After straightening ? pls..Deva

After straightening my hair entha shampoo use pannaveandum?...enna serum use pannaveadum?....eppedi use panrathu?...pls Deva

தேவா எனக்கும் உங்ககிடே ஒரு கேள்வி இருக்கு straightner 2" ,1" ,1 1/2" எது உபயோகிக்க எளிதாக இருக்கும்?.... ...நான் ஏற்கனவே உங்க குறிப்புகளே பார்த்து உபயோகிக்க பண்ண ஆரம்பித்து விட்டேன் ... ஆனால் என்னவர் அடிக்கடி உபயோகிக்க வேண்டம் என்கின்றார் ....நான் எப்போதும் போடுவதிலே ...ஆனால் ஒருமுறை ஸ்ட்ரைட் பண்ணினால் அடுத்தநாளும் பண்ணனும் போல் முடி ஆகிவிடுகிறது ......உங்களுக்கு நேரம் இருக்கும் போது பதில் தாங்க....மீண்டும் சந்தேகம் இருந்தால் உங்களிடம் தான் வருவேன் ....:) நன்றி

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ஹாய் ஹாஷினி, ஸ்ட்ரெயிட்னர் வாரம் ஒரு முறை உபயோகித்தால் போதும். தினமும் தேவையில்லை. முதல் நாள் செய்தது போன்ற தோற்றம் இரண்டாவது நாள் இல்லாமல் இருக்க காரணம், தலையில் வியர்வை உண்டாதல், குளிக்கும்போது தெரிக்கும் தண்ணீர் போன்றவையே. குளிக்கும்போது தலைக்கு ஷவர் கேப் போட்டுக் கொள்ளுங்கள். வியர்வையை தவிர்ப்பது கடினம். அதற்காக தினமும் ஸ்ட்ரெயிட்னிங் செய்யாமல் , ஸ்ட்ரெயிட்னிங் க்ரீமை லேசாக தலையில் தடவி வாரி விடுங்கள். செட்டாகி விடும். பாலீஷ் க்ரீமும் உபயோகிக்கலாம். ஆனால் அதனை பார்ட்டி போன்ற விஷயங்களுக்கோ, வாரம் ஒரு முறையோ உபயோகித்தால் போதும். ஸ்ட்ரெயிட்னிங் க்ரீம் நல்ல பிராண்ட் பார்த்து, அதனால் முடிக்கு எதுவும் பாதிப்பு ஏற்படாது என்பதனை நிச்சயித்துக் கொண்டு வாங்குங்கள். தலையின் வேர்க்கால்களில் அப்ளை செய்யாதீர்கள். ஒரு பம்பிற்கு(pump) மேல் உபயோகிக்காதீர்கள்.

ஸ்ட்ரெயிட்னர் வாங்கும்போது சலோனில் அதிக அகலம் உள்ளது நல்லது என்பார்கள். மெலிதான சைஸ் ஒன்றும் வைத்திருப்பார்கள். அது மேல் முடிகளை டச்சப் செய்ய உபயோகப்படுத்துவார்கள். அதிக அகலம் உள்ளது அடர்ந்த கூந்தலுக்கும், விரைவாக ஸ்ட்ரெயிட்னிங் செய்யவும் உகந்தது. ஆனால் டிஸட்வாண்டேஜ் என்று பார்த்தால் தலையில் மேல்புறத்து முடிகளை ஸ்டெரெயிட்னிங் செய்ய சரிவராது. மண்டையோட்டிலிருந்து (ஸ்கால்ப்) மிகவும் அதிக இடவெளி விட்டுதான் ஸ்ட்ரெயிட்னிங் செய்ய இயலும். எனவே இதனைக் கொண்டு ஸ்ட்ரெயிட்னிங் செய்தால் பின்புறத்திலிருந்து பார்த்தால் நன்றாக இருக்கும். முன்புறம் லுக் வராது. சின்ன அளவினைக் கொண்டு செய்யும்போது நேரம் அதிகமாகும். அடர்த்தியான கூந்தல் என்றால் சிரமமாக இருக்கும். சின்னதும் ,பெரிதும் சேர்த்து வாங்கினால் நல்லது. ஆனால் அதிக செலவு. நடுத்தரமான சைஸ் என்றால் இந்தியர்களின் நீளமான அடர்த்தியான முடிக்கு சரிவரும். சலோனில் அங்கேயே ஒரு முறை ட்ரயல் பார்க்க வேண்டும் என்று சொல்லுங்கள். அப்படி தேர்ந்தெடுப்பது எளிது.

ஸ்ட்ரெயிட்னிங் செய்த பிறகு உபயோகிக்க சரியான ஷாம்பூவை சலோனில் கேட்டு வாங்குங்கள். System Professional ஷாம்பூ மைல்டாக நன்றாக இருக்கும். Schwarscorf ல் Anti Frizz Shampoo வாங்கி உபயோகிக்கலாம். லோரியலிலும் கிடைக்கிறது. ஒரு செட்டாகவும் விற்பார்கள். இது தவிர வாரம் ஒரு முறை டாண்ட்ரப் ஷாம்பூக்களும் வழக்கம்போல் உபயோகிக்கலாம்.

ஹாய் காவ்யா, நான் முன்பே ஒரு பதிவில் இதனைப் பற்றி விலாவாரியாக கூறியுள்ளேன். தேடி எடுக்க எனக்கு இப்போது நேரமில்லை. நீங்கள் முடிந்தால் சர்ச் செய்து பாருங்கள். நானும் நேரம் கிடைக்கும்போது அனுப்புகிறேன். ஷாம்பூ பற்றி முந்தைய பதிலில் சொல்லி இருக்கிறேன். பாருங்கள். ஸ்ட்ரெயிட்னிங் செய்த பிறகு லேசாக பாலீஷ் க்ரீம் தடவினால் போதும். சீரம் வாங்கி இருந்தால் அதனை ஸ்ட்ரெயிட்னிங் செய்யும் முன்பு உபயோகியுங்கள். தண்ணீர் போன்ற திரவம் பட்டால் ஸ்ட்ரெயிட்னிங் செய்தது வீணாகி விடும்.

ஹாய் தேவா உங்க தெளிவான பதிலுக்கு ரொம்ப நன்றி ....நார்மலா எப்பவும் உபயோகிக்கறது இல்லை ....இன்னும் உங்க டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணிட்டி சொல்லறேன்....ரொம்ப நன்றி தேவா

ஹாய் காவியா...இந்த லிங்க் பொய் பாருங்க உங்களுக்கு உதவிய இருக்கும்னு நினைக்கிறேன்
http://www.arusuvai.com/தமிழ்/forum/no/8226

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

மேலும் சில பதிவுகள்