மனோகரி அக்கா ஸ்கூல் லன்ச்க்கு

ஹாய் மனோகரி அக்கா எப்படி இருக்கீங்க? எனக்கு உங்க கிட்ட இருந்து ஒரு சின்ன உதவி இல்ல இல்ல பெரிய!!! உதவி வேணும் எனக்கு ஸ்கூல் லன்ச்க்கு என்ன என்ன கொடுக்கணும் ஒரு லிஸ்ட் கொடுங்க!! நாங்க ஒன்லி வெஜ் தான் சாப்பிடுவோம் ஸ்கூல் லன்ச்சில் நான் வெஜ்-ம் கொடுக்கிறாங்க அதனால் ஸ்கூலில் தினமும் வாங்க முடியவில்லை ஆனியன்,இஞ்சி,பூடு ஐயிட்டம் கொண்டு போனால் மத்த எல்லா கிட்ஸும் சம்திங் ஸ்மெல் சொல்றாங்க:-) ரைஸ் ஐயிட்டம் வேண்டாம், நோ இட்லி ,பிரட் பட்டர், பிரட்ஜாம்,பிரட் பீ நட்பட்டர் எதுவும் பிடிக்காது நூடுல்ஸ் ரெம்ப வெயிட் போடுது அதனால் பயமா இருக்கு :-( டெய்லி பாஸ்தா, மேக்கரோனி, சப்பத்தி ரோல் கொடுக்கிறேன் போர் போர் சொல்றா? அதனால் என்ன கொடுப்பது என்று மண்டைய பிய்த்து கொள்வது போல் இருக்கு:-( இந்தியன் சாப்பாடே சாப்பிட போராட வேண்டியிருக்கு!! எனக்கு இல்ல!!
நீங்க தான் எனக்கு உதவி பண்ணனும்
அப்புறம் ரெம்ப முக்கியமானது ரெம்ப கஷ்டபட்டு செய்வது போல் சொல்லாதீங்க அக்கா:-) உங்க பதிலுக்கு வெயிட் பண்றேன் தேங்ஸ் அக்கா

ஹாய் மனோகரி அக்கா எப்படி இருக்கீங்க? எனக்கு உங்க கிட்ட இருந்து ஒரு சின்ன உதவி இல்ல இல்ல பெரிய!!! உதவி வேணும் எனக்கு ஸ்கூல் லன்ச்க்கு என்ன என்ன கொடுக்கணும் ஒரு லிஸ்ட் கொடுங்க!! நாங்க ஒன்லி வெஜ் தான் சாப்பிடுவோம் ஸ்கூல் லன்ச்சில் நான் வெஜ்-ம் கொடுக்கிறாங்க அதனால் ஸ்கூலில் தினமும் வாங்க முடியவில்லை ஆனியன்,இஞ்சி,பூடு ஐயிட்டம் கொண்டு போனால் மத்த எல்லா கிட்ஸும் சம்திங் ஸ்மெல் சொல்றாங்க:-) ரைஸ் ஐயிட்டம் வேண்டாம், நோ இட்லி ,பிரட் பட்டர், பிரட்ஜாம்,பிரட் பீ நட்பட்டர் எதுவும் பிடிக்காது நூடுல்ஸ் ரெம்ப வெயிட் போடுது அதனால் பயமா இருக்கு :-( டெய்லி பாஸ்தா, மேக்கரோனி, சப்பத்தி ரோல் கொடுக்கிறேன் போர் போர் சொல்றா? அதனால் என்ன கொடுப்பது என்று மண்டைய பிய்த்து கொள்வது போல் இருக்கு:-( இந்தியன் சாப்பாடே சாப்பிட போராட வேண்டியிருக்கு!! எனக்கு இல்ல!!
நீங்க தான் எனக்கு உதவி பண்ணனும்
அப்புறம் ரெம்ப முக்கியமானது ரெம்ப கஷ்டபட்டு செய்வது போல் சொல்லாதீங்க அக்கா:-) உங்க பதிலுக்கு வெயிட் பண்றேன் தேங்ஸ் அக்கா

