குழந்தையின் திடீர் கால் வலி

எனது 2.8 வயது மகள் நன்றாக விளையாடி ஆடி ஓடக் கூடியவள்.இன்று காலை எழுந்து ஏதோ காலில் முள் குத்தியது போல குதிகாலை தூக்கிக் கொண்டு நின்றாள்.எதுவோ ஏறி விட்டதோ என்று தேடினேன் காணோம்..பிறகு தூங்கி விட்டாள் எழுந்தபின் பார்க்கலாம் என்று விட்டு விட்டேன்..எழுந்த பின் நொண்டினாள்..பயந்து விட்டேன்...ஆனால் எந்த வருத்தமோ அழுகையோ இல்லை நொண்டி நொண்டி நடக்கிறாள்..வலிக்கிறது என்று கேட்டால் மட்டும் சொல்கிறாள்..சிறித்துக் கொண்டே சொன்னதால் சும்மா என்னை ஏமாற்றுகிறாள் என விட்டு விட்டேன்.
பின் தவழ்ந்தாள் நான் ரொம்ப பயந்து விட்டேன் அப்பொழுதும் அதே சிரிப்பு அதே நோண்டல் தான்..குறும்பில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் நோன்டினாள்..காலில் தைலம் போட்டு விட்டு மதியம் திரும்ப தூங்க வைத்தேன்..தூங்கி எழுந்த பின் முட்டி இரண்டையும் மடக்கிக் கொண்டு குனிந்து குடிந்து நிமிராமல் நடக்கிறாள்.
இன்று ஒரு நாள் பார்த்து விட்டு நாளை காலை மருத்திஉவரிடம் கொண்டு செல்ல இருக்கிறேன்...மற்ற எந்த கம்ப்லெயின்ட்டும் சொல்வதில்லை அமைதியாக தூங்குகிறாள்..எதனால் இந்த வலி??
இன்றே மருத்துவரிடம் போக இருந்தேன் ஆனால் ஒரு பக்கம் பயம் எதுவும் மருந்து ஊசி என குத்தி இல்லாத நோயை வாங்க வேண்டாமே பொறுPPஓம் என இருந்து விட்டேன்.
நான் சந்தேகிக்கும் சில காரணங்கள்:
1)2 நாட்களுக்கு முன் சைக்கில் வாங்கினோம்..அது கொஞ்சம் அவள் கால் எட்டாமல் இருந்தது என்றாலும் அவள் அடம் பிடித்ததால் கொண்டு வந்தோஷம் அதில் 25 நிமிடமாவது விளையாடியிருப்பாள்..அதனால் தொடையில் ஏதும் ஸ்பெரியின் ஆகி இருக்குமோ??சைக்கில் ஓட்டி அடுத்தநாள் வராமல் 2 நாள் கழித்து வலி வருமா?
2)வாரத்தில் ஒரு நாளாவது ஒரு கண்ணாடியை உடைப்பாள்..அதில் ஏதாஅவ்து சில் கண்ணுக்கு தெரியாமல் உள்ளே போயிருக்குமோ?
3)தினசரி செய்யும் சின்ன காரியங்களுக்கு கூட அவளுக்கு பொறுமை இல்லை..ஒரு சேரில் ஏற கூட சும்மா ஏறாமல் ஓடி வந்து தான் ஏறுவாள்..அப்பப்ப டமார் டிம்மிர்னு முட்டிக் கொண்டு தான் ஏறுவாள்..அப்படி எதுவாவது பட்டிருக்குமோ?
இப்பொழுது அவள் கால் இரண்டையும் நடுவில் 1/2 அடி இடைவெளி விட்டு விரித்துக் கொண்டு முட்டியையும் மடக்கிக் கொண்டு குனிந்து நடக்கிறாள்....மருத்துவர் சொல்லும் முன்பே உங்களது ஆலோசனை எனக்கு மிகவும் அவசியம்.
இப்படி ஏதும் அனுபவம் உண்டா?எனக்கு ரொம்ப பயமாக தான் இருக்கு.

