முட்டை ரொட்டி

தேதி: September 20, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மைதா - 1/4 கிலோ
முட்டை - 6
சர்க்கரை - சிட்டிகை
பால் - 1/2 கப்
வெங்காயம் பொடியாக அரிந்தது - 1 கப்
நறுக்கிய பச்சைமிளகாய் - 3
அரைத்த தேங்காய்விழுது - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய மல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - சுவைக்கு
சில்லி ஃப்ளேக்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு


 

1/2 கப் பாலில் சர்க்கரை, உப்பு, சர்க்கரை ஒரு முட்டை சேர்த்து கலக்கி மைதாமாவு சேர்த்து சப்பாத்திக்கு போல் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்தமாவை உருண்டைகள் செய்து எண்ணெய் தடவி ஊற வைக்கவும்.
மீதி உள்ள 5 முட்டைகளை அடித்து கலக்கி அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சில்லி ஃபிளேக்ஸ், மல்லித்தழை, தேங்காய் விழுது உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
மைதா உருண்டையை மெலிதாக பரத்தி, அதன் மீது எண்ணெய் தடவி, மெலிதான பிரில் வைக்கவும்.
அதை வட்டமாக சுற்றி வைக்கவும்.
இப்படி எல்லா மாவிலும் தயார் செய்து விட்டு கனமான பரோட்டாக்களாக தேய்த்து சூடான தவாவில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விடவும். முட்டைக்கலவையை பரோட்டா மீது
ஒரு குழிக்கரண்டி அளவு எடுத்து பரவலாக ஊற்றவும். கீழ்பக்கம் வெந்ததும் மெதுவாக திருப்பிப் போடவும். இரண்டு பக்கமும் வேகவைத்து சூடாக சாஸ், ஊறுகாயுடன் பரிமாறவும்.


முட்டைக் கலவையில் தேங்காய் விழுது போட்டால் பரோட்டாவின் மேல் ஃப்ளஃபி ஆக வரும். மீந்த தேங்காய்சட்னி இருந்தாலும் சேர்க்கலாம். தேங்காய் இல்லாமலும் செய்யலாம். சில்லி ஃப்ளேக்ஸ் இல்லாவிடில் சமையலுக்கு பயன்படுத்தும் மிளகாய்த்தூளும் உபயோகிக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜலீலா,இதோ எங்கள் வீட்டில் செய்யும் முட்டை ரொட்டி.நீங்கள் என்ன தலைப்பில் கொடுத்துள்ளீர்கள்?
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா அக்கா,
இன்று எனக்கு முட்டை ரொட்டி மட்டுமே செய்வதற்கு நேரம் கிடைத்தது. இலகுவாகவும் இருந்தது. சின்னாட்கள் விரும்பிச் சாப்பிட்டார்கள். நான் அவர்களுக்காக வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை சேர்க்கவில்லை.

கொஞ்சநேரத்திலேயே செய்யக்கூடிய சுவையான குறிப்பு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பின்னூட்டத்திற்கு நன்றி.சின்ன ஆட்கள் விரும்பி சாப்பிட்டது மகிழ்ச்சியாக இருந்தது.இன்னிக்கு இரவு என்ன சமையல் என்று யோசிக்கும்பொழுது சட்டென்று முட்டை ரொட்டி தான் செய்யமுடியும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த முட்டை ரொட்டியின் படம்

<img src="files/pictures/aa253.jpg" alt="picture" />

அன்பு தங்கை அதிரா,முட்டை ரொட்டி படத்தைப்பார்க்கவே உடனே செய்து சாப்பிடலாம் போல் உள்ளது.என் பிள்ளைகளுக்கு கொத்துபரோட்டா மிகவும் பிடிக்கும்.இதனை நான்காக வெட்டி மிக்ஸியில் ஒரு அடித்தால் கொத்துபரோட்டாவாகி விடும்.நன்றி அதிரா.வெளியிட்ட அறுசுவை இணைய தள நிர்வாகத்தினருக்கும் நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஷாதிகா அக்கா முட்டை ரொட்டியை இந்த வாரம் செய்து பார்த்தேன், பரொட்டவிற்கு தங்கை மாதிரி இருந்தது. டேஸ்ட் நல்லா இருந்தது. அனைவரும் விரும்பி சாப்பிட்டோம்.

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி மாலினி.வீட்டில் அனைவருக்கும் பிடித்து இருந்தது என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.மிக்க சந்தோஷம்.
ஸாதிகா

arusuvai is a wonderful website