ஷெவேதா!! மனோகரி மேடம் இதுக்கு முன்னாடி சில/ஒரு த்ரெட்ல இது பத்தி பேசி இருக்காங்க.. பழைய த்ரெட் எதாவது போயி பாருங்க.. நேத்து எதோ தேடும் போது பார்த்த ஞாபகம்... பல நல்ல விஷயங்கள் அரட்டைக்கு நடுவில் பொதிந்து கிடக்கு.. இதோட நான் இந்த த்ரெடில் எதுவும் சொல்லலை... யாரவது இந்த குழந்தைகள் பள்ளி உணவு குறித்து சொல்லுங்க.. யாருக்காவது ஹாய் சொல்லனுமா.. வாங்கம்மா.. அரட்டை த்ரெட்டுக்கு..

"People often say that motivation doesn't last. Well, neither does bathing - that's why we recommend it daily " - Zig Ziglar

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வணக்கம் சுவேதா எப்படி இருக்கீங்க? மத்திய உணவு பற்றி லிஸ்ட் கேட்டிருந்தீங்க பள்ளிக்கூடத்திற்கு கொடுத்துவிட்ட அனுபவமில்லை ஆனால் நான் இங்கு பணிபுரிந்த போது லன்ச் எடுத்துச் சென்ற அனுபவம் எனக்கு இருக்கின்றது.ஆனால் நீங்க சைவ உணவை மட்டும் கேட்டிருப்பதால் மேலும் சுலபமாக செய்வதுப் போல் வேண்டும் என்பதால் நீங்க சாலட் அதிகம் எடுத்துச் செல்லலாம் அதை கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்காக ருசியைக் கூட்டி தினமும் கூட அதனுடன் ஏதாவது ஒரு சூப் நமது் தளத்தில் கூட இதர வகைகளில் நிறைய இருக்கின்றது அவைகளைசெய்து சிறிய தெர்மாஸ்கோப்பையில் ஊற்றி எடுத்துசெல்லலாம்.
1. சாலட் இலைகளுடன் குரூட்டான்ஸ் என்ற ரொட்டி துண்டுகள் பல்வேறு ருசியில் கிடைக்கின்றது அவற்றுடன் சாஸ் வகைகளைக் கலந்துக்கொண்டால் சுவைகூடும் வெறுப்பும் தட்டாது.
2. வேகவைத்த தானியங்கள்,பயறு வகைகள்,கடலை, பீன்ஸ் போன்றவற்றை வேகவைத்து டிரையாக ரோஸ்ட் செய்து ஒவ்வொரு நாலைக்கு ஒவ்வொறு விதமாக கலந்து கொள்ளலாம்.
3. அதேப்போல் சாலடில் பழங்களை சேர்த்து பழ சாஸையும் எடுத்துச் செல்லலாம்.
4. காய்கறிகளில் கட்லெட் செய்து பன்னில் வைத்து வெறும் சாலட்டுடன் சாப்பிடலாம்.
5. பன்னீரை கிரில் செய்து சாலட்டில் அல்லது சான்வீச்சாக கொடுக்கலாம்.
6. மெக்ஸிக்கன் வெஜிடபில் சில்லியும் ஒரு முழு உணவுதான் எனது குறிப்பில் உள்ளது,லன்சுக்கு மிகவும் ஏற்றது.
7. ரெடிமேடாக கிடைக்கும் டோர்ட்டில்லா ரோல்ஸில் ஸ்பினாச் கீரையை பஜ்ஜி அல்லது போன்டாவாகவோ செய்து கெட்சப் சேர்த்து அல்லது இனிப்புகார சட்னியில் சுருட்டி எடுத்துச் செல்லலாம்.
8. வெஜிடபிள் ஃபிரைட் ரைஸ் இதை யாருமே வெறுக்கமாட்டார்கள். அதில் நிறைய காய்கறிகளைச் சேர்த்து பிரவுன் ரைஸிலும் செய்யலாம்.
