தாய்ப்பால் பற்றி

ஹாய்,
குழந்தைக்கு எத்தனை மாதங்கள் பால் கொடுக்கலாம்? சில பேர் 6 மாதங்கள் கொடுத்தால் போதும் அதற்கு மேல் திட உணவிலேயே அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும் என்கிறார்க
ள். அதனால் தோழிகளே இது பற்றி தங்கள் கருத்துகளை இங்கு வந்து கூறுங்கள்?

அன்புடன்
மணி

மிகவும் தவறான கருத்து. 1 வருடம் வரை கொடுக்கலாம்.
இலவச ஆலோசனை/அறிவுரை 1000 கிடைக்கும்.
மற்றவர்கள் சொல்வதை தயவு செய்து கேட்காதீர்கள் குழந்தை விசயத்தில். மருத்துவரை மட்டும் நம்புங்கள்.

எப்படி இருக்கீங்க. குழந்தைக்கு தாய்பால் கொடுப்பதை பற்றி கேட்டு இருக்கீங்க எனக்கு தெரிந்தது குழந்தைக்கு 1.6 வரைக்கும் கொடுக்கலாம்.குழந்தை பிறந்து 4 மாதம் வரை தண்ணீர் கூட கொடுக்கத்தேவையில்லை.தாய்பாலிலே எல்லா சத்தும் இருக்கு என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். தாய்பாலைவிட வேறு எந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவு இல்லை என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.அப்படி இருக்கும் போது எதற்க்காக குழந்தைக்கு தாய்பால் கொடுப்பதை நிறுத்தனும். தாய்ப்பால் கொடுக்காத குழந்தைகளைவிடவும் தாய்பால் கொடுத்த குழந்தைகள் தான் நல்ல ஆக்டிவாக இருக்கிறார்கள். நோய் எதிப்பு சக்தியும் அதிகம் இருக்கும்.சில பேர் பால் வரலைன்னும்,இன்னும் அழகு கெட்டுடும்னும் தேவையில்லாத காரணம் சொல்லி கொடுக்காமல் புட்டிபால் பிறந்த 2வது நாளே கொடுப்பதை பார்த்து இருக்கிறேன் ஓங்கி அறையலாம்போல இருக்கும் அப்படி செய்பவர்களை பார்த்தால்.தாய்ப்பால் கொடுக்காதவர்களுக்குதான் அதிகமாக மார்பகப்புற்று நோய்வருவதாக ஒரு நியூஸ் கேள்விபட்டேன். நம் குழந்தைக்கு நம்மால் கொடுக்கமுடியும் தாய்பால் சுரக்கும் என்ற நம்பிக்கைதான் ஒரு தாய்க்கு தாய்பால் சுரக்கும் அருமருந்து என்று எனக்கு டாக்டரே சொன்னாங்க.நீங்க மற்றவர்கள் சொல்வதை கேட்க்காமல் உங்களால் கொடுக்க முடிந்த அளவுக்கு கொடுங்கள். நமக்கு அது வரும் அளவு நாட்கள் ஆனால் குறையும் அப்ப கூட ஒரு சங்கு அளவு கொடுத்தால் கூட அதுக்கு அதன் சக்தி கிடைக்கும் என்று கேள்விபட்டு இருக்கிறேன்.

அன்புடன் கதீஜா.

ஹலோ கதிஜா, கவின்,

ஹதிஜா எப்படியிருக்கீங்க? உங்க குட்டிப்பையன் (பையன் தான் என்று நினைக்கிறேன் சரியா?) என்ன செய்கிறான்? உங்க குறிப்புகளை படித்துப் பார்த்துள்ளேன். இன்னொரு பதிவில் தாய்ப்பால் அதிகமாக இருக்கா மிளகு ஆலனம் சாப்பிட்டால் பால் அதிகமாக இருக்கும் என்று கூறியிருந்தீர்கள் அது செய்வது எப்படி? என்று கூறுங்கள்.

ஹலோ கவின்,
மிகவும் நன்றிங்க கவிதா. நான் ஹுஸ்டனில் இருக்கிறேன், நீங்க எங்கு இருக்கீங்க?
எப்படியிருக்கீங்க? ஆமாங்க தாய்ப்பால் பற்றி கேட்டால் ஆயிரம் அறிவுரைகள் கிடைக்கும். இருந்தாலும் என்னை சிலபேர் குழப்பிவிட்டார்கள். அதனால் தான் கேட்டேன். தப்பிருந்தால் மன்னித்துக் கொள்ளவும். நம்மைப்போல் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு அறுசுவை ஒரு வரப்பிரசாதம். எந்த சந்தேகத்தை கேட்டாலும் உடனே பதில் கொடுத்து நம் சந்தேகத்தை தீர்த்துவிடுவார்கள்.

