ரிச்கேக்

தேதி: September 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

ரவை - 1 கிலோ
சீனி - 2 கிலோ
முட்டை - 60
மாஜரீன் - 1 கிலோ
இஞ்சிப்பாகு - 900 கிராம்
பூசணி அல்வா - 900 கிராம்
செளசெள - 900 கிராம்
முந்திப்பருப்பு - 1500 கிராம்
உலர்ந்ததிராட்சை - 2 கிலோ
பேரீச்சம்பழம் - 2 கிலோ
பிராண்டி - 2 கிலாஸ் [வைன் கிலாஸ்]
கண்டிபீல்(candi peel) - 500 கிராம்
செரீஸ்(cheris) - 500 கிராம்
தேன் - 250 கிராம்
கோல்டன் சிராப்(Golden sirop) - 2 கிலாஸ்
பன்னீர்(Rosewatter) - 2 சிறிய போத்தல்
அல்மண்ட் எசன்ஸ்(Almond essence) - 2 போத்தல்
வெனிலா - 6 போத்தல்
ஏலக்காய்த்தூள் - 10 தேக்கரண்டி
ஜாதிக்காய்த்தூள் - 10 தேக்கரண்டி
கறுவாத்தூள் - 10 தேக்கரண்டி
கிராம்பு - 5 தேக்கரண்டி
ஸ்ட்ரா பெர்ரி ஜாம் - 2 போத்தல்
அன்னாசிப்பழ ஜாம் - 2 போத்தல்


 

மேலே கொடுத்துள்ள பழங்கள், பாகுக்குள் இருக்கும் இஞ்சி, பூசணி, செளசெள மற்றும் முந்திரிப்பருப்பு எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் வெட்டிய பொருட்கள் எல்லாவற்றையும் போடவும்.
அதில் எசன்ஸ், பன்னீர், கோல்டன்சிரப், பிரண்டி, தேன், வனிலா, ஏலம், கறுவா, ஜாதிக்காய், கிராம்புதூள்கள் மற்றும் ஜாம் இரண்டில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்று சேர்க்கவும்.
மரக்கரண்டியால் நன்றாக கலந்து மூடி ஒருமாதம் ஊறவைக்கவும்.
ஒரு கிழமைக்கு ஒருமுறை நன்றாக பிரட்டி ஊறவைக்கவும்.
பின்பு ரவையை பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.
பின்பு 60 முட்டையில் 36 முட்டையின் வெள்ளைகருவைவும் 60 முட்டையின் மஞ்சள்கருவையும் தனித்தனியாக் எடுத்து வைக்கவும்.
சீனியையும் மாஜரீனையும் சேர்த்து நன்றாக அடிக்கவும்.
முட்டையின் வெள்ளைக்கருவையும் மஞ்சள்கருவையும் தனித்தனியாக நுரைவரும்வரை நன்றாக அடிக்கவும்.
பின்பு பழக்கலவைக்குள் சீனிக்கவை, ரவை அடித்துவைத்துள்ள முட்டை வெள்ளைக்கருவையும், மஞ்சள்கருவையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
கேக் ரேயில் பேக் பேப்பர் விரித்து அந்த ரேக்கு அளவாக கலவையை ஊற்றி 180 பாகை வெப்பத்தில் பேக்செய்யவும். 3 அல்லது 4 தரம் பேக் செய்ய வேண்டும்.
பின்பு ஒரு பெரிய பாத்திரத்தில் பேக்செய்த கேக்குகளைக் கொட்டி மீதம் இருக்கும் இரண்டு போத்தல் ஜாம்மையும் சேர்த்து நன்றாக கலக்கி கேக் ரேயில் போட்டு தட்டி சிறிய துண்டுகளாக் வெட்டி எடுக்கவேண்டும்.
வெட்டிய துண்டுக்களை ஓயில் பேப்பரில் சுற்றி ரிச்கேக் பெட்டியில் வைத்து பரிமாறலாம்.


இந்த கேக்கை திருமண வைபவங்களில் வழங்குவார்கள்.
பழக்கலவையை குறைந்தது 3 வாரம் ஊறவிடவேண்டும். எவ்வளவு நாட்கள் பிரண்டியில் ஊறுதோ அவ்வளவு நல்ல சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வத்ஸலா அவர்களே!!இந்த குறிப்பை ஒரு 10 பேருக்கோ அல்லது ஒரு 4 பேருக்கோ செய்யும் அளவு முறை தந்தால் மிகவும் பயனாக இருக்கும்.. இதில் ரவை போட்டு இருக்கு நான் இப்படி கேக் செய்ததில்லை... கேக் என்றால் எனது கை ரெடிமேட் பாக்கெட்ட் இருக்கும் இடத்தைதான் தேடும்... ரொம்ப வித்யாசமா இருக்கு..

