கத்திரிகாய் பொரிச்ச கூட்டு

குக்கரில் துவரம் பருப்பை வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
கடாயில் சிறிது நெய் விட்டு, கடுகு, உளுந்து தாளித்து, பொடியாக நறுக்கிய கத்திரிகாய், உப்பு போட்டு வதக்கவும். 2 ஸ்புன் சாம்பார் பொடி சேர்க்கவும். கத்திரிகாய் வதங்கியதும் கொஞ்சம் புளி தண்ணீர் சேர்க்கவும். நன்றாக கொதித்தும், வேக வைத்த பருப்பை மசித்து கலக்கவும். கறிவேர்ப்பிலை நறுக்கி போடவும்.மிக்ஸியில் வறுத்த தேங்காய் துறுவல், சிரகம் (1 1/2 ஸ்புன்), உளுந்து(1 ஸ்புன்) சேர்த்து நைசாக அரைத்து கூட்டில் சேர்க்கவும். ருசிகேற்ப உப்பு சேர்த்து கொள்ளவும்.

கத்திரிகாயிற்கு பதில் கொத்தவரங்காயும் உபயோகிகலாம்

அருமையான குறிப்பு கத்தரிக்காய் பொரிச்ச கூட்டு
உங்களுக்கு மட்டுமல்ல, புதிதாக இணையும் தோழிகளுக்கு சில ஆலோசனைகள்.
உங்களுக்கு ஆலோசனை கூற நான் தகுதியானவள். ஏனென்றால் இதுபோன்ற தவறுகளை நான் செய்திருக்கிறேன்.
1. சமையல் குறிப்புகளை "கூட்டாஞ்சோறு" பகுதிக்கு புகைப்படம் இல்லாமல் அல்லது "யாரும் சமைக்கலாம்"பகுதிக்கு புகைப்படத்துடன் அனுப்பவும்.
2. மன்றத்திற்கு இதுபோல் அனுப்ப வேண்டாம்.
3. புதிதாக வருபவர்கள் ஒரு 2, 3 நாட்கள் நமது அறுசுவை தளத்தை நன்கு சுற்றி வாருங்கள். அப்போதுதான் தளத்தைப்பற்றி தெரிந்து கொள்ள முடியும்.
4. சமையல் குறிப்பு கொடுக்கும்போது ஏற்கனவே அந்தக் குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதா என்று பார்த்துவிட்டு புது குறிப்புகளைக் கொடுக்கவும்.
நன்றி
அன்புடன்
ஜெயந்தி மாமி

மேலும் சில பதிவுகள்