ஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் ( பாகம் 19)

ஹாய் ஹாய் ஹாய் மாசங்கள் கழித்து உங்களோட கலாய்க்க வந்து இருக்கேன்

கலாய்க்க நான் ரெடி நீங்களாம் ரெடியா?

முந்தைய பதிவுகள் அதிகம் ஆகி விட்டதால் புதிதாக இதை தொடர்ந்துள்ளேன் யார் முதலில் ரிப்பன் கட் பண்ன போகிறீங்க?வாங்க சீக்கிரம்..

H4 கைதி என்றால் H4 விசாவிற்கு work permit கிடையாது. நீங்கள் படித்து இந்தியாவில் வேலை பார்த்து இருந்தாலும் இங்கு(US) வந்தால் உங்களால் வேலைக்கு செல்ல முடியாது. இதைதான் எல்லாரும் H4 கைதி என்று குறிப்பிடுகிறார்கள்.

அன்புடன்
லக்ஷ்மி

அன்புடன்
லக்ஷ்மி

அன்பு மணி,
உன் மெயில் எனக்கு வரலையே? எந்த ஐடிக்கு அனுப்பினே?
குழந்தை எப்படி இருக்கு? இப்ப நிலைமை நார்மலாகி விட்டதா? பாவம்பா, குழந்தையை வெச்சுகிட்டு ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பீர்கள்.
என் ஐடி senreb அட் ரெடிஃப்மெயில் டாட் காம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

உங்கள் மகனுக்கு இப்ப எப்படி இருக்கு?நலமா இருக்காரா?

ஆம்,அருசுவை முன்பு போல் இல்லை என்பது உண்மைதான்.

arusuvai is a wonderful website

climate change ஆகுதுல,அதனால் குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல் அவதிப்படக்கூடும்.இந்தியால இப்ப எப்படின்னு தெரியல.பயப்படாதீங்க.வேளாவேளைக்கு மருந்தை கொடுங்க.சீக்கிரம் சரியாகிடும்.கவலை வேண்டாம்.
அப்புறம் தோழி இது பொதுதளம் என்பதால் நம் தோழி மனதில் பட்டதை கூறியுள்ளார்.அதற்காக நீங்க கிறுக்கறதை நிறுத்தாதீங்க.

அவங்கவங்க விருப்பதிற்க்கு ஏற்ப ஒரு சில பதிவுகளில் பதில் போடுறாங்க.யாரையும் யாரும் வற்புறுத்த வில்லை.இதனால் பல பேரின் ஆதங்கம்(பட்டிமன்றத்தில்),ஏக்கங்கள்,நினைவுகள்,சந்தோஷங்கள் வெளிக்கொணரப்படுகின்றனர்.
அட்மினே தவறுன்னா உடனே ஒரு ஸ்பீட்ப்ரேக் போட்டு விடுவார்.இப்ப தான் அறுசுவை கலை கட்டுது.இல்லாட்டி எப்பவும் தூங்குமூஞ்சி மாதிரி இருக்கும்.
பட்டிமன்றத்துல அதிகப்பட்சம் 80 பதிவுகளோடு முடிச்சிட்டு அடுத்த தலைப்ப தொடரலாம்.ஏன்னா வாதிச்சதையே திரும்ப வாதிக்காம தவிர்க்கலாம்.

மணி சாரா, நலம். நீங்கள் நலமா?
இலா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
மர்ழியா வின் பெண் அம்மா போல் குரும்பா?

செல்வி அக்கா எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா உங்ககிட்ட பேசனும்னு இருக்கேன், ஆனா முடியலை, எந்த திரட்டில் எழுதரேன்னு எனக்கே தெரியமாட்டேங்குது. மாங்காய் கிடைக்கும் போதெல்லாம் துவையல் பண்ணிடுறேன், ரொம்ப நல்லா இருக்கிறது, நன்றி. எப்போல்லாம் என் கணவர் கருனைக் கிழங்கு, மல்லாட்டைன்னு சொன்னா நல்லா கிண்டல் பண்ணிவிடுவேன், உங்க குறிப்பை எல்லாம் பார்க்கும் போது நீங்க சேலம்னு தோனுது , நீங்க எப்டி சமாளித்தீர்கள்? பாண்டியில் எங்கு இருக்கறீங்க? ஊருக்கு வந்தால் உங்க வீட்டிற்கு வரலாமா? சும்மா கேட்டேன், பயந்துடாதீங்க.

ஜெ மாமி...... என்ன மாமி உங்களே ரெண்டு நாளா காணும் ....எல்லாரும் உங்களை தான் தேடிட்டு இருகாங்க சிக்கிரமா வாங்க மாமி ...
என்ன மரிழி உங்க வீட்டு பக்கம் எதாவது மாமி வந்தாங்களா ....:)...பாத்து மாமியே பத்திரமா அனுப்பி வைங்க .....

செல்விமா நல்ல இருக்கீங்களா ?...சிக்கிரமா மெயில் பண்ணறேன் ....நல்ல ரெஸ்ட் எடுங்க

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ஹாய் ஹாசினி,

ஜெயந்தி ,மாமி கொஞகம் பிசியா இருக்க்காங்களாம். இப்போது தான் பேசினேன்.நளைக்குள்ள பதில சொல்லிடுவங்க பா. யாரும் அவங்களை தேட வேண்டாம். வர வேண்டிய நேரதுல கரக்கட்டா வந்துடுவாங்க. நல்ல பதில தந்துடுவாங்க.

அன்புத்தோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

ஹைய் சுஹைனா, நான் அன்றைகே மெயில் பண்ணிட்டேம்பா. நம்பரும் கொடுத்தேன். செக் பண்ணுஙக.இப்பொ உஙளுக்கு கால் பண்ணினேன் ஏன் எடுக்கல. உங்க போன் ல இருக்கு பாருஙாக என் நம்பர்.

மேலும் சில பதிவுகள்