9. முட்டைக்கு பதில் உருளைக்கிழங்கு சேர்த்த பேன்க்கேக்குகள் செய்து அதனுள் பிடித்தமான காய்கறிகளை ரோஸ்ட் செய்து சுருட்டி எடுத்துச் செல்லலாம்.
10. தாளிகாத தயிர் சாதம் ஃபுரூட் சட்னியுடன் நன்றாக இருக்கும்.
11. ஒரு நாளைக்கு வேகவைத்த காய்கறிகள் மட்டுமே அதனுடன் ஏதாவது ஒரு டிப்பை தயிர் அல்லது கிரீம் சீஸைக் கொண்டு செய்து ரெடிமேடாககூட கிடைக்கின்றது அதை எடுத்துச் செல்லலாம்.
12. ஃபளாபில் என்ற அரேபிய ஸ்னாக்ஸை செய்து அதையும் ரோலாக செய்து ஒரு நாளைக்கு சாப்பிடலாம். எனது குறிப்பில் உள்ளது.
13. ஆனியன் கேக் செய்வதுண்டா இல்லையென்றால் மைதாவை பரோட்டாவிற்கு பிசைவதுப் போல் செய்து வெங்காயதாளில் பச்சைநிற பகுதிய மட்டும் பொடியாக அறிந்து தட்டிய மாவில் சிறிது வைத்து சுருட்டி மீண்டும் தட்டி சிறிய சிறிய பரோட்டாவாக சுட்டு தரலாம்.லன்சிற்கு ரொம்ப டேஸ்டாக இருக்கும்.
14. அதேப்போல் கோதுமை மாவிலும் பருப்புவகைகளை வேகவைத்து அரைத்து ரோஸ்ட் செய்து அதை ஸ்டஃப் செய்து சிறிய சிறிய பரோட்டாக்கள் செய்து எடுத்துச் செல்லலாம்.
15. ரெடிமேட் நாண் பிரட்டை துண்டுகள் செய்து காலிக்பிளவர் மஞ்சூரியனை செய்து எடுத்துச் செல்லலாம்.லன்ச்சுக்கு ரொம்பநன்றாக இருக்கும்.
16. வெர்மிசில்லி சேமியாவில் உப்புமா அல்லது கலர்ஃபுல்லான காய்கறிகளைச் சேர்த்து கிச்சடி செய்யலாம் வாசனைப் பொருட்களை மட்டும் தவிர்த்துவிடலாம்.
17. ரெடிமேட் பிஸ்ஸா ஷெல்லை வாங்கி அதில் விருப்பமான கார்கறிகள் மற்றும் சீஸை சேர்த்து வீட்டிலேகூட சாஸ் செய்து சுலபமாக பிஸ்ஸா செய்து ஒரு நாளைக்கு கொடுக்கலாம்.
18. காய்கறி சேர்த்த ரவா இட்லி மிகவும் சுலபமாகச் செய்து எடுத்துச் செல்லலாம்.
19. மிகவும் சிம்பிலாக வெண்ணெய் தடவிய பன்னில் தக்காளி,வெள்ளரிக்காய்,லெட்டியூஸ்,போன்ற பிடித்த காய்கறிகளை லேயர்சாக அடக்கி சிறிது மிளகுத்தூலைத்தூவி கூட ஏதாவது பழத்தையும் எடுத்துச் செல்லலாம்.

இவைகளில் சில செய்வதற்கு சுலபம் சிலது சற்று கடினமாய் இருக்கும் எதுவாக இருந்தாலும் முதல் நாளே செய்து வைத்துக் கொண்டால் எடுத்துச் செல்ல சுலபமாய் இருக்கும். ஆனாலும் இவையெல்லாம் ஒரு மாதிரிக்குத் தான் இடையிடையில் நமது சாத வகைகளையும் கறி வகைகளையும் சற்று மசாலாவைக் குறைத்து செய்து எடுத்துச் செல்லலாம். பூண்டு இஞ்சியை முழுவதும் தவிர்க்க வேண்டியதில்லை. முக்கியமாக பெருங்காயம் வெங்காயம் கேபேஜ் முள்ளங்கி போன்ற நெடிவரக்கூடிய வாசனைப் பண்டங்களை மட்டும் தவிர்த்தால் போதும்.இவைகள் இரவு உணவில் மட்டும் கலந்திருப்பது நல்லது.