அன்புடன்,
மணி.

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

மணி கதிஜா சொல்வது போல் மிளகு ஆனம் ( குழம்பு) மிளகு சூப், சிக்கன் சூப் குடித்தால் தாய் பால் அதிகரிக்கும், பொடி மீன் காரபொடி சூப். கூட் சாப்பிடலாம்.
ஆனால் ஒவ்வொரு முறை பால் கொடுக்கும் போதும் ஏதாவது ஒரு பானம் சூடாக குடித்து விடு கொடுக்கனும்(பால், ஹார்லிக்ஸ், சுப், அல்லது வெண்ணீராவது ஏதாவது ஒன்று,குடித்து விட்டு கொடுக்கனும்

ஜலீலா

Jaleelakamal

hi mam,
i have a question, why we have to drink something before breast feeding? now i'm 24weeks pregnant, that's what i'm asking. thanks

மணி..என்னங்க ..எதுக்கு மன்னிக்கனும்? நீங்க எதுவும் தப்பா சொல்லலையே? அப்படியே சொல்லியிருந்தாலும் 'மன்னிப்பு' ங்கற பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்கபா. நானும் உங்களை போல் தானே?

நான் சொல்ல வந்தது..1000 அறிவுரை கிடைக்கும்..ஆனால் அதை கேட்காமல் மருத்துவரின் அறிவுரையை மட்டும் கேளுங்கள் என்று...

விஸ்கான்சின் மாகாணத்தில் சிக்காகோ க்கு அருகில் உள்ளேன். என் உறவினர் ஒருவர் டேலஸ் ல் இருக்கிறார்.

நான் நல்லா இருக்கிறேன். சரிதான் எனக்கு பையன் தான் என் பையனும் நல்லா இருக்கிறான்.உங்களுக்கு என்ன குழந்தை தெரிந்துக்கொள்ளலாமா.மிளகு ஆணம் என்பது மீனில் செய்வது.ஜலீலா அக்கா சொன்னதுபோல பொடி மீன் சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்கும்.நான் வேற த்ரெட்ல கொடுத்து இருப்பேன் தாய்ப்பால் சுரக்கன்னு இப்ப அதை தேடி லின்ங் அனுப்ப நேரமில்லை.பையனுக்கு சாப்பாடு ஊடிட்டே டைப்பிங் ஒத்தக்கையால.அவனுக்கு ஊட்டி முடிக்க 1 மணி நேரம் ஆகும்.முடிந்தால் நீங்க அந்த லின்ங் போய் பாருங்க இல்லைன்னா நான் பின்னாடி அனுப்புறேன்.இது மீன் மிளகு ஆணம் லின்ங் போய் பாருங்க. http://www.arusuvai.com/tamil/node/3950

அன்புடன் கதீஜா.

ஹெலோ மணி முற்றிலும் தவறான கருத்து.
தாய்ப்பாலில் சத்து இருக்கோ இல்லையோ எதிர்ப்பு ஷக்தி என்ற ஒரு காரணத்துக்காக 2 வயது வரை கொடுக்கலாம்..ஆனால் இரண்டு வயது முடிந்தால் நிறுத்துவது கொஞ்சம் சிரமம் என்பதால் குறைந்தபட்சம் 1 வயது வரை கொடுத்து 1.5 வயதுக்குள் நிறுத்தலாம்.
தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய கொஞ்ச நாட்களிலேயே குழந்தைக்கு சளி,காய்ச்சல் அது இதுன்னு எதுவாவது அடிக்கடி வருவதை காணலாம்..அது வந்தால் ரொம்பவும் குற்றௌணர்வால் துவண்டு போவோம்.
ஒரு 1 வயதாவது ஆகும்வரை குழந்தைக்கு எது வந்தாலும் ரொம்ப கஷ்டம் தான்.அதனால் டாக்டர் வீட்டு விசிட்டை தவிர்க்கவேண்டியே மணி நீங்க கண்டிப்பா 1.5 வயது வரை கொடுக்கலாம்.
சூடாக தண்ணீர் குடிப்பது சுலபமாக பால் சுரக்க என கேள்விபட்டிருக்கிறேன்..நிறைய அளவு தண்ணீரும் குடிக்கலாம்...நெய்யில் பூண்டை வதக்கி சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிடலாம்..மதர் ஹார்லிக்ஸ் குடிக்கலாம்..பால் கருவாடு கிடைக்கும் அதை வறுத்துவதக்கி சாப்பிடலாம் சுவையும்.
நல்லா இருக்கும் தாய்ப்பால் சுரக்க அருமருந்து..இன்னுமொன்று திட உணவு கொடுப்பதால் தாய்ப்பாலை அதிக நேர இடைவெளி விட்டு குடிக்கும் அதனாலும் குறையும்...அடிக்கடி கொடுத்தால் குறையாது
ஒரே ஒரு டிஸட்வான்டேஜ் அது ஒரு பெரிய தலைவலி என்னவென்றால் தாய்ப்பால் கொடுத்து உறங்கும் பெரும்பாலான குழந்தைகள் இரவில் பால் குடித்தாலே தூங்குவேன் என்று இருக்கும்..அதனால் நமக்கும் தூக்கம் போச்சு

