கடுமையான குதிங்கால் வலிக்கு தீர்வு என்ன?

எனக்கு கடந்த ஒரு வருடமாக 2 காலிலும் (வலது காலில் அதிகமாக) குதிங்கால் வலி உள்ளது. காலை தூங்கி எழுந்தவுடன், காலை கீழே ஊன்ற முடிவதில்லை, mcr செருப்பு போட்டு தான் நடக்கிறேன். நரம்பு, எழும்பு என எல்லா டாக்டரிடமும் காட்டி விட்டேன், x-ray எடுத்து பார்த்து எலும்பு வளர்ந்து உள்ளது என்கிறார்கள். spot injection போட்டால் 3 மாதம் நன்றாக இருக்கிறது, மீண்டும் வந்து விடுகிறது. எந்த டாக்டரும் சரியான தீர்வு சொல்வதில்லை. இதற்கு எதாவது கை வைத்தியம் இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.

இதற்கு எதாவது கை வைத்தியம் இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.

ராபியா

ராபியா

ராபியா மா குதிகால் என்னனு தெரியல வேணும் நா தைலம் தேய்த்து பாருங்கள்
எண்னை தேய்த்து சுடு தண்ணீர் ஊற்றி பாருங்கள்.
இல்லை உலக்கை போன்று உள்ளதில் காலை வைத்து உருட்டி பருங்கள்.
ஜலீலா

Jaleelakamal

ராபியா மா என் தோழிக்கும் இந்த பிரச்சினைதான்.இங்உம் அதே மாதிரி ஒரு இஞ்செக்ஷன் போட்டாங்க.அப்புறம் வெயிட்டை கண்டிப்பா குறைக்க சொன்னாங்க.வெயிட்டை குறைச்சதும் பாதி வலி போயிடுச்சு.இரவு படுக்க முன்னாடி ஒரு பக்கெட்டில் வெதுவெதுப்பான தண்ணீரும் இன்னொரு பக்கெட்டில் சாதாரண தண்ணீடும் வைத்து இரண்டிலும் மாறிமாறி இரண்டு நிமிடம் வைத்தால்(மொத்தம் 20நிமிடம்) நல்ல நிவாரணம் கிடைப்பதாக அவங்க சொன்னாங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

kuthikaal valiyaal naan migavum avathipattu maruwthu saapittum sari aagavillai. kaivaiththiyam ellam seythu parthu vittuvitteen. athu oru vaayvunal varum.45 vyathu kadawthavargaLukku varumaam. Mcr chappal thaan nivarrani endru irukkavu.m.thaanee sari agum. uusi poottaal piRaky iruthaya nooyi varumaam.peyin killar sapittaal viyiruu puN aagividum

குதிகால் வலியால் நான் மிகவும் அவதிபட்டு மருந்து சாபிட்டும் சரி ஆகவில்லை. கைவைத்தியம் எல்லம் செய்து பர்து விட்டுவிட்டேன். அது ஒரு வாய்வுனல் வரும்.45 வ்யது கடந்தவர்களுக்கு வருமாம். Mcர் சப்பல் தான் நிவர்ரனி என்ட்ரு இருக்கவு.ம்.தானே சரி அகும். ஊசி போட்டால் பிறக்ய் இருதய நோயி வருமாம்.பெயின் கில்லர் சபிட்டால் வியிரூ புண் ஆகிவிடும்

See a varmam doctor. Quarter teaspoon of varma thailam will cure within a week.

எங்க அம்மாவுக்கும் அதே போன்று இருந்தது.அதற்க்கு கை வைத்தியம் இதோ
அடுப்பில் செங்கல் கல்லை வைத்து நன்றாக சூடாக்கி,அந்த செங்கல் சூட்டில் பழுத்த எருக்க இலைகளை(10) வைத்து குதிங்காலை எடுத்து எடுத்து வைக்கவும்.இதே போன்று ஒரு வாரம் காலை மற்றும் மாலை செய்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

Health advice on heel pain
1.Massage your heel with ice cubes to get relief from the pain. You can do this for as long as the pain remains.
2.Wear comfortable footwear and avoid standing for too long as it will put pressure on your heel. You can tape your heel before wearing shoes so that ease the pressure on the heels.
3.If you are overweight try losing a few pounds so that your heels carry less weight
4.You can soak your heels alternatively in hot and cold water twice a day.
5.Do some stretching exercises to reduce the pain. Roll your arch over a cold can of juice or beer to loosen the tense tissues.
6.Put your feet up when at home for as long as you can manage.
7.As much as possible, wear flat shoes or slippers.
8.Do not sit or lie down with your feet crossed over each other.
9.Curl and uncurl your toes and flex your feet to ease the pain.
10.Bicycling slowly and swimming can relax the muscles and help in decreasing the pain.
11.After the pain subsides a little, take a stroll or walk for a while around the house. As far as possible, do not go for long walks, climb steep stairs or run for long distances.

