இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொலை செய்யப்படுவதற்கு கண்டனம்

இலங்கையில் நடக்கும் போரைத் தொடர்ந்து அங்குள்ள அப்பாவி தமிழர்கள் தாக்கப்படுவதும், உடைமைகளை இழந்து செல்வதற்கு இடமின்றி நிர்கதியாய் அவர்கள் இருப்பது குறித்தும், இலங்கை வாழ் அறுசுவை உறுப்பினர்கள் இருவர் எனக்கு உருக்கமாக மின்னஞ்சல் அனுப்பியிருக்கின்றார்கள்.

போருக்கு கண்டனம் தெரிவித்தும், இந்த பிரச்சனையில் உடனடியாக இந்திய அரசு தலையிட்டு இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்யச் சொல்லி வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. தமிழக முதல்வரும் பிரதமருக்கு நேரடியாக அனைவரும் தந்தி அனுப்புங்கள் என்று அறிவிப்பு கொடுத்துள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் தொடர் தந்திகள் கொடுத்து வருகின்றன. இந்திய அரசும் இலங்கை தூதுவரை அழைத்து பேசியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

இந்நிலையில் நாமும் இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தை இவ்விடம் தெரிவித்து, அங்கே துயரில் இருக்கும் நமது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு நமது நேசக்கரம் நீட்டுவோம். அரசியல்வாதிகளாய் யோசிக்காமல், அங்கே பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு உண்மையாக நம்மால் செய்யக்கூடியது ஏதேனும் இருந்தால், அதனைப் பற்றியும் இங்கே கருத்துக்கள் தெரிவிக்கலாம்.

ஏன் இன்னமும் தேவையான உதவியை ஐநா சபை செய்யவில்லை... டார்பரில் நடக்கும் இனபடுகொலை இவ்வளவு வெளிச்சதுக்கு வந்திருப்பது போல ஏன் மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு இல்லை... தமிழர்களை மனிதர்களாக நினத்து இந்திய அரசாங்கம் உதவலாமே... எனக்கும் பல இலங்கை தமிழ் நண்பர்கள் உண்டு..இந்த டாப்பிக் யாருமே பேசமாட்டார்கள்...மனதுக்கு மிகவும் கஷடமாக இருக்கும்.. நானும் பல வலையுலக பதிவுகளை படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்... என்னால் இயன்ற உதவியை செய்ய தயாராய் இருக்கிறேன்... Please let me know how I can contribute.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அகதிகளாய் தமிழ் நாடு வருவதும்,வரும்போதே நடுக்கடலில் உயிரை விடுவதும்,எவ்வளவு கொடுமை,அவர்கள் சொந்த மண்ணில் நிம்மதியக வாழ நாம் ஒத்துழைக்க வேண்டும்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

DEAR & LOVING Mothers,Sisters, Fathers & Brothers...I Couldn't control myself when i write this massage to this page..... :(

We are begging YOU... Please HELP US.....we are dying day by day....

PLEASE send atleast ONE telegram to your Hon.PM according to your Hon.CM requests,(TO STOP THIS BOOLDY WAR AGAINST US) bcos we r helpless in vanni(sri lanka).. Every day we r killing by Air and Mortaring attacks..

plz help for ur Sisters and Brothers...we still have hope that you will help US. Dont be delay to send a telegram to your Hon.PM........

OUR LIVES ARE ON YOUR HANDS NOW. All UN Organitations had withdrawn their HELPs from VANNI 2Weeks b4).... PLZ DO IT AS SOON AS POSSIBLE....pass this to ur close friends... WE WILL NEVER FORGET YOUR HELP UNTILL WE LIFE IN THIS WORLD...

