தீபாவளி பற்றி பேசலாம்

ஹாய் தீபாவளி 27 தேதி கிட்ட் வந்துடிச்சி. எல்லோரும் பர்சேஸ் பண்ணீட்டீங்கள்? என்ன் இனிப்பு செய்ய் போரீங்கனு இங்கே வந்து சொல்லுங்களேன்.தீபாவளி பற்றி எதுவாயினும் சொல்லுஙளேன்.

என்ன் ட்ரெஸ் எடுத்தீங்க? என்ன கலர் இதேல்லாம் கூட சொல்லலாம் பா.

எங்களின் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள். அருசுவை தோழிகள் அனைவருக்கும்

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

நாங்க அடுத்த வாரம் ப்ர்சேஸ் செய்வோம். செய்தவுடன் நான் சொல்கிரேன் பா.

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

ஜெயா வேணாம் நான் அலுதுடுவேன்.(வடிவெலு உபயம்)நம்ம ஊரு மாதிரி இங்கு வெரைட்டியா ட்ரெஸ் ஏதும் கிடைக்காதுப்பா.நல்லி சில்க்ஸ் இருந்தாலும்.விடுமுறையும் இல்லை.சம்பிரதாயத்துக்கு பசங்களுக்கு மட்டும் லாஸ்ட் மொமண்ட்ல ட்ரெஸ் எடுப்போம். பட்சணத்தை பொறுத்தவரை மைசூர்பாக்,மைக்ரோவேவ் பால்கோவா, குலோப்ஜாமுன்,ஜிலேபி(ரெடிமேட் மிக்ஸ்),முறுக்கு,வடை வகைகள்,கேசரி,போளி இப்போதைக்கு இவ்வளவுதான் தீர்மானித்து உள்ளேன். Proper planning prevents poor performance.

ஹாய் ஜெயா நலமா?
தீபாவளிக்கு என்னோட ஷாப்பிங் முடிஞ்சுது.சிங்கப்பூர் போய் எனக்கு ஒரு சுடிதார் அவருக்கு ஒரு பேண்ட் ஷர்ட் வாங்கியாச்சு.சுடிதாருக்கு மேட்சிங்கா வளையல் தோடு மாலை எல்லாம் வாங்கியாச்சு.ஹ்ம்ம்ம் ஊரில் இருந்திருந்தால் ஷாப்பிங் இதோட முடியுமா குறைந்தது ஒரு அஞ்சு ட்ரெஸ்ஸாவது வாங்கியிருக்க மாட்டோம் என்ன செய்யறது எல்லாம் சேர்த்து வச்சு ஊருக்கு வரும் போது ஜமாய்ச்சுட வேண்டியதுதான்.

அப்புறம் பலகாரம் செய்ய வேண்டிய சாமான்களும் வாங்கியாச்சு.இந்த வாரம் வீட்டை சுத்தம் செய்யற வேலை.அடுத்த வாரம் பலகாரங்கள் செய்யணும்.
என்னோட பலகார லிஸ்ட்
முறுக்கு,சோமாஸ்,பட்டர் குக்கிஸ்,ஓமப்பொடி,மிக்சர்,
குலோப்ஜாமூன்,மைசூர்பாகு.
தீபாவாளி காலையில் உளுந்து வடை,ரச வடை,நேந்திரம்பழ பஜ்ஜி,இட்லி,கோழி குழம்பு

இப்போதைக்கு இதுதான் ப்ளான்.அப்புறம் மற்ற தோழிகளின் பலகார லிஸ்டைபார்த்து சின்ன சின்ன மாற்றங்கள் வரும்னு நினைக்கிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் அருண் (அப்ப்டி கூப்பிடலாமா)
அப்படியா. சரி அந்த குலோப்ஜாமூன் என்க்கு ரொம்பா பிடிக்கும். அதை சென்னைக்கு கொஞகம் அனுப்பி வைங்க.

நான் தீபாவளிக்கு தேங்காய் பால் அல்வா செய்யலாமுனு இருக்கேன். நேற்று செய்தோம் ரொம்பா சூப்ப்ர் டேஸ்ட் பா.

அப்புரம் யோசிச்சி சொல்ரேன். இங்கே யாரவது புது வகை இனிப்பு சொல்றாங்லானு பார்ப்போம்.

அன்புதோழி
ஜெய்லக்ஷ்மிசுதர்சன்

ஹாய் கவிசிவா,

என்ன கலர் பா உஙக ட்ரெஸ்? சரி ஏன் எல்லொரும் குலொப், மைசூர் பாக்கு இதேயே சொல்ரீஙக.புதுசா சொலுஙகப்பா.

ஹாய் ஜெயா ட்ரெஸ் கலர் எப்படி சொல்லன்னு தெரியல.சாக்லெட் பிரௌனில் கிரீம் கலர் எப்ப்ராய்டரி போட்ட பாட்டம்,ஷார்ட் டாப்ஸ் கலர் எப்படி சொல்றதுன்னு தெரியல :( .
குலோப்ஜாமூன் மிக்ஸ் கிடைக்குது செய்வதும் சுலபம்.அப்புறம் என்னவருக்கு ரொம்ப பிடிச்ச ஸ்வீட் அது.
நீங்கள் தேங்காய்பால் அல்வான்னு சொன்னதும் அது செய்யலாமோன்னு தோணுது.ஆனால் 2 அல்லது 3நாட்கள் வரை கெடாமல் இருக்குமா?
இங்கே உள்ள சீன மலாய் ஃப்ரெண்ட்ஸ்களுக்கு முறுக்கு ரொம்ப பிடிக்கும்.அவர்களுக்காக முறுக்கு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கவிசிவா, பராவயில்லை ரொம்ப பொறுப்பா இந்த அள்வுக்கு கலர் சொன்னதுக்கு. இமெஜின் பண்ணிபார்த்தேன்.
கலர் நல்லாதான் இருக்கு பா. நன்றி பா.

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

என்ன எல்லோரும் தீபாவளிக்கு ரெடியாய்ட்டுயிருக்கீங்களா? பலகாரம் சொன்னவுடனே நான் இங்க உட்காந்து ஜொள்ளு விட ஆரம்பிச்சுட்டேன். ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.
கவிசிவா அதென்ன ரச வடை, சுடி எடுத்துட்டீங்களா ரெடிமேடா, மெட்டீரியல்லா?

ஜெயலஷ்மி குளோப்ஜாமூன்,மைசூர்பாகு இன்னும் உறுப்பிடியா செய்யத்தெரியாத (என்னை மாதிரி) ஆளுங்க இருக்காங்கள்ள அவங்கெல்லாம் எப்ப கத்துக்கறது,அதுக்கு இப்பதானே சரியான நேரம்.

# பலகாரம் சொன்னவுடனே நான் இங்க உட்காந்து ஜொள்ளு விட ஆரம்பிச்சுட்டேன். ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.#

கவி வந்துடீஙளா? உஙகல தேடினேன்.இந்த வரியை படிச்சி ஒர்ரே சிரிப்புதான் வருது பா.

ஹாய் கவி.எஸ் நலமா?பேசி ரொம்ப நாளாச்சு.
ரசவடை இந்த லின்கில் இருக்கு பாருங்க
http://www.arusuvai.com/tamil/node/7302
சுடிதார் ரெடிமேட்தான் வாங்கினேன்.மெட்டீரியல் வாங்கி தைக்க கொடுத்தால் தையல் கூலியில் இன்னொரு புது சுடிதாரே வாங்கிடலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்