குதிங்கால் வலியும், அது குணமான விதமும்
பவளமணிபிரகாசம்
ஐம்பது வயதை தொட்ட பெண்களில் அநேகம் பேருக்கு குதிங்கால் வலி என்ற உபாதையைப் பற்றி தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். நானும் கடந்த ஒரு வருடமாக அந்த அவஸ்தையை அனுபவித்து அதை கடந்தும் வந்த விதத்தை கூற விரும்புகிறேன்.
அடுத்தடுத்து மகளுக்கு திருமணம், பேறுகாலம், மகனுக்கு திருமணம் என போதிய ஓய்வின்மையும்,அதிக அலைச்சலும் கூடிய காலகட்டத்தில் என் குதிங்கால்களின் மத்தியில் விண்ணென்ற வலி தோன்ற ஆரம்பித்தது. அலைச்சல் முடிந்து, போதிய ஓய்வு எடுத்த பின்பும் வலி குறையவே இல்லை. ஆஸ்பத்திரிக்கு செல்லவோ பயம்.
சுற்றிலும் விசாரித்ததில் கால்வலி இல்லாத மாதவிடாய் நின்ற பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாமென தோன்றியது. ஆளாளுக்கு விளக்கங்களும், வைத்தியங்களும் சொன்னார்கள். உடல் எடை கூடுவது ஒரு காரணமாக கருதப்பட்டது. நம்மில் பலருக்கு நாற்பது வயதுக்கு மேல் உடல் எடை நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஒன்று என்று உணர்வது நிஜந்தானே ? உடம்பில் ஈஸ்ட்டிரோஜன் குறைந்ததால், இயற்கையாக ஏற்படும் வயோதிக மாற்றத்தால் குதிங்காலில் வலி என்றார்கள். முற்காலத்தில் போல கொல்லம் செங்கல் பதித்த தரைக்குப் பதிலாக வீடுகளில் மொசைக், மார்பிள்,சிமெண்ட் டைல்ஸ் பதித்திருப்பதுதான் காரணம் என்றும் ஒரு கருத்து சொல்லப்பட்டது.
கால்களை வெதுவெதுப்பான வெந்நீரில் சிறிது நேரம் வைத்திருந்து பார்த்தாயிற்று. அளவு கொடுத்து விசேஷமாக செய்து வாங்கிய மைக்ரோஸில் செருப்பை வீட்டிற்குள் அணிந்து கொண்டு நடக்கலானேன். வெளியே செல்லும் போது அணிவதற்கு அக்குபங்சர் செருப்பு. மருந்து கடைகளில் பிரத்யேகமாக விற்கும் ஸ்டாக்கிங்ஸ் போன்ற 'ஆங்க்லெட்ஸ் ' அணிந்து பார்தேன். விதம் விதமாய் தைலங்கள் - யூகலிப்டஸ், வேதகோடாரி, ஃபிராஞ்ச் ஆயில் - எல்லாம் தடவிப் பார்த்தும் பலனேயில்லை. எருக்கம் இலையை சூடான செங்கல்லில் வைத்து எடுத்து கொடுக்கும் ஒத்தடமும் சிபாரிசு செய்யப்பட்டது.
எலும்பு வளர்ந்திருக்கலாம், ஆபரேஷன் செய்ய வேண்டியிருக்கும் என்றும் சிலர் குண்டைத் தூக்கிப் போட்டார்கள். இது எலும்பு தேய்மானந்தான், இதற்கு மருந்தேயில்லை என்று அடித்துச் சொன்னவர்களும் உண்டு. பயந்து பயந்து எப்போதாவது பொறுக்கமுடியாமல் வலி மாத்திரைகள் சாப்பிடுபவளிடம் ஸ்டாராய்ட் ஊசிதான் போட்டாக வேண்டும் என்று சிலர் பீதியை கிளப்பினார்கள்.
