தேனி கூடு கட்டி விட்டால் என்ன செய்வது?

தேனி கூடு கட்டி விட்டால் என்ன செய்வது?

தீடீரென்று பால்கனியில் தேனி கூடுகட்டிவிட்டால் என்ன செய்வது எபப்டி ஓட்டுவது
அதை ஓட்டுவது நல்லதா கெட்டதா?
தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்

ஜலீலா

என்ன மா தளிகா என் பெயர் உங்களுக்கு மறந்து விட்டதுபோல இருக்கே.

ஹி ஹிஹிஹி

அதுவும் ஒரு தீர்வூ தான் ஆனால் இன்னும் ஒரு நல்ல வழியும் இருக்கு ம்ம் மீதி தோழிகள் என்ன தீர்வு சொல்கிறார்கள் பார்க்கலாம்.
ஜலீலா

Jaleelakamal

நெனச்சேன் நீங்க யாரு ஆளு புதிர் போட்டு மண்டையை குழம்ப வெக்கலாம்னு ஐடியாவா..நான் சிக்க மாட்டேன் .பேர் எழுத நேரம் இல்ல மகள் மடியில்

ஜலீலாக்கா தேன் கூட்டை கலைக்கணும் அவ்வளவுதானே.ஒரு பிளைட் டிக்கெட் அனுப்புங்க.வந்து கலைச்சுடறேன்.தேனும் எனக்குத்தான்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் தேனீ,நீயே போய் வேற ஒரு பெரிய மரத்தில் போய் கூடு கட்டிக்கோன்னு நல்லதனமா சொல்லலாம்.சொல்ற வரைக்கும் அது கொட்டாம இருக்கனும்.அது ரொம்ப முக்கியம்!!

ஜலீலா மேடம் எப்படி என்னோட நல்ல தீர்வு,தெரிந்து வச்சிக்கிட்டே மத்தவங்க மண்டைய(அதுல உள்ள மூளையை)கொடையறதுல என்னப்பா ஒரு விளையாட்டு!!

ஆன் கண்டுபுடிச்சிட்டேன் ஜன்னலை திறந்து ஜலீலக்க்கா முறைத்து ஒரு பார்வை அவ்ளோ தான் தேணீ அப்படியே கண்ணை உருட்டி செத்துடும் அப்படியும் சாவலியா ஜலீலாக்கா ஒரு சிரிப்பு ஹஹஹா ஹிஹிஹீ கண்டிப்பா செத்துடும்

ஹா ஹா கவிசிவா தௌக்கேன் டிக்கெட் தானே அனுப்பிட்ட போச்சு, வாங்க தேன் எத்தனை லிட்டர் வேணும்.

சுகன்யா நீங்க என்ன மந்திர வாதியா ஹா ஹா

ஒகே தளி ரீமா வை சொல்லி தப்பியச்சு.

ஜலீலா

Jaleelakamal

ஒன்னுக்கு மூனு பேர் இப்படி ஒன்னுத்துக்கும் உதவாத உறுப்படாத ஐடியா கொடுத்தும்,கீழ விழுந்தும் மூக்குல(மீசைக்கு பதில்) மண் ஒட்டாத கணக்கா வந்து பதில் ஸாரி தீர்வு சொல்லாம எஸ்கேப்பா!!

சுகன்யா நான் எஸ்கேப் கிடையாது பர்த்து கொண்டு தான் இருக்குறேன்
ஏதாவது தீர்வு புதுசா கிடைக்குதான்னு, அப்பரம் சொல்றேன்.
இன்னும் கொஞ்சம் பொருங்களே?

ஹி ஹி ஹி ஹா ஹா தீர்வு சொல்லாமா என்ன சிரிப்பு என்கிறீரீகளா?

ஜலீலா

Jaleelakamal

ம்ம்..... இது வேளைக்கு ஆகாது.எஸ்கேப்ன்னு சொன்னது தீர்வு சொல்லாம பதிலுங்குற பேர்ல எங்க எல்லாரையும் இப்படி ரத்தம் வராத கடி டார்ச்சர் பண்றத சொன்னேன்.

ஆனா ஒன்னு,கடைசீல தீர்வுங்குற பேர்ல மொக்கையா எதாவது சொன்னீங்க்ன்னா அப்புறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது!!!என்ன செய்வீங்கன்னு கேட்டா,வடிவேலு சொன்ன பதில் தான்!!!போங்கப்பா எல்லாரும்,போய் வேற வேளை இருந்தா போய் பாருங்க’,இந்த வரிய பார்த்தாவது ஜலீலா மேடம் பயந்துட்டு தீர்வு சொல்ல மாட்டாங்களான்னு ஒரு நப்பாசைதான்.சரிப்பா நான் சமைக்க போறேன்,அப்புறமா வந்து பார்க்கிறேன்.`

சொல்லி விடுகிறேன்

பேகான் தான் பேகான்ஸ் ஸ்ப்ரே நல்ல ஒரு டப்பா முழுவதும் அடிச்சாச்சு ஒரு தேனி கூட இல்லை எல்லாம் செத்துவிட்டது அபப்ரம் என்ன பெண்டு நிமிர கீளீனிங்.
குச்சியில் துணி சுற்றி அரித்து கான்பிக்கும் போதுஎல்லாம் உள்ளே வந்து விட்டால் என்ன செய்வது. அதான் பேகான் அடித்தோம்.

என்ன சுகன்யா போதுமா?/
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்