சென்னைவாசிகளே

அறுசுவை உறுப்பினர்களுக்கு சென்னையில் ஒரு கெட் டுகெதர் வைத்தால் எத்தனை பேர் கலந்து கொள்ள தயாராக இருக்கிறீர்கள்?

அட்மினையும் கலந்தாலோசிப்போம்
அன்புடன்
ஜெயந்தி மாமி

மாமி இது எல்லாம் ரொம்ப அநியாயம் மாமி .....அப்புறம் நான் அலுதுடுவேன் :(
எனக்கும் உங்களே எல்லாம் பாக்கணும் போல தான் இருக்கு ...ம்ம்ம்ம் என்ன பண்ணறது ....என்ஜாய் மாமி

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

நீங்கள் எல்லாம் தயார் என்றால் நானும் தயார்
ஸாதிகா

arusuvai is a wonderful website

மாமி டிசம்பரில் ஏற்பாடு செய்வீர்களா. நானும் எல்லோரையும் பார்த்த மாதிரி இருக்கும்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

என்ன அக்கா நோம்பு முடிச்சாசா. இங்கு இப்போதான் முடித்தேன். சகருக்கு (4 மணி உணவிற்கு) மட்டன் சமைத்துக் கொண்டு இருக்கேன். உங்க வீட்டில் என்ன சமையலோ. நீங்கள் சென்னையில் இருக்கீங்க எப்போ வேண்டுமானலும் ஓக்கே சொல்லுவீங்க். நாங்க வெளிநாட்டில் இருந்து படும்பாடு......அப்பப்பா....

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மரியாதைகுர்ய ஜெயந்தி மாமி நான் கூட இதை யோசிச்சது உண்டு. நானும் கலந்துக்குவேன்.

அன்புடன்
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

மாமி இப்போ முடியாது..ஒரு 3 மாதம் கழிச்சு பண்ணினால் முடியும்..இப்போ நான் யு எஸ் ல இருக்கேன், இன்னும் சில நாட்களில் திரும்பி விடுவோம்..உங்கள் எல்லோரையும் பார்க்க மிகவும் ஆசையாக இருக்கு இப்படி ஒரு chance missஆகுதுன்னு வருத்தமா இருக்கு

ஜெயந்திமாமி தனிஷா ,சந்தோ சொல்வதையும் கன்சிடர் பண்ணுங்கள்.தனிஷா,சஹருக்கு உள்ளது காலையிலேயே சமைத்து மைக்ரோவேவ் பாத்திரங்களில் ஸ்டோர் பண்ணி பிரிட்ஜில் வைத்து விடுவேன்.சாதம் மட்டும் இரவு தூங்கப்போகும் முன் குக்கரில் போட்டு விடுவோம்.இரவு உணவு கிடையாது .இஃப்தாரின் பொழுது சாப்பிடுவதோடு சரி.தூங்குவதற்கு முன் ஜூஸ்,பழம் அவ்வளவுதான்.பக்கத்தில் தராவீஹ் தொழுவதற்கும் வசதி இல்லை.பர்ளை மட்டும் வீட்டிலேயே முடித்து விடுவோம்.ஊரில் இருந்தால் ரமலான் நேரம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்...
ஸாதிகா

arusuvai is a wonderful website

என்ன அறுசுவையில் யாரையும் காணவில்லையே?

arusuvai is a wonderful website

ஜெயந்தியக்கா நல்லாகீறியா படா ஜோரா பார்ட்டியெல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டியா. இன்னா யக்கா இப்டி கேட்டிடீய நாங்க எம்மாம் பேரு மெட்ராஸ்லேயிருந்து வெல்நாட்ல வந்து குந்திகீனுகீரோங் இன்னாஒன்னு அதுல எதினி டிக்கெட்டு பார்ட்டிக்கி வருதுன்னுதா டவுட்டாகீது. என்னகேட்டுக்கினீனா இந்த கஸ்மாலும்புட்ச ஊர்கு வந்ததுலிருந்து நென்ச்சமாதிரி சட்டுனு எங்கனா போமுடில வரமுடில தூத்தெரி இன்னா வாய்க்க இது சரி அத வுடு யக்கா, அப்பால நீ எல்லாத்தியும் யார்யாரு வந்தாங்கோ இன்னான்னா துன்னீங்கன்னு கரீட்டா போட்டோ புட்சி போடு. இன்னா நாபாட்டுக்கினு சொல்லிக்கினுகீரென் நீபாட்டுக்கினு சிர்ச்சிக்கினுகீர ஐய வந்து இன்னா மேட்டருன்னு சொல்லுயக்கா.
அறுசுவை உறுப்பினர்களுக்கு அதுவும் சென்னையில் ஒரு கெட் டுகெதர் என்று கேட்க்கவே ரொம்ப திரில்லிங்காக உள்ளது!என்ன செய்வதாக திட்டம் வைத்திருக்கின்றீர்கள் எங்கு எப்போது போன்ற விவரங்கள் உள்ளதா இல்லை இனிமேல் தானா?

ஜெயந்தி மாமி,
நல்லா இருக்கிங்களா எனக்கும், உங்களையெல்லாம் பார்க்க ஆசை முக்கியமா உங்களை சாதிகா ஆன்டி,தாளிகா,மர்ழியா,ஜலீலா அக்கா,இலா,அதிரா,கதீஜா,thanisha manohari,santhoமற்றும் அனைத்து தோழிகளையும் பார்க்க ஆசை.நான் அடுத்த மாதம் வெகேஷன் வருகிரேன் insha allah.
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

மேலும் சில பதிவுகள்