வெங்காய மசாலா குழம்பு

தேதி: April 1, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய வெங்காயம் - 2
சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி
பூண்டு - 6 பல்
காய்ந்த மிளகாய் - 15
சர்க்கரை - ஒரு சிட்டிகை
தக்காளி - 2
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
காய்ந்த மிளகாயை விதையெல்லாம் எடுத்த பிறகு, தண்ணீரில் கால் மணிநேரம் ஊறவிடவும்.
சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் தோலுரித்து ஒரு வாணலியில் எண்ணெய் இட்டு காய்ந்தவுடன் அதில் போட்டு வதக்கவும்.
பிறகு தக்காளியையும் நறுக்கி போட்டு நன்கு வதக்கவும்.
வதக்கியபின் எடுத்து சற்று ஆற வைத்து தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
ஒரு சுற்று சுற்றிய பிறகு ஊற வைத்துள்ள மிளகாயை சேர்த்து அரைத்தெடுக்கவும்.
பிறகு, வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து போட்டு தாளித்து அதில் பெரிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை நன்றாக வதக்கவும்.
வதங்கிய பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை போட்டு நன்றாக வதக்கவும். தேவையெனில் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
நன்றாக வதங்கி எண்ணெய் மேலாக மிதந்து வரும்போது தேவையெனில் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் அடுப்பில் வைத்து இருந்து பிறகு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்