எகலப்பை நிறுவுவது எப்படி?

தோழிகளே,

எழுத்துதவி கொண்டு தட்டச்சியது போதும், எகலப்பை நிறுவலாம் என்று down load என்று செய்து விட்டேன். ஆனால் m அடித்தால் ர் என்றும் அனைத்தும் மாறி வருகிறது. தமிழ் தட்டச்சு தெரிந்தால் தான் அதை பயன் படுத்த முடியுமா? தெரிந்தவர்கள் உதவுங்களேன் please. நன்றி.

இதே பிரச்சனையில் கிடந்து நானும் என்ன செய்ய என்று விழித்துக்கொண்டிருக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நன்றி தோழி. விசுவல் கீ போர்டு இருகிறதல்லவா அதை வைத்து அடிகலாம் என பார்த்தால் அதுவும் ஆங்கில கீ போர்டா இருக்கு. என்ன செய்வது?

கீழ்காணும் லின்க்கை பயன்படுத்தவும். unicode ஆப்சனை தெரிவு செய்யவும். முன்னதாக தமிழ் டிரைவர் ஃபைல் சிஸ்டத்தில் லோடு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

http://www.thamizha.com/downloads/ekalappai20b_anjal.zip
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் கவின்,
எனக்கும் இதேமாதிரிதான் வந்தது.யாராவது வந்து கொஞ்சம் உதவுங்களேன்.
நன்றி,
கவிதா.

kavitha

செல்வி அக்கா,
டவுன்லோடு சேயதுவிட்டேன் ஆனால் யப்படி type செய்வது?
run செய்தும் விட்டன் ஆனால் விசுவல் கிபொடு வரவில்லை....
vaishu

vaishu

நான் 3 வருடம் முன்பு காலெஜில் வெட்டியாக(!!) இருந்த காலத்துல கலப்பையை வெச்சு நல்லா உழுதுருக்கேன்.. சரி பதில் சொல்றதுக்கு முன்னாடி என்ன மாறி இருக்குனு டவுன்லோட் பண்ணி பார்த்தா, Ascii கீபோர்டே இல்லையே? யூனிகோட், டி.ஏஸ்.சி என்ற இரண்டு தான் வருகிறது.. 2006க்கு பிறகு வேறு வெர்ஷன் எதுவும் வந்துள்ளதா? நான் கொஞ்ச நேரம் நோண்டி பாத்துட்டு தெரிஞ்சா சொல்றேன்.. தமிழ் ஆர்வலிகளே.. போய் புள்ள குட்டிங்களை தூங்க வெச்சுட்டு நீங்களும் தூங்குங்க.. தமிழை வளர்க்க நேரம் காலமில்லாம பாடு பட வேண்டாம் ;-)

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

ஏகலப்பையை விட எனக்கு இப்போதைக்கு பிடித்திருப்பது NHM writer.இதனை டவுன்லோட் செய்யலாம்,இதில் பல மொழியிலும் உள்ளது.அதில் tamil language செலக்ட் பண்ணி,save பண்ணிக்குங்க.அதில் tamil phonetic code செலக்ட் செய்து ஈஸியா டைப் செய்யலாம்.start menuல வைத்திருந்தால் நமக்கு தேவைப்படும் போது click பண்ணி டைப் பண்ணிக்கலாம்.

முதலில் ஏகலப்பை தான் உபயோகப்படுத்தினேன்.ஆனால் பிசிய ரீஸ்டார்ட் பண்ணும் போது,ரொம்ப நேரம் எடுக்கும்.shut down பண்ணும் போதும் சில text missing ன்னு வரும்.இப்போ அந்த ப்ரச்சனை இல்ல.

நன்றி சுகண்யா,

கற்றுக் கொண்டேன். மிக்க நன்றி....

vaishu

இப்போதுதான் இந்த பதிவினை பார்க்கின்றேன்.

நிறைய பேர் எழுத்துதவி பக்கத்தினை பயன்படுத்தி தமிழில் டைய் செய்து வருகின்றார்கள். நான் பலமுறை இங்கே மன்றத்தில் தெரிவித்ததை மீண்டும் தெரிவிக்கின்றேன்.

எழுத்துதவி பக்கம் டைப்பிங் செய்ய தெரியாதவர்கள் கற்றுக் கொள்ள உதவும் பக்கம். அதனைப் பயன்படுத்தி தமிழில் டைப் செய்ய ஓரளவிற்கு பரிச்சயமானவுடன், எகலப்பை அல்லது NHM writer ஐ பயன்படுத்த தொடங்கிவிடுங்கள். எழுத்துதவியை எப்போதும் பயன்படுத்துதல் சிரமமானது. அதில் சில பிரச்சனைகளும் இருக்கின்றன.

எகலப்பை எளிதானது. ஆனால் அதில் நீண்ட காலமாக புதிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இதன் காரணமாக நண்பர் பத்ரி அவர்கள் NHM writer ஐ உருவாக்கிவிட்டார். இதில் நிறைய வசதிகள் இருக்கின்றன. அவ்வபோது தேவையான மாற்றங்களையும் செய்து வருகின்றார்கள். நிறுவுவதற்கு மிகவும் எளிதானது. பயன்படுத்துவது எப்படி என்பதற்கான உதவிக் குறிப்பேடும் உள்ளது.

கீழ்கண்ட லிங்க்ல் இருந்து இதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

<a href="http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx" target="_blank">NHM WRITER DOWNLOAD</a>

அட்மின் எனக்கும் இப்ப இதே ப்ராப்ளம். என்னுய்ய கம்யூட்டரில் விஷ்டா தான் இருக்கு அதில் நான் எகலப்பை டவுன்லோட் செய்துள்ளேன், ஆனால் அது வொர்க ஆக மாட்டேங்குது, இப்ப நானும் கஷ்டபடுகிறேன். விஷ்டாவில் வொர்க் ஆகுமா, ஆகாதா?

மேலும் சில பதிவுகள்