"People often say that motivation doesn't last. Well, neither does bathing - that's why we recommend it daily " - Zig Ziglar

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வணக்கம் இலா நலமாக இருக்கிறீர்களா? 10பேருக்கு இந்தகேக் செய்வது கொஞ்சம் கடினமாக இருக்கும். எனெனில் இதற்குப்பயன்படுத்தும் பொருட்கள் சிலது போத்தல்களில் வரும். இஞ்சிப்பாகு,செளசெள,பூசணிஅல்வா இதில் கொஞ்சம் எடுத்தால் மிகுதி அப்படியே இருக்கும் வீணாகிப் போய்விடும் அல்லவா? திருமணங்களின் போது தான் இதை கொடுப்பதால் இந்த அளவில் கொடுத்தேன்.நீங்கள் 100துண்டுகள் செய்யவிரும்பினால் நாளை உங்களுக்கு அதற்குரிய அளவைக்கொடுகிறேன். நீண்டநாட்கள் வைதுப்பாவிக்களாம்.ஏனெனில் பிரண்டியில் பழங்கள் ஊறுவதால் விரைவில் கெடாது.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

இலா நலமாக இருக்கிறீர்களா?
ரவை-250கிராம்
சீனி-500கிராம்
முட்டை-20 இதில் மஞ்சள்கரு-20,வெள்ளைக்கரு-12
மாஜரீன் -250கிராம்
இஞ்சிப்பாகு-225கிராம்
பூசணிஅல்வா-225கிராம்
செளசெள-225கிராம்
முந்திரிப்பருப்பு-350கிராம்
உலர்ந்ததிராட்சை-500கிராம்
பேரீச்சம்பழம்-500கிராம்
பிரண்டி-1/2வைன்கிலாஸ்
கண்டிபீல்-225கிராம்
செரீஸ்-125கிராம்
கோல்டன்சிரப்-1/2கிலாஸ்
ஏலக்காய்த்தூள்-3தே.க
சாதிக்காய்த்தூள்-3தே.க்
கறுவாத்தூள்-3தே.க
கராம்பு-1தே.க
வனிலா-1போத்தல்
பன்னீர்-1/2போத்தல்
அல்முண்ட் எசன்ஸ்-1/2போத்தல்
ஜாம் வகைகள் 1
செய்முறையை மேலே பார்க்கவும்.
100அல்லது150 துண்டுகள் வரும் என நினைக்கிறேன்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

இது கொஞ்சம் எளிதாக இருக்கு.. என் நண்பர்கள் வீட்டில் செய்வார்கள்.. சாப்பிட்டு மட்டுமே எனக்கு தெரியும்.. ... இந்த கலவையை பிரிட்ஜ்ல வைக்கனுமா? இப்ப அக்டோபரில் ஊற வைத்தால் போதும் எனக்கு இந்த முறை சூப் கிச்சனுக்கு எதாவது செய்து கொண்டு போகலாம்ன்னு இருக்கேன்... பார்போம் .. உங்க பதிலுக்கு நன்றி!!!

"People often say that motivation doesn't last. Well, neither does bathing - that's why we recommend it daily " - Zig Ziglar

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இந்த கலவையை பிரிட்ஜ்ஜில் வைக்கத்தேவையில்லை.
சும்மா ஒரு இடத்தில் மூடிவைத்தால் போதும்.
சூப் கிச்சன் என்றால் என்ன?

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

Vatsala madam!!!

Soup kitchen is a generic name . Here in all churches, they will feed to homeless people during the Thanksgiving day!!. This is a volunteer activity organized by local churches.
There is an organization but what I meant was the local church charity dinner during holidays.

"People often say that motivation doesn't last. Well, neither does bathing - that's why we recommend it daily " - Zig Ziglar

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

உங்கள் பதிலுக்கு நன்றி.
ரிச்கேக் செய்தால் எப்படி வந்தது என்று கருத்து தெரிவிக்கவும்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

கட்டாயமாக சொல்கிறேன்

"People often say that motivation doesn't last. Well, neither does bathing - that's why we recommend it daily " - Zig Ziglar

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வத்சலா அக்கா ரிச்கேக்கிற்கு பிரண்டி போடாமல் செய்யமுடியாதா? தயவு செய்து இதற்குறிய பதிலை மிக விரைவாக தரவும்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

துஷ்யந்தி, பழங்கள் பிரண்டியில் ஊறினால் தான் மிகவும் நல்லது.அப்பொழுதான் கேக் மிருதுவாக இருக்கும். நான் இது வரை பிரண்டி இல்லாமல் செய்யவில்லை.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

வத்சலாஅக்கா எப்படி இருக்கின்றீர்கள்? சிறுவர்களும் இந்த கேக்கை உண்கின்றார்கள் அவர்களுக்கு பிரண்டியில் செய்த கேக்கை உண்ண கொடுக்க முடியாது அதனால் தான் பிரண்டி போடுவதை தவிர்க்க முடியாதா எனக் கேட்டேன்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

வணக்கம் வத்சலா அக்கா,
எனக்கு கண்டி பீல் என்றால் என்னவென்று கூரவும்

வணக்கம் சசிகலா,
கண்டி பீல் என்றால் தோடம்பழதோலை சீனிப்பாக்குள் பதப்படுத்தி வைத்திருப்பார்கள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"