அன்பு தோழிகளே

நீண்ட நாட்களுக்கு பிறகு வருகிறேன்,உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா தெரியவில்லை.நான் 6 வாரம் கர்ப்பமாக இருக்கிறேன்,நாங்கள் தனியாக இருக்கிறோம்,இப்போது அடிக்கடி பசி தாங்க முடியவில்லை,எதெல்லாம் சாப்பிடலாம்,எப்படி உடம்பை பார்த்துக்கொள்வது,உலர்ந்த திராட்சை அதிகம் சாப்பிடலாமா?

ஹாய் தீபு,
தாயாக போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.அதிகமா பசி எடுப்பது இயல்பானதுதான். கொழுப்பு,எண்ணெய் தவிர்த்து சத்தான ஆகாரம் சாப்பிடுங்கள்.சூடான உணவுகள் சாப்பிட வேண்டாம்.பப்பாளி,அன்னாசி, போன்றவை மிகவும் சூடு.அதை உண்ணக் கூடாது.பால் நிறைய குடிங்க.மருத்துவரை பாத்துடீங்களா? ஃபோலிக் ஆசிட் மாத்திரை குடுத்தாங்களா? ஃபோலிக் ஆசிட் கருவின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.கண்டிப்பா ஃபோலிக் ஆசிட் எடுத்துகுங்க. பழங்கள்,காய்கறிகள்,மீன் அதிகமா சேர்த்துகுங்க.கோழி சாப்பிட வேண்டாம்.கீரை,நட்ஸ்,முளை கட்டிய பயிறு எல்லமே நல்லது தான்.கர்பினிகளுக்கான உணவு பற்றி வேற திரெட்ல நிறைய சொல்லியிருக்காங்க.படித்து பாருங்க.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

ஹாய் திபு நலமா?போனிலேயே விஸ் பன்னிட்டேன் இருந்தாலும் இதிலும் பன்னறேன் தாயாக போகும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.என்ன சாப்பிடறதுனு நம்ம திவ்யா சொல்லியிருக்காங்க பாருங்க.முடியும் பொழுது சமைத்து வைத்து கொள்ளுங்கள்.நல்லா ரெஸ்ட் எடுங்க.உடம்ப பாத்துக்கங்க.முடியும் பொழுது போன் பன்னறேன்.
அன்புடன் பிரதீபா

முதலில் தாயாகப் போகும் வாழ்த்துக்கள் திபு.
நீங்கள் வீட்டில் சிறிய ஆரஞ்சு பழங்கள் (அட நம்ம ஊரு கமலா ஆரஞ்சு தாங்க) வாங்கி வச்சு சாப்பிடலாம் - helps to avoid vomiting & komatal.Dried prunes,digestive biscuits என்று கிடைக்கும்.அது மிகவும் நல்லது.மக்கா சோளம் வாங்கி வேக வைத்து (cookerla உப்பு போட்டு ரெண்டு விசில் ), பயிரு முளை விட வைத்து சாப்பிடலாம்.அப்புரம் இருக்கவே இருக்கு apples,water melon.பால்,தயிர் ரொம்ப முக்கியம்.Fish.Nuts ,dates ( if u feel iron tables give u constipation).
சாப்பிடுங்க.புதினா துவையல் வாரத்திற்கு ஒரு முறையாவது சேர்த்துக்கோங்க...அதுவும் இரும்பு சத்து நிறைந்தது.

http://www.arusuvai.com/tamil/forum/no/1816 - இந்த லின்கில் இன்னும் நிறைய டிப்ஸ் இருக்கு

ரொம்ப ரொம்ப முக்கியம் சந்தோசமா இருங்க...

ALL THE BEST.HAPPY PREGNANCY.

நன்றி திவ்யா,தீபா,RSMV
டாக்டரிடம் சென்றேன் folic acid tablets கொடுத்திருக்கிறார்கள்.கூரியது போல சாப்பிடுகிறேன்,நீங்கள் கூரியது போலவும் சாப்பிடுகிறேன்.

நல்லபடியா உடம்பை பார்த்துக்கோங்க.. கட்டாயமா ஆல்மண்ட்ஸ் ஒரு 5ஆவது ஒரு நாளைக்கு சாப்பிடுங்க... ரொம்ப கான்ஸ்டிபேஷனா இருந்தா.. ரோஜா இதழில் செய்த குல்கந் அங்க விக்கும் வாங்கி டெயிலி ஒரு ஸ்பூன் சாப்பிட்டா போதும்...
முடிஞ்சா ப்ரெஷ் இல்லன்ன கடையில் வாங்கிய ஆரஞ்சு ஜூஸ் குடிங்க பிள்ளை நல்லா கலரா பிறக்கும்ன்னு சொல்லுறாங்க... பிடிச்சதை நல்லா சாப்பிடுங்க...
மனசுக்கு இதமா நல்லா பாடல்களெல்லாம் கேளுங்க... வாழ்த்துக்கள்

"People often say that motivation doesn't last. Well, neither does bathing - that's why we recommend it daily " - Zig Ziglar

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வாழ்த்துக்கள், எப்படி இருக்கிங்க. உடம்பு எப்படி இருக்கு. நல்லா தூங்குகங்க. தினமும் ஒரு பேரீச்சம்பழம், குங்குமப்பூவை பாலில் சேர்த்து இரவில் குடிக்கவும். உணவில் காரம் புளிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டாம்.ஆசை பட்டதை நிறவேதிக்கங்க, குறை வைக்கதிங்க.

By
Subhashini madhankumar

நான் நன்றாக இருக்கிறேன்,நீங்கள் சொன்ன குறிப்புகளுக்கு நன்றி,என்ன புளிப்பு ,காரம் இல்லாம இறங்க மாட்டேங்குது.

உப்பு, புளி, காரமா வேணுமா? அப்படியே ஒரு ப்ளைட் புடிச்சு சென்னை வந்துடுங்க. உங்களுக்கு புடிச்சதை எல்லாம் இப்பவே ஒரு கட்டு கட்டிடுங்க (அளவோட). அப்புறம் இரவில் நேரம் கழித்து சாப்பிடாதீங்க. நல்லா தூங்குங்க. சந்தோஷமா இருங்க.
அன்புடன்
ஜெயந்தி மாமி

சரி மாமி பேசாம வந்திடவேன்டியதுதான்,நன்றி மாமி

மேலும் சில பதிவுகள்