மனோகரி அக்கா எப்படீருக்கீங்க? ரெம்ப தேங்ஸ் அக்கா சாரி அக்கா உடனே பதில் போடாததற்கு எனக்கு பீவர் எழுந்திருக்க கூட முடியவில்லை:-( உங்களுக்கு பதில் போடணும் என்பதற்க்காக ரூமை விட்டு வெளியே வந்தேன். இத இதத்தான் எதிர் பார்த்தேன் உங்ககிட்ட!!எப்படி அக்கா இப்படி பார்ட் பார்டா பிரித்து ரெம்ப அழகா கொடுத்து இருக்கீங்க ரெம்ப தேங்ஸ் அக்கா சாப்பிடாமல் வருவாள் கஷ்டமா இருக்கும்:-(

ஹாய்

மனோகரி ஆன்டி உங்களிடம் நானும் கேட்கலாம் என்று ரொம்ப நாளாக நினைத்தேன் கேட்க கொஞ்சம் ஒரு மாதிரியாக இருக்கு..இருந்தாலும் கேட்டு விடுகிறேன்..எனக்கு ஒரு குழந்தை இருந்தாலும் என் கணவர் தான் பெரிய குழந்தை..அவருக்கு தினமும் லன்ச் பாக்ஸ் கட்ட முன்னால எனக்கு போதும் போதும்னு ஆகிவிடுகிறது..அவருக்கு நம்ம ஊரு சமையல் மட்டும் தான் பிடிக்கிறது..அதாவது சாம்பார் or குழம்பு,எதாவது கூட்டு or பொரியல்..வாரத்தின் 5 நாட்களுக்கும் எதாவது பண்ண வேண்டாம். தால், சாம்பார் அடுத்தடுத்த நாட்களில் வந்தால் சிணுங்குகிறார்..தால், லெமன் சாதம், புளியோதரை செய்தால் மதியம் சாப்பிடும் போது டிரை ஆகிவிடிகிறது என்கிறார்..எனக்கும் அவ்வளவு சமைக்க வராது..அருசுவையில் பார்த்து நிறைய செய்து கொடுத்துள்ளேன். இருந்தாலும் நீங்க குழந்தைக்கு சொன்னதை போல பெரியவர்களுக்கும் என்ன கொடுக்கலாம் என்று சொன்னால் எனக்கு பெரிய உதவியாக இருக்கும்..தயவு செய்து எனக்கும் உதவுங்கள் ஆன்டி..நேரம் கிடைக்கும் போது பதில் போடுங்கள்..

