engineering course

என் பையன் 12 thcomputer science படிக்கிறான் எந்த engineering course படித்தால் நல்லது .

ஆம்..ஸ்னேகிதி செந்தமிழ்செல்வி,இப்பொழுது நன்றாக படிக்கவேண்டும்.இருந்தாலும் சிட்டிக்குள் நல்ல காலேஜில் ஷீட் கிடைக்கும் வரை நிம்மதியே இல்லை.பிள்ளைகளின் விருப்பமும் முக்கியம்.என் பையனது கனவு வெளிநாட்டில் சம்பாதிக்க வேண்டும்.அதற்கு எந்த படிப்பு உகந்தது என்று அவர் தந்தையிடமும்,மாமாமார்களிடமும் கேட்டவண்ணம் இருக்கின்றார்.95 %மேல் மார்க் பெற்றால்தான் முன்னனி கல்லூரிகளில் விரும்பிய ஷீட் கிடைக்கும் என்ற நிலை இப்பொழுது உள்ளது.ஒரு பிரபலமான கல்லூரியில் என் நெருங்கிய ஸ்னேகிதி ஒருத்தியின் மகள் இந்த ஆண்டு சேர்ப்பதற்கு கேபிடேஷன் பீஸ் மட்டும் ஆறு லட்சம் கட்டி சேர்த்தார்.84% மார்க் அவள் எடுத்து இருந்தாள்.கவுன்ஸிலிங் போய் விரும்பிய காலேஜில்,விரும்பிய கோர்ஸ் கிடைக்காது என்று கவுன்ஸிலிங் போக வே இல்லை.இன்னொன்று தெரியுமா?அண்ணா பல் கலைகழகத்தில் அரசு ஒதுக்கிடீற்கு கவுன்ஸிலிங் நடந்த போது 15% மாணவர்கள் அழைப்பை நிராகரித்து விட்டனர். 7 காலேஜில் ஒரு மாணவர் கூட சேர வில்லையாம்.
வேலை என்பது பணத்திற்காக மட்டும் என்பது ஆரம்பகால எண்ணமாக இருக்கும். ஒரு வேலையில் சேர்ந்து எதிர்பார்த்த சம்பளத்தையும் பெற்ற பிறகு மற்ற விசயங்களைத் தேட ஆரம்பிப்போம். அப்போது பணம் பெரிதாக தெரியாது.
அட்மினின் இந்த வரிகள் பொன் எழுத்தில் பொறிக்கப்பட வேண்டியவை.
அட்மின் பாகிஸ்தானுக்கு ஒரு மாத காலத்துக்கு சென்று வரலாம் என்று யோசிக்கின்றேன் என்ற வரிகளை படித்ததும் ஆர்வமாக அவர் கொடுத்த லின்க் போய் பார்த்தேன்.படித்ததும் வாய் விட்டு சிரித்து விட்டேன்.அருகில் இருந்த என் பேரன் என்னை விநோதமாகப் பார்க்கின்றான்
ஸாதிகா

arusuvai is a wonderful website

////வேலை என்பது பணத்திற்காக மட்டும் என்பது ஆரம்பகால எண்ணமாக இருக்கும். ஒரு வேலையில் சேர்ந்து எதிர்பார்த்த சம்பளத்தையும் பெற்ற பிறகு மற்ற விசயங்களைத் தேட ஆரம்பிப்போம். அப்போது பணம் பெரிதாக தெரியாது.///

கரெக்டா சொன்னீங்க

என் பையனுக்கும் அவன் விருப்ப படி தான் விட்டுள்ளோம்.

பாபு பாக்கிஸ்தானா ஒரே சிரிப்பு தான்.

போங்க போங்க உங்களுக்கு அங்கு பரோட்டா கிமா தான்
எல்லாம் ஆறு லட்சம் 15 லட்சம் என்கிறார்கள்

சீக்கிரம் நிறைய மணி பிளாண்ட் தான் வளர்க்க்கனும்.

ஜலீலா

Jaleelakamal

அட்மின் அண்ணா, நான் 4 நாட்களாக அருசுவைக்கு வரவில்லை, இன்று தான்open செய்து பார்த்தேன். எனக்கு ஒரே இன்ப அதிர்ச்சி, நீங்கள், எனக்கு பதில் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி. நீங்கள் அணைவரும் சொன்னதுபோல் நான் எனது மகனின் விருப்பம் போல் அவனை படிக்க வைக்க வேண்டும். உங்கள் அணைவரின் ஆசீர்வாதமும் அவனுக்கு வேண்டும். அணைவருக்கும் மிக,மிக நன்றி.வாழ்க வளமுடன்

அன்பு தோழிகளே,

அன்பு ஜலீலா, உங்கள் பையனும் நன்றாக படித்து நல்ல காலேஜில் சேர்ந்து நன்றாக வர ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன். மிகவும் நன்றி.

அன்பு தோழிகளே,

மேலும் சில பதிவுகள்