ஸ்னேகிதிகளே,வாருங்கள் இங்கு அரட்டை அடிக்கலாம்.

ஹைய்யா..ஜாலி..அரட்டை அடிக்கலாம் பாகம் 15 தொன்னூறு பதிவுகளுக்கு மேல் போய் விட்டது.புதியதாய் பாகம் 16 இங்கு குத்து விளக்கு ஏற்றி திறந்து வைக்கின்றேன்.இங்கு வந்து அனைவரும் அரட்டையை தொடருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
அன்புடன்,
ஸாதிகா

ஸ்னேகிதிகளே,வாருங்கள்.இங்கு வந்து சந்தோஷமாக அரட்டையை தொடருவோம்.அரட்டை ஹைய்யா ஜாலி 16 வது பாகம் ஆரம்பமாகி விட்டது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

தங்கை கவி .எஸ்.லைனிலா இருக்கின்றீர்கள்.குவாலியரில் ரம்ஜான் எப்படி? கொஞ்சம் விவரியுங்களேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா மேடம்
எப்படி இருக்கீங்க வீட்டில் எல்லோரும் சுகமா?
ஸாதிகா மேடம் இங்கே இந்துக்கள் பண்டிகைகள்தான் அதிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது,இங்கே இஸ்லாமியர்கள் மிகமிக குறைவே,எனக்கு தெரிந்து எங்கள் தெருவில் இஸ்லாமியர்கள் யாரும் இல்லை அதனால் குவாலியரில் ரம்ஜான் எப்படி என்று தெரியவில்லை மேடம்.

பரவாஇல்லை கவி.அடுத்து தீபாவளி.கொண்டாடி விட்டு குவாலியரில் தீபாவளி பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.ஸ்னேகிதிகளுடன்

arusuvai is a wonderful website

ஜெயலஷ்மி,காயத்ரி
நான் இந்தியாவில் தான் இருக்கிறேன் மத்தியபிரதேசத்தில் இருக்கிறேன்.

காயத்ரி&ஜெயலஷ்மி
டிசம்பர் 20வதுக்குமேல் வருவோம் என் வீட்டுக்காரர்க்கு 1மாதம் லீவ் 2,3 நாட்கள் சென்னையில் அவரது தங்கை வீட்டில் இருந்துவிட்டு சேலத்துக்கு கிளம்புவோம்.
என்பிறந்தநாள் என் வீட்டுக்காரர் பிறந்தநாள் கிருஸ்துமஸ், நியூயர் என் பையன் பர்த்டே எல்லாமே சேலத்துல கொண்டாடிட்டு வரலம்முன்னு இருக்கோம்.
எனக்கும் சென்னைல இருக்கிற எல்லா அறுசுவைதோழிகளையும் பார்க்கணுமென்று ஆசையாத்தான் உள்ளது பார்க்கலாம் நேரம் கிடைத்தால்.

ஹாய் கவி நீங்க டிசம்பர் 20 ல்தான் போறீங்களா. நான் டிசம்பர் 1ல் இந்தியா போகிறேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

கவி வர முடியதுனு சொல்லம சொல்றீங்களா.சரி பரவாயில்லை.நாங்க வரொம் மீனம்பாக்கதுக்கு.

ஹாய் ஜலீலக்கா,ஷாதியான்டி,சொஹரா
சொஹரா உங்க பேரை மொதல்ல சொரஹான்னு போட்டேன் அப்றம் மாத்திட்டேன்:-D
பொண்ணுக்கு நேத்து தான் முடியை குட்டியா கட் பன்னினேன் நேத்து அசிங்கமா இருந்தது இன்னைக்கு பர்வாயில்லை..சரி ஈத் ஹாலிடேஸ்கு பொண்ணு மொட்டையா அலையுமேன்னு அது முடிஞ்சு அடிக்கலாம்னு விட்டுட்டேன்.இப்ப இங்க மெடிகர் தேடி தேடி அலுத்துப் போயிட்டேன்.
சொரிந்து தலையில் காயம் இருக்கு அது மாறிதான் மொட்டை போடனும்.அதுக்கு முதலில் மெடிகர் வேனும்.
பாவம் அதுக்கு கஷ்டமா இருக்கு போல அடிக்கடி அம்மா என் தலையில் கொசுகடிக்குதுன்னு சொல்றா.
அய்யோ நெனச்சாவே என்னவோ போல மொட்டையா என் கனவர் வுட்டா அழுதுடுவார் அவர் தான் முடி முடின்னு அதை தோள்வரை வளத்து விட்டு ஜடை போட வச்சார்.இப்ப மொட்டை போட்டா அடுத்த வருஷம் தோள் வரை வளந்துடும்னு நினைக்கிறேன்.கருவேப்பிலையை அரைத்து தேய்ப்பதா?இல்ல அதை காய்ச்சி எண்ணை தேய்ப்பதா?
அப்றம் ஷாதிகாண்டி பட்டர் பேப்பரை எதுக்கு அடியில் விரித்து தம் போடனும்..கேட்டா கிறுக்கு கேள்வியாயிடுமோன்னு அன்னைக்கே கேக்கலை ஆனால் ரொம்ப யோசிச்சுட்டேன் எனக்கு புரியல

ஐய்யையோ தளிகா என்னை ஆண்டி யாக்கி விட்டீர்களே?(ஸாதிகாண்டி)
பட்டர் பேப்பரை பிரியாணிக்கு அடியில் விரித்து தம் போட வேண்டும்.சாதத்தை தனியாக வடித்து,கிரேவி தனியாக செய்து (எனது ஸ்டைல்) செய்யக்கூடிய தம் பிரியாணிக்கு மட்டும் இது பொருந்தும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

எப்படி இருக்கிங்க? ஊரில் இருந்து வந்த களைப்பு எல்லாம் போயாச்சா?
ஜலீ என்ன ஒரே பிசியா?
தளிகா தான் என்னை கண்டுக்கல்லை. பரவாயில்லை தளி. உங்களுக்கு எப்ப முடியுமோ பதில் போடுங்க ஒ.கே வா.

ஜலீ நிங்க எனக்கு விளக்கம் கொடுத்த பிறகு நான் போய் கடையில் கேட்டு கடற்பாசி ஒரு வழியாக வாங்கி வைத்துள்ளேன். நாளை செய்துவிட்டு உங்களுக்கு பதில் போடறேன். நன்றி ஜலீ.
பார்க்கலாம்.

மேலும் சில பதிவுகள்