இன்று தூக்கம் வராமல் விழித்து உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்..

அதுவோ இதுவோ என்று நினைப்பதற்கு பதில் உடனடியாக டாக்டரிடம் கொண்டு செல்லலாமே

ஹாய் பானு நலமா.முன்ன எப்பவாவது வந்து லொடலொடம்பீங்களே நான் அதை ரசிப்பேன் இப்போ ஏன் வருவதில்லை?.அதாவது பானு இவளது டாக்டர் ஒரு டைப்பான ஆள் ஆனால் ரொம்ப நல்ல கவனிக்கக் கூடியவர்..எப்பவும் சொல்லுவார் மூக்கு ஒழுகுவதற்குள் மருந்து கொடுங்கோ,பசிக்கவில்லை மருந்து கொடுங்கோ,தூக்கமில்லை மருந்து கொடுங்கோ என்று எல்லாத்துக்கும் அம்மாமார்கள் டாக்டரிடம் ஓடி வராதீங்க.முதலில் காரணம் என்னவென்று அம்மாவுக்குஇ தெரிந்திருக்கனும் என்பார்.ரொம்ப முடியலை என்றால் தான் மருந்தே வரும் அவரிடமிருந்து கூடவே சொல்வார் மருந்து அடிக்கடி குடிப்பது நல்லதல்ல அது இல்லாமலேயே மாற்ற பாருங்கள் என்பார்.இத்தனைக்கும் சொந்த ஃபார்மசி உண்டு.
போன முறை இவளௌக்கு லூஸ் மோஷன் என்னிடம் எதனால் என்று கேட்டால் நான் பெரிய இவளாட்டம் என்னனே தெரீல டாக்டர் நான் எதுவும் வித்யாசமா கொடுக்கல தானா வந்தது என்றேனே எனக்கு நல்ல டோஸ்.தானா வராது எதுவாவது கண்டிப்பாக ஒத்துக்காதது கொடுத்திருப்பீங்க அதான் என்றார்..பிறகு தான் வீட்டுகு வந்து யோசித்தேன் சிப்ஸ் தான் கொடுத்தேன் அதான் ஒத்துக்கலை.
நேற்று அவரைக் கூப்பிட்டேன் இதே கேள்வி திரும்பவும் எங்காவது விழுந்ததா இருந்தா 2 நாளில் சரியாகிடும்,குத்தியிருந்தா எடுத்து விடுங்க மத்தபடி வலியோ அல்லது குழந்தை துவண்டு போவது போல் இருந்தால் மட்டும் மருத்துவரிடம் கொண்டு போங்க என்று ஒரே போடு.
அதான் இருந்து விட்டேன்.இப்போ வரை அவள் ஒரு கம்ப்லெயின்ட்டும் செய்யவில்லை ஆனால் இன்னும் நொண்டுகிறாள்.
ஆனால் திடீரென அவளுக்கு பிடித்த ரைம்ஸ் வந்ததும் எழுந்து நாலு ஆட்டம் நாலு குதி அப்ப வலி இல்லையாம்:-)
அது முடிந்து திரும்ப நொண்டல்.இனி உங்க பதில்களைப் பார்த்தபின் ஒரு 12 மணி அளவில் தான் கொண்டு செல்வேன் மருத்துவரிடம்.கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறதா என்று பார்ப்போம்

வளருகின்ற குழந்தைகளுக்கு முட்டி வலி வருவது சகஜம் இதைற்கு பயப்படத் தேவையில்லை. குழந்தைக்கு முறைப்படி எல்லா தடுப்பூசிகளும் போடப்பட்டிருந்தால் பயப்படவே வேண்டாம். சுடு நீரில் ஒத்தடம் கொடுங்கள். மெதுவாக காலை பிடித்து விடுங்கள் அது போதும்.மருத்துவரும் இதைத்தான் சொல்லுவார் ஆகவே பயப்படாமல் செக்கப்பிற்கு போய்வாருங்கள்.

