கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் பாகம் 5

தோழிகளே அந்த த்ரெட் ரொம்ப பெருசாக ஆகிவிட்டு இனி கணக்குகள் விடுகதைகள் போன்றவற்றை இங்கே தொடரலாமா? எங்க இங்க ஓடி வாங்க பார்க்கலாம்.

தோழிகளே நலமா? நான் நேற்று கேட்டவிடுகதைக்கு விடை தெரியுமா? அல்லது நானே விடை சொல்லட்டுமா? இது தான் விடுகதை ஏறு ஏறு சங்கிலி இறங்கு இறங்கு சங்கிலி எட்டாத கொப்பு எல்லாம் தொட்டுவா சங்கிலி. அது என்ன? ஒரு உதவி .இது ஒரு உயிரினம்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

எனக்கு பதில் தெரியும். சொல்லவா? இல்லை மற்றவர்கள் சொல்லும் வரை வெயிட் பண்ணவா? 'அ' வில் தொட்ங்கும். சரியா?

வத்சலா,
கடிதம் சரியான பதில்.

ஜீவி நீங்க அனில் தானே நினைச்சீங்க..உங்க 'அ' வச்சு நானே யோசிச்சேன்..சரியா தப்பான்னு வத்சலா சொல்லட்டும்...

ஜீவி நீங்கள் நினைத்தது சந்தோ கூறியதா? அதுவெனில் சரி. அணில் தான் சரியான விடை.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

அணில் தான் நினைச்சேன்.

1)ஆற்றிலே பத்து மரம். அசையுது. பிடுங்க வராது. அது என்ன?
2)ஆள் இறங்காக் கிணற்றிலே, மரம் இறங்கி கூத்தாடுது. அது என்ன?

சதாலட்சுமி
ஆள் இறங்காக் கிணற்றிலே, மரம் இறங்கி கூத்தாடுது. அது என்ன?

விடை பக்கட் (வாளி)

சதாலட்சுமி

சுகன்யா!
ஆற்றிலே பத்து மரம்: விரல்கள்
ஆள் இறங்காக்: துடுப்பு

எப்பவும் தவறாவே பதில் தர்ரன் என நினைக்கதேயுங்கோ. எப்பவாவது சரியா சொல்லுவன் என்ற நம்பிக்கை தான்.

தோழி சதாலட்சுமி தவறான பதில்பா.ஹாய் தோழி ஜீவீ,முதல் கேள்விக்கு சரியான பதில் சொல்லி விட்டீர்கள்.2வது கேள்விக்கு பதில் தப்பு.கொஞ்சம் யோசியுங்க.

மேலும் சில பதிவுகள்