ஹலோ தளிகா.உங்கள் மீது சாந்தியும்,சமதானமும் உண்டாவதாக...நலமா?ரீமா நலமா?நோன்பு எப்படி போய்க் கொன்டுள்ளது?

arusuvai is a wonderful website

உங்கள் மீதும் நிலவட்டும்.. முதல்ல உங்களுக்கு ஒரு சாரி சொல்லிகிறேன்..இவ்ளோ நாள் பேசாம இருந்ததற்கு கூடவே நைசா எல்லோருக்கும் ஒரு சாரி.
ஊர்லிருந்து பலரையும் கூப்பிட்டு பேசனுமென்று நினைத்தேன் ஆனால் அதில் சிலருடன் தான் பேச முடிந்தது.இப்போ தான் ஊர் வந்து சேந்தேன்.என்னுடன் யார் யார் கோபமாக இருப்பார்களோ என்னவோ என் நிலமை எனக்கு மட்டுமே புரியும்.
கரெக்டா நோன்பில் வந்து இங்க சேர்ந்ததால் வழக்கம் போல பென்ட் நிமிரும் வேலை +என் மகள் கூட்டமாக இருந்து பழகி இப்போ தனியாக வந்ததால் அவளுக்கு ரொம்ப வருத்தம் அப்பப்ப மேல பார்த்து அழுகிராள் அடம் பிடிக்கிறாள்..இதெல்லாம் சமாளிச்சுட்டே இருந்தேன்னா பைத்தியம் புடிச்சுடும் அதான் தினம் 30 நிமிடம் அருசுவைக்கு வருவேன் அப்போ உங்களுடன் பேசனும் என்று வருவேன் ஆனால் வேறெதாவது பதிவு போட வேண்டிவந்து நேரம் முடிந்து போய் விடுவேன்.
ஆனால் என்னை மறக்காமல் விசாரித்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா ஒரு மாதிரி குற்ற உணர்வா இருக்கு.இப்போ மகள் நல்லா இருக்கா பாவம் அவளைக் கண்டால் எனக்கு அழுவையா இருக்கு.அடிக்கடி அம்மா நமக்கு ஆட்டோல போலாம்னு கெஞ்சல் :-).விட்டு கதவை திறந்து போட சொல்லி அதை விட நச்சரிப்பு.
அதான் எனக்கு யாரிடமும் பேச நேரம் ஒதுக்க முடிவதில்லை..நோன்பு முடிந்தால் ஓரளவு வருவேன் என நினைக்கிறேன் பார்க்கலாம்.எனக்கு நீங்க ஒரு உதவி செய்ய வேண்டும்..ஒரு சின்ன ஆலோசனை மட்டும் வேண்டும்.
என் 2.5 வயது ரீமாவுக்கு தோள் வரை முடி நல்ல நீளமான முடி .அவளுக்கு அழகே அவ முடி தான் என பலரும் சொல்வார்கள்.ஆனால் அடர்த்தி இல்லை..ஊர் சென்று வந்ததில் ஓரிரு பேன் சிலரிடமிருந்து வந்து ஏறி உள்ளது...பார்க்கவே கஷ்டமாக உள்ளது.நீளமான முடி மெயின்டெயின் பன்னவும் கஷ்டமாக உள்ளது
இப்போ நான் மெடிகர் மட்டும் போட்டு தலையை சுத்தம் செய்தால் மட்டும் போதுமா அல்லது கொஞ்சம் அசிங்கமானாலும் பரவாயில்லைன்னு ஒரு மொட்டை போட்டு இனி வரும் முடி நல்லா வருமா?
இனி உங்கள் வீட்டில் என்ன விஷேஷம்?உங்க பேரன் உங்களோடயே தானே ஜாலி

மேலும் சில பதிவுகள்