தளிகா ஏதாவது டாய்ஸ் குத்தி விட்டதானு பாருங்கள்.
இல்லை தடை விரித்து நடக்கிறாள் என்றாள் ரேஷ் ஏதும் இருக்கான்னு பாருங்கள்.குழந்தைஅக்ளுக்கு சைக்கிள் தீருன்னு பழகும் போது கூட ஸ்ரெயின் ஆக தான் செய்யும்.
வலி பாதத்திலா(அ) தொடையிலா (அ) முட்டியிலா என்று பாருங்கள்.
நல்லெண்ணை சூடுபடுத்தி தேய்த்து விட்டு சூடான வெண்ணிரில் குளிக்க வைத்து பாருங்கள்.
பெஸ்ட் முதல் டாக்டர் கிட்ட போங்க.
ஜலீலா

Jaleelakamal

பொண்ணு எப்படி இருக்கா இப்போ. இதுக்காக எந்த ட்ரீட்மெண்ட்டும் தேவையில்லை. ஆனால் டாக்டர் கன்சல்டேஷன் அவசியம். எம்பொண்ணும் இப்படித்தான் 10 மாத்திலேயே நல்ல நடக்க தொடங்கி விட்டாள் அப்புறம் ஒரே ஓட்டம்தான். திடீரென்று நடப்பதை நிறுத்தி விட்டு தவள ஆரபித்தாள். சும்மதான் ஏதோ பண்ணுகிறாள் என்று நான் கேர் எடுக்கவில்லை. எந்திரிச்சு நிப்பாள். நடக்கமாட்டா. சந்தேகம் வந்து இங்குள்ள nmc க்கு கூப்பிட்டு போனோம். டாக்டர் பயப்பட தேவையில்லை. மருந்தும் தேவையில்லை என்று அவள் இருகாலை நீவி விட்டார்.(நாம் முயற்சிக்க கூடாது. குழந்தையுடையது பிஞ்சி காலல்லவா). அன்று மாலையே சகஜமாக நடக்கத் தொடங்கி விட்டாள். நீங்கள் கவலைப்பட வேண்டாம். டாக்டரை கன்சல்ட் பண்ணுங்க.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹலோ தளிகா,
"இப்பொழுது அவள் கால் இரண்டையும் நடுவில் 1/2 அடி இடைவெளி விட்டு விரித்துக் கொண்டு முட்டியையும் மடக்கிக் கொண்டு குனிந்து நடக்கிறாள்....மருத்துவர் சொல்லும் முன்பே உங்களது ஆலோசனை எனக்கு மிகவும் அவசியம்" என்ற பதிவினை பார்த்தவுடன் திடுக்குற்று என் பதிலை எழுதினேன் ,மற்றபடி உங்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது,ஏனெனில்,நான் அறுசுவை அங்கத்தினராக இருக்கும் காலம் : 3 வாரங்கள் 3 நாட்கள் மட்டும் தான் அதுவும் கடந்த சில நாட்களாக மட்டும் தான் பதிவிட ஆரம்பித்து உள்ளேன்.நான் எப்போது உங்களுடன் லொடலொட என்று பேசினேன் ???
மற்ற தோழிகள் கூட டாக்டரிடம் கொண்டு செல்ல சொல்லியுள்ளதை பார்க்கவும்

எப்படி இருக்கீங்க. ரீமா என்ன செய்கிறாள்.இந்த பதிவை பார்த்ததும் கஷ்டமாக இருந்தது 2 நாள் முன்னாடி உங்க கிட்ட போனில் பேசும் போது தானே சைக்கிள்ல விளையாட கூட்டிட்டு போனதை சொன்னீங்க இப்ப என்ன ஆச்சு நான் நினைக்கிறேன் சைக்கிள் எட்டாமல் காலை நீட்டி ஓட்டி இருப்பா அதனாலையும் இருக்கும்.அப்புறம் வளர்றதுக்கு கால்வலிக்கும்னு சொல்லுவாங்க என் பையன் ஊருக்கு போய் இருக்கும் போது 3 வயசுல கால்வலின்னு ஒரே அழுதான் டாக்டர்டயும் காமித்தேன் பயமில்லைன்னு சொல்லிட்டாங்க. ஆனால் இவள் காலை விரித்து நடக்குறதால காமித்துங்க உண்டனே சரியா. பதில் போடுங்க டாக்டர்ட போய்ட்டு வந்து.

