ஹைய்யா...ஜாலி...அரட்டை அடிக்கலாம் பாகம் 15

ஹாய் ஃப்ரென்ட்ஸ், முந்தைய பாகத்தில் பதிவுகள் 90 -ஐ தாண்டி விட்டதால் உங்கள் பதிவுகளை இதில் தொடருமாரு கேட்டுக்கொள்கிறேன்.

அதிரா!!! நேத்து ஊத்திய ரீக்கு இன்னைக்கி சொல்லறீங்க... வாய் பேச முடியலைன்னா.. இங்க எங்க கூட சாட் பண்ண வாங்க!!!

"People often say that motivation doesn't last. Well, neither does bathing - that's why we recommend it daily " - Zig Ziglar

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் ஜெயந்தி ஆண்டி எப்படி இருக்கீங்க? நாங்க எப்பவுமே சென்னை வந்தால் சரவணா பவனுக்கு தான் போவோம்?? இப்போ அந்த டேஸ்டும் போரடித்துவிட்டது!!! அதான் ஒரு சேஞ்சுக்கு வேற ஹோட்டல் கேட்டேன் நீங்க என்று எல்லாம் சொல்லாதீங்க நீன்னு சொன்னாலே போதும் அது என்ன வெல்ல அவல் கேசரி இது வரை கேள்விபட்டதேயில்லை நீங்க கண்டிப்பாக ரெசிப்பி கொடுங்க உடனே செய்கிறேன் தேங்ஸ் (மாமி) இல்லை ஆண்டி.

ஐயையோ....
என்ன தனிஷா உங்கள் கதையைக் கேட்க எனக்கு மயக்கம் வரும்போல இருக்கே, ஆனால் ஒருவேளை எனக்கும் அப்படித்தான் நாள் இழுக்கப் போகுதே தெரியவில்லை. சுவேதா உங்களுக்குமா? ஆனால் 3 நாளில் குணமாகிவிட்டதா? சிலர் அப்படித்தான் சொன்னார்கள் ஆனால் நான் நினைக்கிறேன் ஒவ்வொருவரின் ரொன்சிலின் அளவைப் பொறுத்தும் உடல் நிலைமையைப் பொறுத்தும் இப்படி மாறுபடுகிறதோ என்னவோ. ஆனால் எனக்கு 2 சிசேரியனிலும் நான் எந்த வேதனையும் படவில்லை, எதுவுமே இல்லாதமாதிரி நோமலாக இருந்தேன், ஆனால் இப்போதுதான் அதிக வலியாக இருக்கிறது.

இலா.... டீ றெடியா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் காயத்ரி நீங்க மீனம்பாக்கத்திலயா இருக்கீங்க ,நாங்க டிசம்பரில் ஊருக்கு வருகிறோம்,அப்ப மீனம்பாக்கம் பக்கத்தில்தான் வந்து 2 நாட்கள் தங்கப்போறோம்.

ஹாய் கவி, நலமா? ஓ இந்தியா வர்றீங்களா? டிசம்பர் எப்போ? நிச்சயம் வாங்க வீட்டுக்கு.

ஹ்ஹாய் கவி, இந்தியா வரும்போது எங்க வீட்டுக்கும் வங்க. உஙகலை நேரில் பார்கனும் ஓகே.ஹரி நிஙகளும் வாங்க.

ஹாய் ஹரிகாயத்ரி,

பக்கத்தில் இருக்க எங்களை கூப்பிட மாட்டிஙகளோ?, .

?

என்னை விசாரித்த தோழிகளுக்கு நன்றி சொல்லி கான்டினூடி (இலா இதுக்கு ஒரு தமிழ் வார்த்தை வேணும்) மிஸ் பண்ணிடக்கூடாதுன்னு இந்த ரொம்பி வழியும் த்ரெட்டிலே பதிவு செய்கிறேன். (அட்மின், "ஆமா இவுக ஒரு மெகா சீரியலை எடுக்கறாங்க, அதுக்கு கன்டினூட்டி போயிடுமாமில்லைன்னு " முணு முணுப்பது காதில் விழுகிறது:-)

ஆமா கவி(சிவா) பேசி ரொம்ப நாள்தான் ஆகுது. நீங்க, காயத்ரி எல்லாம் ரொம்ப தீவிரமா புதிர்களை ஸால்வ் செய்துக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு வந்து விட்டேன். (எனக்கும் புதிருக்கும் ரொம்ப தூரம் :-)

அதிரா மறுபடியும் பழையபடி கதைக்க ஆரம்பித்து விட்டீர்கள் போலுள்ளது. டாக்டர்ஸ் எல்லாம் அப்படித்தான் ஒன்றுமேயில்லை என்று சொல்வார்கள். என் பெண்ணிற்கு வேறு ஒரு சர்ஜரி பற்றி விசாரிக்கும்போது இது டான்ஸில் அளவு மோசம் இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் டான்சிலுக்காக போனல் இப்படி உண்மையை சொல்வார்களா என்பது சந்தேகமே. இப்போது உங்களுக்கு பரவாயில்லையா?

ஜெ.மாமி எப்படி இருக்கீங்க? உங்க சென்னை கெட்-டுகெதருக்கு (இலா தமிழ் வார்த்தை ப்ளீஸ்) எவ்வளவு ரெஸ்பான்ஸ் வருதுன்னு பார்க்கலாம். எனக்கு இப்பவே பொறாமையா இருக்கு:-)

வின்னி அக்கா!!!
இந்த பதிவை இப்போ தான் பார்த்தேன்.. எனக்கு பரிட்சை வச்ச மாதிரி இருக்கு... இருங்க கொஞ்சம் மூளையை கசக்கி யோசிக்கிறேன்...

"உங்களுள் போதிய தெளிவைக் கொண்டுவந்துவிட்டால், வாழ்க்கையைக் குழப்பம்இல்லாது பார்க்க முடிய�

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

கெட்- டுகெதர் : கூடிக்களி? சை நல்லாவே இல்ல பேரு. வெசேவெ என்று வைக்கலாம் - வெட்டியாளர்கள் (நாம தான்) சேர்ந்து வெட்டுவது (சாப்பாட்டை தான்..)

கண்டின்யூடி: கோர்வை? தொடர்ச்சினு கூட சொல்லலாமோ?

2 வார்த்தை சொல்லிருக்கேனே தங்க காசு உண்டா? ;-)

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

இப்படியெல்லாம் தமிழ் வார்த்தை சொன்னா.. மற்ற சகோதரிகளும் உங்கள வெட்ட நீயா நானான்னு நிப்பாங்க...உங்கள வெட்டவும் ஆட்டோ அனுப்புவாங்க...

இவ்வளவு கஷ்டபட்டு மூளையை கசக்கியதற்க்கு.. 2 அருசுவை டாலர்... இந்தாங்கோ!!!! பிடிங்க!!!

"உங்களுள் போதிய தெளிவைக் கொண்டுவந்துவிட்டால், வாழ்க்கையைக் குழப்பம்இல்லாது பார்க்க முடிய�

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்