தேவா - முடியை hot rollers பயன்படுத்தி Curls செய்வது எப்படி?

என்னிடம் hot rollers இருக்கிறது.Curl செய்து ஒரு ஒரு மணி நேரத்தில் curls போய் விடுகிறது.Curls atleast ஒரு பார்ட்டிக்கு போய் வரும் வரை இருக்க என்ன செய்ய வேண்டும்?என்னுடையது நார்மல் முடி.மற்ற தோழிகளும் தெரிந்தால் சொல்லுங்களேன்.

உங்க கூட ரொம்ப நாளா பேச வேண்டும் என்ற ஆசை உண்டு.
என்ன ஆச்சு - ஏன் இந்த பொலம்பல்?
விருப்பம் இருந்தால் mail ID தரவும்.யாரிடம் உங்கள் mail ID கிடைக்கும்.I enjoy u'r way of talking here.

RSMV உங்க பேரு என்னங்க? உங்க பேரை படிச்ச எனக்கு RMKV தான் நினைவுக்க் வருது :-( அதுக்கு என்ன கனெக்ஷன்னு கேக்க போறீங்களா? ஹிஹி.. தெரியாது. ஆமா உங்களுக்கு எப்படி இந்த கர்ல்ஸ் பண்ணிக்கணும் அப்படி எல்லம் ஆர்வம் இருக்கு?? எனக்கு எதாவது பார்டினா வழக்கம் போல போய் நின்னுட்டு வந்தா போதும்னு இருக்கும் ;-)

பாராட்டுக்கள் விதம் விதமா அலங்கரிக்கும் உங்கள் ஆர்வத்துக்கு. ஈ - மெயில் எப்படி குடுக்கறது இந்த தளத்துல?! அப்படியெ உங்க கைக்கு கிடைக்க செஞ்சேன்னாலும் ரெகுலரா பதில் போட மட்டேன். சில சமயம் உடனே போடுவென். சில சமயம் 2 மாசம் கழிச்சு போடுவென், இது எப்படி இருக்கு? பரவாயில்லனா சொல்லுங்க, உங்க விதிய யாரல மாத்த முடியும்?

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

கேட்டீங்களே ஒரு கேள்வி.. என் புலம்பலை எல்லாம் படிச்சதே இல்லியா நீங்க? தளிகா தேவா கிட்ட கேளுங்க சொல்வாங்க என் புலம்பல் திறமையை.. சும்மா வேலையை பத்தி எதுவும் தெரியாத மேனஜரோட போராடும் ஒவ்வொரு நாளும் எரிச்சல் தான்.. என்ன பன்றது ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல.. ;-)

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

நானும் உங்கள மாதிரி பொலம்பல் கேஸ் தான்.உங்களோட சில பதிவுகள் பார்த்து இருக்கேன்.அட இந்த பொண்ணுக்கும் நம்ள மாதிரி தான் போலன்னு நினைப்பேன்.
வீடு எல்லாம் வாங்கிறது சின்ன விசயமா என்ன USல? அதை எல்லாம் சென்ச்சுடு மேனேஜர் விஷயம் எல்லாம் ஜுஜுபீ இல்ல....நம்ம ஊர்வசி மகளிர் மட்டும் படத்துல நாசெற திட்டுவாங்களே அந்த மாதிரி செஞ்சுட்டு போயிகிட்டே இருக்க வேண்டியது தான்.

ஹாய் RSMV, நீங்க கேட்ட கேள்விகளுக்கு பதில் இங்கே.
1) L'Oreal ஹேர் ஸ்ப்ரே உபயோகிக்கலாம். இது தரமான பிராண்டாக இருப்பதால் முடிக்கு பாதிப்பு வராது.
2) ஹேர் ஸ்ப்ரே எண்ணெய் தேய்த்தால் போகாது. தலைக்கு எண்ணெய் வைத்தோ அல்லது வைக்காமலோ ஷாம்பூ போட்டு குளிக்கும்போது போய்விடும்.
3) ஹேர் ஸ்ப்ரே தரமானதாக இருந்தால் முடிக்கு கெடுதல் உண்டாகாது. க்ரீம் அல்லது மூஸ் போடாமல் கர்லிங் செய்தால் மட்டுமே முடி பாதிப்படையும். நம்ம ஊரில் தேங்காய் எண்ணெய் தேய்த்தால் எப்படி முடி நன்றாக இருக்கும் என்கிறோமோ அப்படியே வெளிநாடுகளில் ஹேர் க்ரீமும், மூசும் உபயோகிக்கிறார்கள். நாம் தலைக்கு ஷாம்பூ போட்டு குளிக்கும்போது, என்னதான் கண்டிஷனர் பிறகு போட்டாலும் முடியின் ஈரத்தன்மை கொஞ்சம் போய்விடும். அதை சரி கட்டவே ஹேர் க்ரீம் அல்லது மூஸ் தடவுகிறார்கள். கர்லிங் செய்யும்போது உபயோகிக்கும் ஹாட் கர்லர்ஸ் இப்படி முடியின் ஈரப்பதத்தை ஒரேடியாக நீக்கி முடியை வெடிக்க வைக்காமல் இருக்கவே( டேமேஜ் செய்யாமல்) நாம் ஹேர் க்ரீம் அல்லது மூஸ் உபயோகிக்கிறோம். இப்போது தரமான பிராண்டுகளில் விற்கப்படும் ஹேர் ஸ்ப்ரேக்களும் முடிக்கு பாதிப்பு ஏற்படாதவண்ணம் தயாரிக்கப்படுகின்றன. ஆனாலும் ஹேர் மூஸ் மற்றும் க்ரீம் முடியில் அதிக நாட்கள் இருந்தால் கெடுதல் ஒன்றும் செய்யாது. ஹேர் ஸ்ப்ரே முடி செட் ஆவதற்காக உபயோகப்படுவதால், அது ஹேர் மூஸ் மற்றும் க்ரீமைப் போல மைல்டாக இருக்காது. எனவே அதை நெடு நேரம் முடியில் தங்கவிடுவது நல்லதல்ல.