அன்புடன் கதீஜா.

இந்த த்ரெட் எனக்கு இப்ப தான் திறந்தது..இப்பொழுது சற்றி வித்தியாசம் தெரிகிறது.இன்று மருத்துவரிடம் கொண்டு செல்வேன்.இன்று கொஞ்சமாக காலை நிமிர்த்தி லேசாக முட்டியை வளைத்து நடக்கிறாள்..
நேற்று இரவு அவள் தூங்கியபின் காலை அப்படி இப்படி அசைத்துப் பார்தென்...முட்டியை மடக்கும்பொது அல்லது தொடையை பாதத்தை தொட்டாலோ எல்லாம் அவள் ஒன்னும் செய்யலை..ஆனால் கால் இரண்டையும் கூட்டி வைத்தால் சினுங்குகிராள்..அதிலிருந்து புரிந்தது இரண்டு தொடையின் மேல் ப்குதியில் கால் சேரும் இடத்தில் தான் வலி..
இன்று இந்த காரணம் தெரிந்ததால் மருத்துவரிடம் கேட்கலாம்.பதில் சொன்ன அனைத்து தோழிகளுக்கும் எனது நன்றி..ஆமாம் அவளுக்கு வேக்சின் எல்லம் சரியாக போட்டாச்சு...
பாணுன்னு இங்க ஒருத்தர் வருவாங்க எப்பவாவது அவங்க தான்னு நெனச்சு தான் உரிமையோட பேசிட்டேன் மத்தபடி நீங்க சொன்னதில் எந்த தவறும் இல்ல.எனக்கு சந்தோஷம் தான் முதலில் ஓடி வந்து உதவியதற்கு

பயப்படாதே!கொஞ்ச மாசத்துக்கு முன் என் இவளுகும் இப்படிதான் ஆச்சு..நைட்டோட நைட்டா 12 மணிக்கு டாக்டர்ட்ட தூக்கிட்டு ஓடினேன் ஹாஸ்பிடல் போனதும் அவ ஆட்டம் தாங்கல..ஒரே சிரிப்பு..அனைவரோடும் பேச்சுன்னு நானே அசந்துட்டேன் டாக்டர் கேட்டா என்ன சொல்லனு டாக்டரிடம் அவளாகவே லொட லொடன்னு பேச ஆரம்பிச்சுட்டா..அது போல டாக்டரும் இந்த பொண்னுக்கா நோயின்னு கொண்டு வந்தீங்கன்னு கேட்டார் நான் நடந்ததை சொன்னேன் எனக்கு ரொம்ப பயந்தது போலியோ அட்டாக்க்காக இருக்குமோன்னு (ஆனா ஒரு டைம் கூட தடுப்பூசி போட ஒருநாள் கூட பிந்தியது இல்லை..அந்த விதத்தில் இருக்காதுன்னு தைரியம் ஆனாலும் உள் மனசில் பயம்)இந்த வயதில் இப்படி வருவது சகஜம்தானாம் மனோகிரி மேம் சொன்னது போல சோ பயம் ஒன்னும் இல்லை சரியாகிடும்னு சொல்லிட்டார்..நீ எதுக்கும் நம் நிம்மதிக்காக அவர் திட்டினாலும் காதில் வாங்காதே(மர்யம் டாக்டரும் இப்படிதான்)போய் பார் அவர் இன்னும் இல்லைனா பிராப்லம் இல்லையே யோசித்துட்டே இருந்தா தேவை இல்லாதது எல்லாம் மனசை குழப்பும்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்