என்னை நினைவு இருக்கா ?

எல்லாரும் எப்படி இருக்கீங்க ? என்னைய நியாபகம் இருக்கா ?

பெரிசா வேலைக்கு போகப்போறேன், தேடறேன்னு பில்டப் எல்லாம் கொடுத்துட்டு இருந்தேன் :-)

இப்ப பிஸி பிஸி மோம் ஆயிட்டேன் :-) வேற நினப்புக்கு கூட நேரமில்லாம, பிசி கூட ஆன் பண்ணமுடியாத அளவுக்கு வேலன்னு சொல்லனும் பாக்கறேன். ஆனா பொய் சொல்லக்கூடாது இல்ல. அதான் சொல்லல :-((. ஆனாலும் நேரம் இல்லங்கற்றது மட்டும் 100% உண்மை :-) பொண்ணு, பையன் ரெண்டு பேரும் நிஜமாலுமே பிஸி. அவங்க பிஸி(னஸ்)-ஐ மேற்பார்வை பாக்கனுமே, நான் :-) அதனால நானும் பிஸி :-)

ஒன்னுமே புரிஞ்சிருக்காதே :-))

ஹேய் ஹர்ஷு
யார் என்ன சொல்லி சமாளிச்சாலும் சரி ஹாஷினியும் ஹர்ஷினியும் எனக்கு ஒன்னு தான்...
கவி ஹர்ஷுவும் நீங்களும் நானும் கதைத்தது நினைவுண்டா..அதை யோசிக்கையில் எதோ கல்லூரி நாட்களை மிஸ் பன்னினது போல் உள்ளது
ஹர்ஷினி ஒரு வழியா பேசினியே பிசி தான் சரி அநியாயத்துக்கு மெயில் கூடவா செக் பன்றதில்லை.சோ பேட்
பசங்க நல்ல இருக்காங்களா.பயலை கூட்டி வந்தாச்சா.பாட்டியை கேட்பதில்லையா

ஆமா தளிகா.அதுக்கு அப்புறம் அது மாதிரி பேசிக்க சந்தர்ப்பமே அமையல.யாராவது ஒருத்தர் அருசுவைக்கு ஆப்செண்ட் ஆகிட்டே இருந்தோம்.இனிமே ஒருநாள் அப்படி கதைக்கனும்.
உங்களுக்கும் ஹாசினி,ஹர்ஷினி சந்தேகம் இருக்குதா?
சரி சரி இருவரும் ஒருவர்னாலும் இருவர்னாலும் எல்லாரும் கதைப்போம் கலக்குவோம் :).ஹய் இத பாருங்கடா ஹர்ஷினி வந்ததும் நானும் ஸ்மைலி போடறேன் :))

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க வாங்க ஹர்ஷ், எங்க திடும்னு காணாம போயிட்டு சர்ப்ரைஸ் எண்ட்ரி தர்றீங்க? ஏங்க குழந்தைகள் உங்களுக்கு முன்னாலேயும் இருந்தாங்களே திடும்னு எப்படி பிஸி ஆனீங்க?! :-( போதாக்குறைக்கு இந்த ஹாஷினி குழப்பம் வேற பெரிசா இருக்கு ;-) எல்லாம் மாயைங்கறாப்புல இருக்கு...

ஹாஷினி நான் எங்க காணாம போயிட்டேன்னு கேட்டுட்டீங்க இல்ல? சொல்லிட வேண்டியது தான். எல்லாம் ஆஃபீஸ் தான் காரணம். என்ன பிரச்சனைனு சுலபமா விளக்கிட முடியாதுனாலும், தலவைலி தாங்க முடியல. வீக் எண்ட் எல்லாம் வேலை செஞ்சுட்டு இருக்க கூடாதுனு முடிவு எடுத்தேன் ஒரு வாரம் கூட தாக்கு பிடிக்க விட மாட்டேங்கறாங்க. ஹர்ஷ், இப்போ ஸ்டொமக் பர்ன் குறைஞ்சுதா? எனக்கு தாங்க உங்களை பாத்தா ஸ்டொமக் பர்னா இருக்கு! எவ்ளோ நினைச்சாலும் எண்ண ஓட்டத்தை தடுத்து நிறுத்தவே முடியலை, ஐயோ நாம வேலை செய்யற ஃபீச்சராச்சே, சரியா இல்லனா நம்ம பேரும் இல்ல ரிப்பேராகும்னு அடில ஒரு டென்ஷன் ஓட்டிட்டே இருக்கு :-(( இதுக்கு நடுல தான் வருதே எல்லா பண்டிகையும், விசேஷ தினங்களும்.. ஏ அட்றா அட்றா நாக்க முக்க நாக்க முக்க...

