இனிப்பு ப்ரெட் ரோஸ்ட்

தேதி: September 26, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரெட் துண்டுகள் - 4
முட்டை - 2
பால் - 1/2 கப்
சீனி - 2 மேசைக்கரண்டி
பட்டர் - சிறிதளவு


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் பால், சீனியை சேர்த்து நன்கு நுரை பொங்க அடித்துக் கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல் அல்லது பானை வைத்து சிறிதளவு பட்டரை போட்டு உருக விடவும்.
பிறகு அடித்து வைத்திருக்கும் முட்டை கலவையில் ப்ரெட்டை தோய்த்து எடுக்கவும்.
தோய்த்து எடுத்த ப்ரெட் துண்டை தோசைக்கல்லில் போட்டு வேக விடவும்.
ப்ரெட்டின் ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கமும் திருப்பி போட்டு மொருமொருப்பாக வந்ததும் எடுக்கவும்.
சுவையான இனிப்பு ப்ரெட் ரோஸ்ட் தயார். இதைப்போல் மற்ற ப்ரெட் துண்டுகளையும் முட்டையில் தோய்த்து எடுத்து ரோஸ்ட் செய்து எடுக்கவும்.
அறுசுவை நேயர்களுக்காக இந்த இனிப்பு ப்ரெட் ரோஸ்ட்டை செய்து காட்டியவர் <b> திருமதி. வத்சலா நற்குணம் </b>அவர்கள். செய்து பார்த்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

naanum ithe pol thaan saiven.anal coconut milk serpen.idu nalla kurippu.NANRI

Tharifa.