இனி சந்தேகம் வராது என்று நினைக்கிறேன். பார்ட்டிக்கு போயிட்டு வந்து ரிசல்டை சொல்லுங்க.

ஹாய் ஹேமா, எப்படி இருக்கீங்க? என்ன உங்க US மணி ரேட் ஏறி இருக்கு போலிருக்கு. இங்கே சரி டவுன். இப்பதான் கொஞ்சம் பரவாயில்லை. உங்க தலைவலி அதாங்க மேனேஜர் மக்கா இருந்து உயிரை வாங்கறாரா? இங்கேயும் இப்படி நிறைய இருக்குதுங்க.
வீட்டு வேலையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு? எனக்கு உங்க பதிவுகளைப் படிச்சா என் கஸின் ஒருத்தி ஞாபகம்தான் வரும். அவ கூட பேசிட்டு இருக்கறது மாதிரி இருக்கும். அவ முகத்தில்தான் ஹேமான்னா யோசிச்சுப்பேன் . நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஈவினிங் வேலை முடிச்சு வந்ததும் ஹஸ்பண்ட் கூட வாக்கிங் போங்க. பாதி டென்ஷன் குறைஞ்சுடும். நான் இப்பலாம் அநியாய சோம்பேறியா ஆயிட்டேன். எப்பவும் தூக்கக் கலக்கத்திலேயே இருக்கேன். உங்களை புலம்பல்னு சொல்ல மாட்டேன். ஜானகிக்கிட்ட கேட்டா சொல்வாங்க நான் எப்பேர்ப்பட்ட புலம்பல், பினாத்தல்னு.

தளிகாக்கூட பேசினாலும் ரொம்ப ஜாலியா இருக்கும்.
இந்த ரோஸ்மேரி எங்கே போனாங்கன்னு தெரியல. அம்பிகா, வாணி ரமேஷ்னு நிறைய பேரை இப்பலாம் காணோம். அறுசுவையை படிச்சுட்டு இருப்பாங்க. பதிவு போடதான் நேரமில்லைனு தோணுது.

பொறுமையாக என் கேள்விகளுக்கு பதில் தந்ததிற்கு நன்றி தேவா...கலக்கிடமாட்டேன்.

ஹாய் தேவா,எப்படி இருக்கீங்க?உங்க பையன் நலமா? உங்க பையன் சமர்த்தா இரவு நேரங்களில் தூங்க ஆரம்பிச்சிட்டார் போல.நீங்களும் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க.(குழந்தைங்க தனியா படுக்க ஆரம்பிக்கிறப்போ&மொத மொதல்ல ஸ்கூல் போறப்போ நமக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் ஆனா அவங்க கூலா இருப்பாங்க.)உங்க பதிவுகள் அனைத்தும் உபயோகமாகவும்,ரசிக்கும் விதமாகவும் உள்ளன. ............. ....... Each dawn holds a new hope for a plan,making the start of each day the of a new life.

எப்படி இருக்கீங்க? உங்க பதிவையெல்லாம் படிச்சு ரசிச்சேன். அதுவும் பட்டிமன்றத்தில் கலக்கலா எழுதி இருக்கீங்க? நிறைய விஷயத்தில் கருத்துக்கள் ஒரே மாதிரி இருக்கேன்னு ஆச்சரியமா படிச்சேன். என் பையன் நல்லா இருக்கான். இன்னும் தனியாலாம் படுக்க பழகல. ஆனால் என்னைப் பிடிச்சுட்டு தூங்கற பழக்கம் இப்போ இல்லை. நீங்க சொல்றது சரிதான். அவன் கூலா இருக்கான். எனக்குதான் அவன் மீண்டும் குட்டிப் பாப்பாவா மாற மாட்டானான்னு இருக்கு. நான் உங்ககிட்ட பேசணும்னு நேத்து நினைச்சேன். நீங்க இன்னைக்கு எனக்கு மெசேஜ் டைப் பண்ணியிருக்கீங்க. அட இதுல கூடவா ஒற்றுமைனு சிரிப்பா இருக்கு. பிரதிபாலாவுக்கு ஒரு பெரிய மெயில் பண்ணனும்னு நினைச்சேன். இனி அது வெள்ளிக்கிழமைதான் முடியும் போல. பிறகு பேசலாம். உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி.

உங்கள ஒரு வழியா இங்கதான் பிடிக்க முடிந்தது.எனது சுருட்டை முடிக்கும் நீங்க சொன்ன மெத்தேட் பொருந்துமா.முடிந்தால் பதில் தாருங்கள்.
பர்வீன்

மேலும் சில பதிவுகள்