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

ஹலோ ஹர்ஷு என்ன மின்னல் மாதிரி வந்தீங்க அப்புறம் ஆளைக் காணோம்.அப்பப்போ வாம்மா மின்னல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எப்படி இருக்கீங்க.பசங்க எல்லாம் நலமா.உங்களை மறக்க முடியுமா.நான் செல்வி அக்காவிடம் கேட்பேன் நம்ம ஹர்ஷினியை ரெம்ப நாளா காணோமேன்னு எப்படியோ திரும்பவும் எங்களைலாம் நியாபகம் வச்சி வந்துட்டீங்களே.உங்கள் வரவு நல்வரவு ஆகுக.பழையபடி உங்களை அறுசுவையில் பார்த்ததில் சந்தோஷம்.

அன்புடன் கதீஜா.

கவி,

இதோ வந்தாச்சு, நீங்க யாரும் இல்ல?
இப்ப தான் கொஞ்சம் டைம் கிடச்சது :-) அப்படின்னு சொல்லிக்க வேண்டியது தான் :-))

வீட்டுல guests வந்திருந்தாங்க. இப்ப தான் கிளம்பினாங்க :-) அதான் ரிலாக்ஸ்டா வந்திருக்கேன்:-) பொண்ணு full டைம் ஸ்ஸ்கூல் போகப்போறா. இனி அடிக்கடி வருவேனில்ல :-))

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

நலமா இருக்கீங்களா?

நான் யாரையும் மறக்கல. என்ன தான் எல்லாரும் மறந்துட்டு இருப்பீங்கன்னு நினச்சேன். உங்க பதிவ பாத்து ஒரே சந்தோஷம் தாங்கல :-)

முன்ன பொண்ணு மட்டும் தானில்ல. அவள ஏமாத்திட்டு வந்திருவேன் எப்படியாச்சும் :-) இப்ப பையன் இங்க வந்துட்டானா. அவன ஏமாத்தவே முடியல :-) நான் பிசி பக்கம் வந்தா, அவரு எனக்கு முன்னமே வந்து மவுஸ் நகத்தி கீ அடிச்சு விளையாட ஆரம்பிச்சுடறான் :-)) இப்ப தான் பொண்ணோட அருமை தெரியுது போங்க :-) [இன்னொன்னு பையன் வந்தப்புறம் பொண்ணை சரியா கவனிக்க மாட்டேங்கிறோம்னு கவல அதிகமாயிடுச்சு:-( அதான் உண்மை]

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

என்ன நீ, மெயில் அனுப்பினா பதில அனுப்பவே மாட்டேங்கிற. கொழுப்பா? ஒழுங்கா மெயில் அனுப்பு, இல்லாட்டி ஆட்டோ(ஒட்டகத்தோட) வரும் பாத்துக்கோ :-)

நீ சொன்ன மாதிரி கவியோட பதிவ பாத்ததுமே எனக்கும் நம்ம எல்லாரும் கதைத்தது(நானும் இப்படி சொல்றேனே) தான் னியாபகம் வந்துச்சு :-) அந்த நாட்கள்ளை இப்ப ரொம்பவே மிஸ் பண்றேன். ஆன அறுசுவைக்கு வந்தா உடனே அந்த பழைய ஜாலி எங்கிருந்தோ வருது தெரியுமா :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

எனக்கு ஒரே சிரிப்பா வருது. ஏன் தெரியுமா? இந்த ஹாஸினி பொண்ணு மண்டை எப்படி பிச்சுகிட்டு இருக்கும்னு நினச்சு :-)

யாருகெல்லாம் இந்த டவுட் இருக்குன்னு ஒரு வாக்கெடுப்பு வெக்கலாம்னு பாக்கறேன் :-)) ஏன்னா நிறைய பேருக்கு சந்தேகம் இருக்காப்போல இருக்கு :-)[எங்க அண்ணனையும் சேர்த்து :-)]

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

மேலும் சில பதிவுகள்