குழந்தையின் இருமல், தடுக்க என்ன வழி?! ஹெல்ப் ப்ளீஸ்!

குழந்தையின் இருமல், தடுக்க என்ன வழி?! ஹெல்ப் ப்ளீஸ்!

அன்பு சகோதரிகளே,

அன் மகளுக்கு லேசாக இருமல் இருந்தவண்ணம் உள்ளது. ரொம்ப சளி இருப்பது போலவும் தெரியவில்லை - ஆனால் கொஞ்சம் throat congestion இருக்கிறது. இப்பொது பிரச்சனை என்னவென்றால், வரும் வாரம் இவளின் பாட்டு டீச்சர் நடத்தவிருக்கும் ஒரு கச்சேரியில் இவளுக்கும் பாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது... இவளுடன் இன்னும் 3 குழந்தைகளும் (எல்லாம் 7 & 8 வயது குழந்தைகள்) பங்கு கொள்கிறார்கள். போனா வாரம் வகுப்புக்கு பிறகு, டீச்சர் ஸ்பெஷலாக எங்களிடம் குழந்தைகள் எல்லொருமே இரும்பி கொண்டு இருக்கிறார்கள். அதனால், எதாவது செய்யுங்கள், இருமலை கட்டுபடுத்துங்கள் என்று சொன்னார். கூடவே இஞ்சி சாறு எடுத்து, அதனுடன் தேன் கலந்து கொடுக்க குணம் தெரியும் என்றார்.

இப்பொது எனக்கும், என் தோழிகளுக்கும் குழப்பம் என்னவென்றால், எவ்வளவு இஞ்சி வைத்து சாறு எடுக்க வேண்டும், எவ்வளவு தேன் கலக்க வேண்டும் என்று... ப்ளீஸ், உதவி செய்யுங்கள்... வேறு ஏதாவது வீட்டு வைத்தியம் இருந்தாலும் சொல்லுங்கள்.

என் முன்கூட்டிய நன்றி!!

அன்புடன்,
ஸ்ரீ

அன்பு சகோதரிகளே,

அன் மகளுக்கு லேசாக இருமல் இருந்தவண்ணம் உள்ளது. ரொம்ப சளி இருப்பது போலவும் தெரியவில்லை - ஆனால் கொஞ்சம் throat congestion இருக்கிறது. இப்பொது பிரச்சனை என்னவென்றால், வரும் வாரம் இவளின் பாட்டு டீச்சர் நடத்தவிருக்கும் ஒரு கச்சேரியில் இவளுக்கும் பாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது... இவளுடன் இன்னும் 3 குழந்தைகளும் (எல்லாம் 7 & 8 வயது குழந்தைகள்) பங்கு கொள்கிறார்கள். போனா வாரம் வகுப்புக்கு பிறகு, டீச்சர் ஸ்பெஷலாக எங்களிடம் குழந்தைகள் எல்லொருமே இரும்பி கொண்டு இருக்கிறார்கள். அதனால், எதாவது செய்யுங்கள், இருமலை கட்டுபடுத்துங்கள் என்று சொன்னார். கூடவே இஞ்சி சாறு எடுத்து, அதனுடன் தேன் கலந்து கொடுக்க குணம் தெரியும் என்றார்.

இப்பொது எனக்கும், என் தோழிகளுக்கும் குழப்பம் என்னவென்றால், எவ்வளவு இஞ்சி வைத்து சாறு எடுக்க வேண்டும், எவ்வளவு தேன் கலக்க வேண்டும் என்று... ப்ளீஸ், உதவி செய்யுங்கள்... வேறு ஏதாவது வீட்டு வைத்தியம் இருந்தாலும் சொல்லுங்கள்.

என் முன்கூட்டிய நன்றி!!

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

இதற்கு விஜி பதில் தருவார்கள் அவர் தான் ரேடியோவில் எல்லம் படி இருக்கிறார்ர்

பாட்டு டீச்சர் விஜி எங்கிருந்தாலும் வருக
ஜலீலா

Jaleelakamal

நம்ம விஜி ரேடியோவில் பாடி இருக்காங்களா?உண்மையாகவா?

டியர் ஸ்ரீ உங்க பொண்ணு கச்சேரியில் கலக்க இப்பவே என் வாழ்த்துகள் எனக்கே ஸ்ரீ பொண்ணு கச்சேரி செய்ய போறாங்கன்னு சந்தோசமா இருக்கு அப்ப உங்களுக்கு இரட்டிப்பு சந்தோசம் இருக்குமே?என்ககு அதன் அளவு தெரியலேமா?பார்கலாம் யாராவது சொல்லுறாங்கலான்னு..வெண்ணீர் கொடுங்க அடிக்கடி அது இருமலை கட்டு படுத்தும்..நீங்க நான் வெஜ்ஜா?ஆமான்னா அதற்குள்ள ஒரு கை மருந்து இருக்கு அதற்க்கு முட்டை வேணும்..அதர்க்காகதான் கேட்கிரேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ரொம்ப நன்றி ஜலீலா அக்கா & மர்ழியா.