தானாடா விட்டாலும்
சதையாடும் என்பதுவாய்
வானாடக் குரல் தந்து
வளம் சேர்த்த தமிழகமே!
தேனாடும் செந்தமிழாலே
தெவிட்டாத நன்றி பல
கூனாது நின்தன் பணி
குறையின்றித் தொடர்ந்தருள்க!
(Thank you...lankasripoems.com)

<a href="http://www.tamilwin.com/view.php?2aIWnfe0dlj0g0ecQG7V3b4X9EO4d3g2h2cc2DpO3d436QV3b02ZLu3e" target="_blank">http://www.tamilwin.com/view.php?2aIWnfe0dlj0g0ecQG7V3b4X9EO4d3g2h2cc2DpO3d436QV3b02ZLu3e</a>

"ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே"

அன்பு ஈழவன் அவர்களுக்கு,

உங்களின் துயரத்தை நாங்கள் அனுபவித்திராதபோதிலும், கண்ட காட்சிகள் மூலமும், கற்பனையின் மூலமும் அதனை உணர முடிகின்றது. இருந்தாலும் நிஜத்தில் நீங்கள் அனுபவிக்கும் வலி கொடியது. அது உங்கள் வார்த்தைகளில் தெரிகின்றது. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், நாங்கள் என்ன செய்வது என்றறியாது திகைத்து நிற்கின்றோம்.

தந்திகள் அனுப்புவது என்பது ஒரு கவனஈர்ப்பு யுக்தி. பிரதமரோ, பிரதமர் அலுவலகமோ எல்லாவற்றையும் படிக்கப் போவதில்லை. வேண்டுமென்றால் புள்ளிவிபரங்களுக்காக எண்ணிக்கை கணக்கிடப்படலாம். தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் இந்த விசயத்தில் தற்போது ஓரணியில் நின்று, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளது. டெல்லியை அதிர்விக்க இதுவே போதுமானது. இந்திய அரசு இந்த பிரச்சனையில் தலையிட்டு, அதன்மூலம் ஒரு சுமூக தீர்வு ஏற்பட்டு, உங்களின் இயல்பு வாழ்வு மீண்டும் உங்களுக்கு கிடைக்கவே நாங்கள் விரும்புகின்றோம். வெகுவிரைவில் கிடைக்குமென்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. நீங்களும் நம்பிக்கை இழக்க வேண்டாம். இந்த தருணத்தில், இரு நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, நாங்கள் உங்களுக்கு வேறு ஏதேனும் உதவிகள் செய்ய இயன்றால் நிச்சயம் செய்கின்றோம். அப்படி எதுவும் தேவை இருப்பின் இங்கே நீங்கள் தெரிவிக்கலாம்.

மிகவும் வேதனையானது இன்னமும் தீர்வு இல்லை என்ற நிசம். எனக்கு சமீபகாலமாகத்தான் இலங்கை நண்பர் மூலம் அமைதி படையின் அட்டகாசங்கள் அதிக அளவில் தெரிய வந்தது.

எனக்கு இது பல நாள் விடை காணா என்னை வாட்டும் கேள்வி...
ஏன் தமிழன் எங்கும் அடி படுகிறான், சொல்லறா துன்பம் அடைகிறான்?

அன்பின் இலா,
ஐ.நா உதவவில்லையா என கேட்டிருந்தீர்கள். ஐ.நாவை இலங்கை அரசாங்கம் வன்னியிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டு அது வெளியேறிவிட்டது. மற்ற உதவி நிறுவனங்களையும் போகச் சொல்லி விட்டு அவையும் போய்விட்டன. ஐ.ந அதிகாரியே அரசாங்கம் சொல்லிவிட்ட பிறகு தம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று கவலைப்பட்டதாக படித்தேன். நான் அங்கிருக்கும் போது வேலை செய்தது ஒரு மனிதநேய அமைப்பில்தான். எனவே அங்குள்ள நிலமை எனக்கு நன்றாகவே விளங்கும். முன்பு மாதிரி இப்பொழுது சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு அங்கு மதிப்பில்லை.

