பொரிச்ச குழம்பு

தேதி: October 2, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வேக வைக்க :
பாசிப்பருப்பு - 1.5 டேபிள் ஸ்பூன்
குழம்பில் சேர்க்க காய்-
கத்தரிக்காய்/முருங்கைக்காய்/அவரைக்காய் = ஏதாவது ஒன்று அல்லது எல்லாம் சேர்த்து = 200 கிராம்
அரைத்துக் கொள்ள :
சிவப்பு மிளகாய் - 6
சீரகம் - 1 ஸ்பூன்
தேங்காய்ப் பூ - 1.5 டேபிள் ஸ்பூன்
பூண்டு பல் - 3
சின்ன வெங்காயம் - 9
குழம்பில் கடைசியில் சேர்க்க :
எலுமிச்சம்பழம் 1 - சாறு எடுத்துக் கொள்ளவும்.
தாளிக்க :
நெய் - 1 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிது
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - ருசிக்கு தகுந்தபடி


 

பாசிப்பருப்புடன் நறுக்கிய காய்களை சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
மிளகாய், தேங்காய்ப்பூ, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் எல்லாவற்றையும் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வெந்த பருப்பு, காய்களுடன் அரைத்தவற்றை சேர்த்து, குழம்பு பதத்துக்குக் கரைத்து, அடுப்பில் வைக்கவும்.
3 முறை பொங்கி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். ரொம்ப நேரம் கொதித்தால், குழம்பு கடுத்துப் போய் விடும்.(ருசி மாறி விடும்)
பின் வாணலியை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, தாளித்துக் குழம்பில் சேர்க்கவும்.
இன்னும் சிறிது நெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் போட்டு, வெடித்ததும் அதையும் குழம்பில் சேர்க்கவும். கடைசியாக எலுமிச்சம்பழச்சாறு சேர்க்கவும்.


இந்தக் குழம்பு புளி, துவரம்பருப்பு சேர்க்காமல் செய்வதால் விரதத்துக்கு உகந்தது.

மேலும் சில குறிப்புகள்


Comments

நாங்களும் பொரிச்சகுழம்பு இப்படித்தான் செய்வோம். நிங்க சொன்னதுபோல புளி
துவரம்பருப்பு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதுபோல விரதத்துக்கு
சேர்க்கணும்னா பூண்டு, வெங்காயமும் சேர்க்க மாட்டோம்.
சந்தோஷி மாதா விரதம் போது இந்தக் குழம்புதான் செய்வேன். அந்த விரதத்
திற்கு புளி சேர்க்கக்கூடாது, அதுபோல பூண்டு, வெங்காயமும் கூடாது.

சீதாம்மா... இந்த குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.. எங்கப்பாக்கு மிகவும் பிடித்த குழம்பு இதுதான்... ஆனால் வீட்டில் பாசிப்பருப்பு சேர்த்து செய்ததில்லை.. நான் பாசிப்பருப்பு சேர்த்து செய்து பார்த்துவிட்டு கூறுகிறேன். குறிப்புக்கு மிக்க நன்றிம்மா.... எனக்கு இத பாத்ததும் அப்பா ஞாபகம் வந்திருச்சு....ம்ம்ம்ம்ம்...... எனக்கு அப்பா வேணும்ம்ம்ம்ம்...........
என்னோட விருப்ப்பட்டியலில் சேர்த்துவிட்டேன்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ரொம்ப அருமை சீதாலக்ஷ்மி மேடம்.... இதில நான் ஆஸ்பராகஸ் ( Asparagus) வைத்து செய்தேன்.. ரொம்ப நல்லா இருந்தது

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ரொம்ப நன்றி இலா, பின்னூட்டம் அனுப்பியதற்கு, Asparagus)என்றால் என்ன

அன்புடன்

சீதாலஷ்மி

ஆஸ்பரகஸ்.. இங்க தான் பார்த்து/சாப்பிட்டு இருக்கேன். ரொம்ப நல்ல டேஸ்ட் வெந்த/க்ரில்ட்/சாட்டே காய் நல்ல மணமாக இருக்கும். நம்ம கறி போல செய்தால் இன்னமும் ருசிதான்
http://www.asparagus.com/

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..