அப்படியா?, நம்ம விஜி ரேடியோவில் எல்லாம் பாடி இருக்காங்களா?! சூப்பர்!
அப்ப, ஜலீலா அக்கா சொன்ன மாதிரி, பாட்டு டீச்சர் விஜி, கொஞ்சம் வந்து சொல்லுங்க... :-)

மர்ழியா,
என் மகள் பாடுவது குறித்து நீங்க சந்தோஷப்படுவதை பார்த்து எனக்கும் சந்தோஷம். உங்கள் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

உண்மையிலேயே நீங்க சொன்னமாதிரி எனக்கு ஒரே சந்தோஷம் + எக்சைட்மென்ட்!! இதுதான் முதல் முறையாக அவள் மேடை ஏறி பாடப்போகும் கச்சேரி... 2 பாடல்கள் பாடப்போகிறாள். 8 வயதிற்கே உண்டான துடிப்புடன், அவள் ஒன்றும் பெரிசாக இதைப்பற்றி நினைக்கவில்லை... ஜாலியாயத்தான் இருக்கிறாள். எனக்குதான் ஒரு சின்ன பதட்டம். எல்லாரும் நல்லபடியா பாடனுமே என்று.... உங்கள் போன்ற அன்பு உள்ளங்களின் வாழ்த்துகள் அவளுக்கு நன்மை தரும். மீண்டும் ஒரு முறை நன்றி.

உங்களை அரட்டையில் பிடிக்க வேண்டும் என்று இருந்தேன். ஆனால் முடியவில்லை. நான் இப்பொது கொஞ்சம் அடிக்கடி வரமுடியவில்லை... ஆபீஸில் சரியான வேலை, அதான்.

உங்கள் குட்டி பாப்பா என்ன சொல்கிறது? மரியம் எப்படி இருக்கிறாள்? உடம்பை கவனமாக பார்த்துக்கொள்ளவும். அப்புறம், நாங்க நான்- வெஜ்தான்... அதனால் அந்த முட்டை வைத்தியமும் சொல்லுங்கள்... நன்றி!

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

எப்படி இருக்கிங்க?
உங்க பென்னுக்கு குட் லக். பயம் இருக்கவே கூடாது நிங்க அவளை சாதராணமகவே இருக்க விடவும். குளிர் பாணங்கள் இந்த கச்சேரி முடியும் வரை தவிர்ப்பது நல்லது மோர்,தயிர் ஐஸ் வாட்டர் இதெல்லம் பை பை.
ஒரு தே.க தேன் எடுத்து அதை காரட் ஜூஸ், அல்லது க்ரேப் ஜூஸ், வார்ம் வாட்டரில் விட்டு குடிக்க குடுங்க.
ஒரு சிறிய துண்டு இஞ்சி நனறாக இடித்து அந்த சாறை எடுத்து 2 தே.க தேனில் கலந்து குடுக்கவு. உடனடி நிவாரம்.

கடைசி வழி இருமல் ட்ராப்ஸ்.

சீரக தண்னிர் குடிக்க குடுங்க.
வார்ம் வாட்டரில் உப்பு போட்டு காகிள் செய்ய சொல்லுங்க.
இஞ்ஞி டீ குடிக்க குடுக்கலாம்

ஹலோ விஜி,

எப்படி இருக்கிங்க?! சில தினங்களுக்கு முன்னாலேயே பதில் போட வேண்டுமென்று நினைத்திருந்தேன், முடியாமல் போய்விட்டது. (எல்லாம், ஆபீஸ் மற்றும் தீபாவளி பிஸிதான்...)

உங்க தீபாவளியெல்லாம் நன்றாக போயிருக்கும் என்று நினைக்கிறேன். நான்கூட இதுபற்றி தீபாவளி த்ரெட்டில் எழுதி இருக்கிறேன் .. நீங்களும் வாங்க..

அடாடா... வந்த விஷயத்தை விட்டுட்டு நான் பாட்டுக்கு எதேதோ எழுதிகொண்டு இருக்கிறேனே! :-)

உங்க இருமல் குறைவதற்கான டிப்ஸ் எல்லாம் ரொம்ப சூப்பர். நான் என் பொண்ணுக்கு இஞ்சி சாறு + தேன் தான் கலந்து கொடுத்தேன்... நன்றாக கேட்டது. கச்சேரியும் நல்ல விதமாக நடந்து முடிந்தது... குழந்தைகள் நன்றாக பாடினார்கள், இருமல் தொந்தரவின்றி... மீண்டும் ஒரு முறை என் நன்றிகள் விஜி!

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய்மா முக்கியமான மேட்டரை இப்படி கடைசியில் சொல்லி இருக்கீங்களே வாழ்த்துகள் உங்க குழந்தைக்கு நல்லமுறையில் ஸ்டேஜில் பாடியமைக்கு..
நல்லா இருக்கேன்..பிள்ளைகளும் நலமே வயிற்றில் இருப்பதையும் சேர்த்து சொன்னேன் :)

நியூபான் குழந்தைக்கு எனக்கு தேவையானதைலாம் லிஸ்ட் எடுத்துட்டு இருக்கேன் அப்பதானே டெங்ஷன் இல்லாமல்,மறக்காமல் வாங்க ஈஸியா இருக்கும்..