என் கால்வலி கலாட்டாவால் ரொம்ப நொந்து போன என் குடும்பத்தினர் உருப்படியான வைத்தியம் பார்க்க வேண்டுமென்று வற்புறுத்தியபின் ஒரு எலும்பு ஸ்பெஷலிஸ்ட் டாக்டரை அணுகினேன். என்னென்ன டெஸ்டுகளோ, எவ்வளவு செலவோ என்றெல்லாம் கலக்கத்துடன் சென்ற என்னிடம் மிகவும் ஆறுதலாக பத்து வருடத்திற்கு இந்த குதிங்கால் வலியை தள்ளிப் போடுவது மிகவும் சுலபம் என்றார். அப்போதைய வலிக்கு ஐந்து நாளைக்கு மாத்திரைகள் தந்துவிட்டு வலி குறைந்ததும் எளிமையான பிஸியோதெரபி எக்ஸர்சைஸ்களை செய்து வரும்படி கூறி அனுப்பி விட்டார்.
கொஞ்ச காலத்திற்கு அதிக பளுவை தூக்கக் கூடாது, அடிக்கடி மாடிப்படி ஏறக்கூடாது, காலை அதிக நேரம் தொங்க விட்டபடி அமர்ந்து நீண்ட தூரம் ரயிலிலோ, பஸ்ஸிலோ பிரயாணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றார். பொதுவான யோசனையாக உடல் எடை கூடாமலிருக்க உணவில் கிழங்குகளை குறைக்கச் சொன்னார்.
பயங்கரமான சிகிச்சைகளை, செலவை எண்ணி பயந்த எனக்கு இவ்வளவு ஈஸியாக டாக்டர் சொல்லிவிட்டது பெரிய நிம்மதியாக இருந்தாலும் உண்மையிலேயே அவர் சொன்ன எளிய எக்ஸர்சைஸால் குதிங்கால் வலி போய் விடுமா என்ற அவநம்பிக்கை நிறையவே இருந்தது.
ஆனாலும் மிகுந்த கீழ்படிதலுடன் செய்ய ஆரம்பித்தேன். முதலில் சில நாட்களுக்கு பெரிதாக முன்னேற்றம் தெரியாமல் கவலையாகக்கூட இருந்தது. இருந்தாலும் நம்பிக்கை, விடாமுயற்சியுடன் தொடர்ந்து செய்த பயிற்சியால் சில வாரங்கள் கழித்து முதலில் ஒரு காலில் வலி முற்றிலும் போய் விட்டது. அடுத்து மற்றொரு காலிலும் வலி கிட்டதட்ட போய் விட்டது. எனக்கே இது நம்ப முடியாத ஆச்சரியமாய் இருக்கிறது.
ரத்த ஓட்டத்தை சீராக்கி, தசைகளை நன்றாக இயங்கச் செய்யும், வலியை விரட்டிய எளிய எக்ஸர்சைஸ் இதுதான்: கால்கள் தரையில் பதியும் வண்ணம் ஒரு நாற்காலியில் அமரவும். பாதத்தின் பத்து விரல்களையும் இருபது முறை உள் பக்கமாய் மடக்கி விரிக்கவும். அடுத்து முன் பாதங்களை தாளம் போடுவது போல இருபது முறை உயர்த்தி இறக்கவும். அடுத்து முன் பாதத்தை ஊன்றியபடி குதிங்கால்களை இருபது முறை தரையை விட்டு மேலே உயர்த்தி இறக்கவும். இந்த மூன்று பயிற்சிகளையும் தினமும் காலை, மாலை இரு வேளையும் கண்டிப்பாக செய்ய வேண்டும். அது போகவும் இடையே எத்தனை தடவை சாத்தியப்படுகிறதோ அத்தனை தடவை செய்யலாம்.
இவ்வளவு எளிய வைத்தியம், பலனளிக்கும் வைத்தியம் இருப்பதை குதிங்கால் வலியால் அவதிப்படும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும், அதை செய்து பயனடைய வேண்டும் என்பதே என் அவா. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது போல யாம் துன்பம் நீங்கிய வழி அறிக இவ்வையகம் என்ற எண்ணந்தான் இந்த கட்டுரைக்கு தூண்டுகோள்.

The above post is copy-pasted from a forum from Mrs.Pavalamani Pragasam post on mayyam... Hope u follow these simple exercises and get relived of ur pain... Sorry, I can't give link to the post here as the admin doesn't encourage it...

Good luck.

மேலும் சில பதிவுகள்