மனோகரி மேடம் முன்பு கொடுத்த குறிப்பு...
அந்த த்ரெட்ல இருந்து முக்கியமான கருத்து மட்டும்...
1.பாலுடன் சேர்ந்த திட உணவாக அவர்கள் விரும்பும் கார்ன்ஃபிளேக் கொடுத்துவிடுங்கள்.கூடவே ஒரு சிறிய பழத்துண்டு போதும்.
2.நமது பாரம்பரிய உணவான மோர் சாதம் மிகவும் நல்லது.இதனுடன்வேறு எதும் வேண்டாம்.
3.இட்லி தோசை போன்ற உணவுகளை ஃபிரிட்ஜில் வைத்திருந்து சூடு படுத்தி கொடுங்கள்.
4. ஒரு நாளைக்கு வேகவைத்த காய்கறிகளை கொண்டு ஸ்டஃப் செய்த்த பரோட்டாகளின் துண்டுகளை பழஜூசுடன் கொடுக்கலாம்.
5. பால் சேர்த்த ராகிகஞ்சி ஒரு கப் கொடுத்தால் போதுமானது.
6.சப்பாத்தியில் ஜாம் தடவி உருட்டி கொடுத்தால் கூட போதும்.
7.முட்டையை ஆம்லட்டாக ஊற்றி அதன் மீது குடமிளகாயை பொடியாக நறுக்கி தூவி சிறிது சீஸைப் போட்டு மடித்து கொடுக்கலாம்.
8.ஃபிரன்ச் டோஸ்ட்டின் மூலம் குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியமான காலையுணவைக் கொடுக்கலாம்.
9. வேகவைத்த முட்டையுடன் ஒரு கப் பால் அல்லது ஜூஸ் போதுமானது.
10. ஒரு நாளைக்கு பேன் கேக்ஸ்ஸை முன்கூட்டியே செய்து வைத்திருந்து காலையில் கொடுக்கலாம்.
11. இரண்டு துண்டு பெனானா பிரட்டுடன் ஒரு சிறிய கோப்பை ஃபுரூட் ஜெல்லி போதுமானதாக இருக்கும்.
12.ஒரு நாளைக்கு பீனட் பட்டர் சான்வீச் செய்து குழந்தைகளுக்கு பிடித்தமான வடிவில் வெட்டி கொடுக்கலாம்.
13. ஒரு நாளைக்கு சீஸ் சான்வீச் மட்டுமே போதுமானதாக இருக்கும்.
14.பழங்களுடன் கேரட் போன்ற காய்களில் செய்த ம்ஃப்பினும் பாலும் சேர்த்து தரலாம்.
15. இடியாப்பம்,வேகவைத்த நூடுல்ஸ் அல்லது பாஸ்தா கையிருப்பு இருந்தால் அதனுடன் சிறிது சர்க்கரை, வறுத்து பொடித்த வேர்கடலைத்தூள்,சிறிது உருக்கிய வெண்ணெய் ஒரு சிட்டிகை ஏலப்பொடி தூவி நன்கு கலக்கி கொடுத்தால் குழந்தைகள் அதை நொடியில் காலிசெய்து விடுவார்கள்.

முதல் நாள் இரவே மைதா, வெண்ணெய் ( அல்லது எண்ணெய்), உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து பிசைந்து ஃரிட்ஜில் வைத்துவிடவேண்டும். காலையில் இஞ்சி,பூண்டு, வெங்காயம் அரைத்து வதக்கி, கரம் மசாலா, மிளகாய்தூள், வேக வைத்து மசித்த உருளைகிழங்கு சேர்த்து பிரட்டி எடுத்து ஸ்டஃபிங் ரெடி பண்ணி, முதல்நாள் இரவு ஃரிட்ஜில் வைத்த மைதா மாவை எடுத்து உருட்டி தேய்த்து ஸ்டஃபிங்கை நடுவில் வைத்து மூடி மீண்டும் தேய்த்து தோசை கல்லில் நெய் ஊற்றி சுட்டு கொடுத்தால் நிச்சயமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதை மதிய லஞ்ச்- ஆகவும் கொடுக்கலாம். இரவே மாவை பிசைந்து வைத்து விடுவதால், காலையில் வெகு சீக்கிரம் செய்துவிடலாம்.
சப்பாத்தி செய்து இரு பக்கமும் வெந்ததும் திருப்பி போட்டு சப்பாத்தியின் ஒரு பக்கத்தில் நறுக்கிய வெங்காயம், கேரட், மல்லி, சேர்த்து கலக்கிய முட்டையை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு கொடுக்கலாம்.
ரவாஇட்லி மிக்ஸ் வாங்கி வைத்துக்கொண்டு தயிர் மிக்ஸ் பண்ணி செய்து கொடுக்கலாம். தயிர் சேர்ப்பதால் வயிற்றுக்கு இதமாக இருக்கும்.
வெஜிடபிள் மசாலா கலவை நடுவில் வைத்த தோசை.
சீஸ் தோசை, பனீர் தோசை, எல்லாமே ஈஸியான ப்ரிப்பரேஷன் தானே
சர்க்கரை சேர்த்த பாலில் பூரியை போட்டு கொடுக்கலாம்.

"People often say that motivation doesn't last. Well, neither does bathing - that's why we recommend it daily " - Zig Ziglar

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நான் மீகஉம் ஒல்லியா இருக்கிரேன் குண்டாக வழி கூறவும்

மேலும் சில பதிவுகள்