வன்னியில் தினமும் வான்குண்டு தாக்குதல்தான் என்று படிக்கிறேன். மருத்துவ உதவிகள் இல்லை. உணவு பற்றாக்குறை..........இது எங்குபோய் முடியுமோ தெரியவில்லை. எனது சொந்தங்கள் கூட வன்னியில் கிடந்து அல்லல் படுகின்றனர். இந்த பிரச்சனை பற்றி நிறய சொல்லலாம். எங்கு தொடங்குவது என்கு முடிப்பது என்பதுதான் தெரியவில்லை.
-நர்மதா.
பி.கு: மிகவும் நன்றி பாபு அண்ணா. இப்படி அறுசுவையிலும் ஒரு பதிவாக இதை போட்டதற்கு. நான் எத்தனையோதரம் இலங்கை பிரச்சனை பற்றி இங்கு கதைக்கலாமோ கூடாதோ என்று நினைப்பதுண்டு. ஆனால் அது வேறு பிரச்சனைகளை தொடக்கிவிடுமோ என்று விட்டுவிட்டேன். மீண்டும் நன்றி.

அரசியல்வாதிகள் கூட்டம்,போராட்டம் எத்துனை காரியம் செய்தாலும் காலம்காலமாக இலங்கை தமிழர்கள் வாழ்க்கையை நிம்மதியாய் வாழும் காலம் சீக்கிரம் வருவது எப்போது?உண்ண உணவு,இருக்க இடம்,உடுத்த உடை இவை தானே ஒரு மனிதனுக்கு அத்தியாவசியமானது,அவை நம் இலங்கை வாழ் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு கிடைக்க,அங்கு உயிர் பலி வாங்கும் அந்த அரக்க குணம் படைத்தவர்களுக்கு என்ன தான் வேண்டும்?இராணுவத்திற்க்கும் விடுதலைபுலிகளுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் அப்பாவி பொதுமக்கள் அல்லவா பாதிக்கபடுகிறார்கள்!!!இதனால் எத்தனை பிஞ்சு உள்ளங்கள் மனது பாதிக்கிறது,எத்தனை எத்தனை ஆதரவற்ற குழந்தைகள் உருவாகிறது என்பதை எப்போது தான் இவர்கள் உணர போகிறார்கள்???எப்போது தான் அமைதி நிலவும்!!!

இலங்கை மிகவும் அழகான, இயற்கை வளம் மிகுந்த அற்புதமான தீவு என்று படித்திருக்கிறேன்.பொன்னியின் செல்வன் கதையில் கல்கி அவர்கள் அழகாக இலங்கை பற்றி கூறியிருப்பார்.காடுகள்,மலைகள்,யானை கூட்டம் மிகுந்த ரம்மியமான நாடு.ஆனால் இன்றோ குண்டுகளும்,துப்பாக்கி சத்தங்களும்,வேதனை குரல்களும் கேட்கும் அவலநிலையை உருவாக்கி விட்டனர்.அப்பாவி மக்களின் துயரத்தை கேட்கும் போது மனம் பதைபதைக்கிறது.மனிதநேயத்தை கொன்று என்ன சாதிக்க போகிறார்களோ தெரியவில்லை.இலங்கை தமிழர்களுக்கு இயன்ற உதவி செய்ய தயாராக இருக்கிறோம்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

இலங்கையில் நடக்கும் இந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. எப்படி அந்த மக்களுக்கு உதவுவது. நர்மதா உங்கள் உறவினர் வேறு எங்கும் செல்ல முடியாதா. நீங்கள் எழுதியதை படிக்கும் போது அழுகைதான் வருது. இறைவந்தான் அம்மக்களை காக்க வேண்டும். அவர்களுக்காக பிராத்திக்கிறேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தமிழர்களின் மேல் நடத்தப்படும் தாக்குதல்கள் எப்பொழுதுதான் நிறுத்தப்படும்? அவர்கள் படும் வேதனைகளையும் இன்னல்கள் அவதிகள் துயரங்கள் இவைகளை இலங்கை நண்பர்களின் வாயிலாகவும் ஊடகங்களின் வாயிலாகவும் அறிந்து சொல்லொன்னாத்துயரம் எங்களையும் ஆட்க்கொள்கிறது, இருந்தும் எங்களால் எம்தமிழ் மக்களுக்கு எந்தவகையில் உதவுவது?மனமார எங்களால் ப்ரார்த்திக்கத்தான் முடிகிறது...!

மேலும் சில பதிவுகள்