பெட்ஸ் வளர்ப்பது பற்றி அட்வைஸ்

எனக்கு வீட்ல ஏதாவது பெட்ஸ் வளர்க்க ஆசையா இருக்கு. எனக்கு கிளி, முயல், நாய் வளர்க்க பிடிக்கும். அதோட இப்போ கொஞ்சம் நாள் தான் நான் அம்மா கூட இருப்பேன். அப்புறம் அம்மா, வீட்ல தனியாதான் இருப்பாங்களா?ஹா ஹா அதான் எனக்கு பதிலா என்னோட பெட்ட விட்டுட்டு போகலாம்ல? யாருக்காவது அத பத்தி ஐடியாவோ இல்ல நீங்க வளர்த்த அனுபவத்தையோ கொஞ்சம் சொல்லுங்களேன். நான் ரொம்ப ஆசைப்படுறது கிளி தான். ஏன்னா அதால எந்த தொந்தரவும் இருக்காதுல. ப்ரண்ட்கிட்ட கூட 3 கிளி இருக்கு அத அப்படியே வாங்கிப்பேன்.

ஹாய் மொழி,
முதலில் வாழ்த்துக்கள், விரைவில் திருமணமா?
கிளி வளர்க்கலாம், நல்லா பழகிட்டா கூண்டு கூட தேவையில்லை (பூனை பயமில்லைன்னா). உணவும் ப்ரச்னை இல்லை. நல்லா பழகும்.
லவ்பேர்ட்ஸ் இன்னும் பெட்டர். பராமரிப்பு எளிது. என்ன, குடும்பம் பெருத்துகிட்டே போகும்.
நாய் பராமரிக்க கொஞ்சம் கஷ்டம். தினமும் பல் துலக்கி விடணும்(!) வாரம் இருமுறை குளிக்க வைக்கணும். மாதாமாதம் டாக்டரிடம் போகணும். ஆனா, நல்ல துணை.
முயல் கமர்சியலுக்கு தான் ஒத்து வரும். அது வளர்த்தா பாம்பு வரும்.
மற்றபடி உங்க சௌகரியம் போல செய்யுங்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

தாங்க்யூ செல்வி மேடம் நீங்களாவது எனக்கு பதில் கொடுத்தீங்களா, தாங்க்யூ, தாங்க்யூ ஆமாம் மேடம் எனக்கும் நீங்க சொல்லி தான் நியாபகமே வருது லவ் பேர்ட்ஸ் வளர்க்கலாம்னு. பூனை எல்லாம் கிடையாது எங்க வீட்ல. அப்பா விட்டு வெளியில் கேட்க சொல்றேன். அப்பறம் நீங்க எல்லாரும் தோட்டம் பத்தி பேசிகிட்டு இருந்தீங்கள்ளல அத பார்த்துட்டு எனக்கு தோட்டம் ஆசை வந்து நானும் இப்போ எங்க வீட்டு வாசல்லயும் கொள்ளையிலையும் கொஞ்சம் செடி வச்சிருக்கேன் மேடம்.

அன்பு மொழி,
நீங்களாவதுன்னு சொல்லி இருந்தது கஷ்டமாக இருந்தது. சொல்லலாமா, வேண்டாமானு யோசிச்சு, யோசிச்சு சொன்னேன்.
லவ்பேர்ட்ஸ் நல்ல சாய்ஸ். பிரச்னையே இல்லை. தினை வைத்தால் போதும். அதுவா முட்டை வைக்கும். குஞ்சு பொரிக்கும். அப்பத்தான் பெண் பறவை, ஆண் பறவையை கொத்தி வைக்கும். நான் லவ்பேர்ட்ஸ் வளர்க்கிறேன். அதுக்கும் பாசம், அன்பு புரியும். என்னைக் கண்டால் கூண்டில் ஓடி, ஓடி கூப்பிடும். என்னை மட்டும் கொத்தாது.
நாயும் உண்டு. குட்டியில் இருந்தே வளர்க்கிறோம். அது தான் இப்பத்திக்கு எங்களின் துணை, செல்லம், பிள்ளை எல்லாம். அதுவும் அப்படித்தான், என்னிடம் மட்டும் பயப்படும், நான் சொல்றதை கேட்கும்.

தோட்டம் வீட்டில் இருப்பதே தனி சுகம் தான். அதுவுமே நல்லா பொழுது போகும். செடியில் பூவோ, காயோ பறிக்கும் போது தேங்க்யூ செடின்னு சொல்லிகிட்டே பறிப்பேன்.
தோட்ட வேலை உடம்புக்கும் நல்ல பயிற்சி.
உன் செடி நல்லா வளர வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்