கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம். பாகம் -(iv)

கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம். பாகம் -(iv)

அத்துடன் உங்களுக்குத் தெரிந்த சுவாரஷ்யமான பொன்மொழிகளையும் கூறிக்கொண்டால் நன்றாக இருக்கும்.
அன்போடு அதிரா.

எப்படி இருக்கீங்க.பசங்க நலமா.பேசி நிறைய மாதங்கள் ஆகிறது.உங்களுக்கு உடம்பு சரியாகிவிட்டதா.பழையமாதிரி உங்க கூட பேசுறது சந்தோஷம்.எனக்கு தெரிந்த விடுகதை இதுக்கு பதில் சொல்லுங்க.இது ரெம்ப ஈஸி சொல்லுங்க அதிரா.

1.செம்பு நிறைய முத்துக்கள்.

2.கொக்கு நிக்க நிக்க குளம் வத்த வத்த அது என்ன.

3.அண்ணனுக்கு எட்டாது தம்பிக்கு எட்டும்.

சீக்கிரம் விடை சொல்லுங்க நான் வேலை பார்க்கனும் பிறகு வர்றேன்.

அன்புடன் கதீஜா.

ஹாய் கதீஜா நலமா?இன்சாஃப் க்கு காய்ச்சல் வாய் புண் சரியாகி விட்டதா?அதிராவிடம் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லட்டுமா?(நான் சரியான முந்திரி கொட்டை ஹி ஹி)
1.மாதுளை
2.கொக்கு-தீபம்.குளம்-விளக்கு
3.உதடு

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கதீஜா எப்படி இருக்கீங்க அதிராவுக்கு பதில் பதிலை நான் சொல்லாமா?
1.மாதுளை
2.
3.உதடு
2வது கேள்விக்கு தெரியவில்லை.
பதில் கரெக்டா?

ஹாய் கவிசிவா
என்னப்பா நான் டைப் அடிக்கிறதுக்குள்ள வந்து வந்து பதில் போட்றீங்க போங்க

கவி இதுக்கு பதில் சொல்லுங்க.
வெள்ளை குளத்தில் கருப்பு மீன் அது என்ன?

ஐந்து வீட்டுக்கு ஒரே முற்றம் அது என்ன?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா கண், கை கரெக்டா

ஐந்து வீட்டுக்கு ஒரே முற்றம் அது என்ன?

உள்ளங்கை - கை விரல்கள்

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

கவி, ரீஹா க்ரீட்டா சொல்லிப்புட்டிங்கோ!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்து அது என்ன?

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்து வெண்டைக்காய்.

மேலும் சில பதிவுகள்