நீங்க நலமா?தீபாவளி எப்படி போனது>?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்ழியா,
உங்க பதிலை இப்போதுதான் பார்த்தேன். நீங்க இப்போ நலமா இருக்கீங்களா? நலமாக இருக்க விழைகிறேன் - எங்கேயோ ஒரு த்ரெட்டில் மயக்கம், வாந்தி எல்லாம் மீண்டும் வந்துவிட்தாக எழுதி இருந்தீர்கள். உடம்பை கவனமாக பார்த்துக்கொள்ளவும்.

நான் நலம். தீபாவளியெல்லாம் ரொம்ப ஜோரா போச்சு. நன்றி! (தீபாவளி த்ரெட்டில இங்க எப்படி போச்சு என்றும், எங்க கொண்டாட்டத்தை பற்றியும் பகிர்ந்து கொண்டிருந்தேன், பார்த்தீர்களா என்று தெரியவில்லை. )

இப்போ இரண்டு நாட்களாக என் குட்டி பையனுக்குதான் கொஞ்சம் உடம்பு சரியில்லை. வெள்ளிக்கிழமை இரவில் இருந்து ஒரெ வாந்தி எடுத்துக்கொண்டு இருக்கிறான். எது சாப்பிட்டாலும் நிற்க மாட்டேங்குது, மருந்து உட்ப்பட : (

சீக்கிரம் சரியாக வேண்டுமென்று மனம் பதைக்கிறது... பாவம் குழந்தை எதுவும் சாப்பிடாம இருக்கிறானே என்று நினைக்கும்போது, எனக்கு ஒன்னுமே ஓடமாட்டேங்குது... என்னதான் சாப்பிட குடுக்கறதுன்னு (மண்டையை உடச்சிட்டு) யோசிச்சிட்டு இருக்கேன்.

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

நலமா இருக்கேமா நீங்க நலமா?ஆமாம் மயக்கம் எல்லாம் ரிட்டன் வந்து இருக்கு ஆனாலும் இதெல்லாம் சுகமான சுமைகள்தானே!உங்க மகன் ஏதாவது ஆரோக்கியம் இல்லாத உண்வு உட்கொண்டானா என கவனிங்க சீக்கிரம் குணம் கிடைக்க வேண்டுகிறேன்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்ழியா,

உங்களின் உடனடியான விசாரிப்புடன் கூடிய கனிவான பதில் கண்டு ரொம்ப சந்தோஷம், வேண்டுதலுக்கும் ரொம்ப நன்றி!

மர்ழியா, உங்க சுகமான சுமை அனுபவத்தை நல்லா எஞ்ஜாய் பண்ணுங்க ... நிஜமாவே இந்த நாட்கள் எல்லோருக்கும் வாழ்வில் பொன்னானவை! ( இதை எழுதும் போதே எனக்கும் என் கடந்தகால தித்திப்பான மலரும் நினைவுகள் எல்லாம் மனதில் எழுகின்றன! :-) )

ஆமாம், நீங்க சொன்னது சரிதான். அவன் ஸ்கூலில் வெள்ளிக்கிழமை கொடுத்த டொமெட்டோ சூப்பினால் இருக்குமோ என்று ஒரு சந்தேகம்.. ஏனென்றால், இவன் க்ளாஸிலே இருக்கும் வேறு சில குழந்தைகளுக்கும் இதே பிரச்சனை! இதுபற்றி நாங்கள் எல்லோரும் பள்ளி நிர்வாகத்திடமும் பேசிவிட்டு வந்தோம். இன்றைக்கு பரவாயில்லை.. 3 1/2 நாள் சரியாக சாப்பிடாமல் அவஸ்தைப்பட்டு, இன்றுதான் ஒரே ஒரு இட்லி சாப்பிட்டான்! So far so good!

என் குழந்தைகளுக்கு மட்டும் ஒருத்தருக்கு ஒன்று வந்தால், அத்தோடு போகாது : ( இப்போது என் மகளின் டெர்ன்! நேற்று ஈவீனிங்-ல் இருந்து அவளுக்கு சரியான சளி பிடித்திருக்கிறது! நைட் எல்லாம் மூக்கு அடைத்துக்கொண்டு மூச்சு விடமுடியாமல், சரியாக தூங்க முடியாமல் அவஸ்தைப்பட்டாள்.: ( அப்புறம் விக்ஸ் தேச்சிவிட்டு, கொஞ்சம் வென்னீர் குடிக்க கொடுத்து, தலைகாணியை கொஞ்சம் ரைஸ் பண்ணி வைத்து தூங்க வைத்தேன்.

இப்போ என்னப்பா பண்ணறது? ஏதாவது வீட்டு வைத்தியம் இருந்தா சொல்லுங்களேன்... நானும் இங்கே நம்ம அறுசுவை தளத்திலும் தேடி பார்க்கலாம்னு இருக்கேன்.

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்