என்று வலியையும் பொறுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.
ஜெயலஸ்மி உங்களைப்பற்றி எதுவும் தெரியாது இனித்தான் அறிந்துகொள்ளப்போகிறேன்.
ஹரிஹாயத்ரி.... றெஸ்ட் எடுத்தே போரடித்துவிட்டது. பிள்ளைகள் இருவரும் பாடசாலை போகிறார்கள். சின்னவர் புதிதாகப் போகிறார். அதனால் தான் கொஞ்சம் கஸ்டம், மத்தியானம் சாப்பாடு கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வரவேண்டியதாக உள்ளது. கட்டித்தரவும் வேண்டாமாம், ஸ்கூலில் நல்ல நல்ல உணவுகள் புவே மாதிரி சுடச் சுடக் கேட்டதைக் கொடுப்பார்கள் அதுவும் வேண்டாமாம் அம்மா வந்து காருக்குள் வைத்து தரட்டாம் அதுதான் தினமும் ஓடவேண்டி உள்ளது. பழகினால் சரியாகிவிடும்.

ஜானகி இந்த ஆபரேஷன் செய்தால் உடனேயே சாப்பிட வேண்டும். தண்ணி ஆகாரம் எடுத்தால் சீக்கிரம் மாறாதாம். வாய் முட்ட உணவை எடுத்து அப்படியே மிண்டி விழுங்க வேண்டுமாம் அப்பத்தான் நல்லதாம். ஆனால் நான் ஓரளவு தண்ணித்தன்மையாகத்தான் சாப்பிடுகிறேன். ஒரே ஒரு குறை எனக்கு உறைப்பு வேண்டும், ஆனால் இதுவரை பால் கறியோடுதான் சாப்பிட வேண்டியுள்ளது.

ஜெயந்திமாமி படுத்து றெஸ்ட் எடுக்கிறபோது, உங்களுக்கு மெயில் அனுப்பவேண்டும் என பலமுறை நினைத்தேன் முடியவில்லை.

சரி சரி நான் வந்தால் நீங்கள் எல்லோரும் போய் விடுகிறீங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா வலி குறைந்து பழைய நிலை வர எப்படியும் 1 மாதம் ஆகும். என் அண்ணனுக்கு இந்த ஆபரேஷன் செய்தார்கள். அவர் ந்ல்ல வர 1 மாதம் ஆகியது. உங்க உடம்பை நல்ல கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் இரட்டையர்களை பெற்றோர்கள் பார்த்துக்கொள்ளட்டும்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் அதிரா எப்படி இருக்கீங்க? என்னுடைய எக்ஸ்பீரியன்ஸ் எனக்கு ஆபரேஷன் பண்ணி அடுத்த நாளில் இருந்து லைட்ட இட்லி தோசை ரசம் சாதம் எல்லாம் சாப்பிட ஆரம்பித்துவிட்டேன் தொண்டையில் யாரோ கடப்பாரை வைத்து குத்துற மாதிரி இருக்கும் என் அம்மா கூட சண்டை எல்லாம் போட்டேன்;-) எங்க அம்மா பொருமையா பேசி பேசியே ஊட்டி விடுவாங்க!!!!!! இப்போ நினைத்தாலும் சிரிப்பா இருக்கு 3 வது நாள் நான் நார்மலுக்கு வந்து விட்டேன் காரம் மட்டும் 1 வாரத்திற்க்கு சாப்பிடவேண்டாம் சாப்டா சாப்பிட்டால் பிரச்சனை இருக்காது

மேலும் சில பதிவுகள்