தேவா மேடம்,தயவு செய்து எனக்கும் உதவவும்.

நான் வாரத்தில் 4 அல்லது 5 தடவை பாதாம் எண்ணய் முகத்திற்கு பூசுவேன். தினமும் கடலை மா, பாசிப்பயற்றம் மா, பன்னீர் ரோஜா இதழ்கள் (காய வைத்துப் பொடித்தது), குங்குமப் பூ, மஞ்சள் எல்லாவற்றையும் பாலிலோ தயிரிலோ கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிக்குப் பூசிக் குளிப்பேன்.ஆனால், என் கருவளையமோ, தாடை, கழுத்துப் பகுதியில் உள்ள கருமை நிறமோ கொஞ்சமும் மாறவில்லை. என் கன்னங்கள் மாத்திரந்தான் நல்ல நிறத்திற்கு வந்துள்ளன. நான் முகத்திற்கு பெயர் & லவ்லி (fair & lovly)பூசுவேன். ஏனைய இடங்களுக்கு கொக்கோ பட்டர் பொடி லோஷன் (cocoa butter body lotion)போடுவேன். என் முகத்தையும் கழுத்தையும் ஒரே நிறத்திற்கு கொண்டு வர நான் என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து உதவவும்.
இந்த பொடி லோஷன் (body lotion)என் வயிற்றுப்பகுதிக்குப் பூசி சில வாரங்களிலேயே என் வயிற்றில் உள்ள ஸ்றெட்ச் மார்க்ஸ் (stretch marks)குறைந்து, அவ்விடம் நல்ல நிறமாகவும் (fair)மாறி விட்டது. ஆனால் என் கழுத்துப் பகுதியில் எவ்வித மாற்றமும் வரவில்லை!?

ஹாய் ப்ருந்தா, நீங்கள் செய்யும் ட்ரீட்மெண்ட் முகத்திற்கும், உடம்புக்கும் சரியானதே. ஆனால் கண்ணை சுற்றி உள்ள பகுதி மிகவும் மென்மையானது. அதற்கு நாம் தனியான அக்கறை எடுப்பது நல்லது. தங்களது கருவளையத்திற்கான காரணம் தூக்கமின்மை என்றால் என்ன க்ரீம் போட்டாலும் பலன் கிடைக்காது. தூங்குவதுதான் அதற்கு நல்ல மருந்து. அப்படி இல்லாமல் கவலை, டிப்ரெஷன் என்றாலும் அந்த ஸ்ட்ரெஸ் கண்களில் தெரியும். இவற்றை விடுத்து கருவளையம் முன்பு வந்தது, இப்போது இன்னும் சரியாகவில்லை என்றால் வெள்ளரியை பாலில் கலந்து பூசலாம். உருளைக்கிழங்கு சாறு நல்ல பலன் கொடுக்கும். கடைகளில் விற்கும் தரமான பிராண்டுகளின் அண்டர் ஐ க்ரீம், ஐ பர்பெக்டர் போன்றவற்றையும் உபயோகிக்கலாம்.

கழுத்துப்பகுதிக்கு ஸ்க்ரப்பிங் செய்து பேக்கிங் போடுவது நல்ல பலனைத் தரும். முடியில் அதிக எண்ணெய் வைத்து அது கழுத்தில் பட்டாலோ, டால்கம் பவுடர் அடித்தாலோ கழுத்தில் கருமை ஏற்படும். கழுத்துக்கென்று தனியாக ப்ளீச்சிங் செய்வதும், வெளியில் சென்று வந்த பின்பு மேக்கப் ரிமூவர் அல்லது எஸ்கினால் சொல்யூஷன் கொண்டு கழுத்தை க்ளீன் செய்வது கழுத்தை வெளுப்பாக்கும். ட்ரை செய்து விட்டு சொல்லுங்கள்.தொடர்ந்து தயிர் கலந்த பேக்கையே போடுங்கள். அதனோடு சில துளிகள் எலுமிச்சை சாறும் சேருங்கள். எஸ்கினால் லிக்விட் பிலிப்பைன் நாட்டு கடைகளில் கிடைக்கும்.

நண்பி பிருந்தா,ஸ்பா மில்க் சால்ட் என்று கடைகளில் கேட்டால் கிடைக்கும்.அதனைக்கொண்டு குளிக்கும் போது ஸ்க்ரப் செய்து வந்தால் கழுத்துப் பகுதி கூடிய விரெய்வில் பலன் கிடைக்கும்.அனுபவத்தில் கண்ட உண்மை.விலையும் குறைவு.எதற்கும் தேவா அக்காவிடமும் இதைப் பற்றி கேட்டுப் பார்க்கவும்.பாவித்து விட்டு எனக்கு பின்னூட்டம் தரவும்.முதல் பாவனையிலே வித்தியாசம் தெரியும்.

busy has no time 4 tears

மிக்க நன்றி தேவா மேடம். உங்களிடம் இருந்து பதில் வராதென நினைத்து நான் இந்த திரட்டைக் கவனிக்கவில்லை. இன்றுதான் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. நீங்கள் கூறியபடியே செய்து பார்க்கின்றேன்.

சகோதரி Fazmila Sabeer, உங்கள் பதிலுக்கும் நன்றி. நான் அதனை வேண்டி உபயோகப்படுத்தி விட்டுச்சொல்கின்றேன்.

திருமதி பிருந்தா

தேவா மேடம், எனக்கு 20வயதுக்குள்ளேயே கழுத்துப் பகுதி கறுக்கத்தொடங்கிவிட்டது. நானும் அதில் அக்கறை காட்டவில்லை. திருமணத்தின் பின் (அடிக்கடி குழந்தைகளை இழந்த) மன அழுத்தத்தினால் நான் என்னைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன். இப்போ நீங்கள் ஏனையவர்களுக்குக்கூறும் அறிவுரை (குறிப்புகளின்) படி செய்து நல்ல பலன் அடைந்துள்ளேன். என் முகம் நல்ல நிறமாகவும் பிரகாசமாகவும் வந்துவிட்டது. அதற்கு உங்களுக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். என் மனதிலும் உடலிலும் (ஆரோக்கியத்திலும்) நிறைய மாற்றங்களை சில மாதங்களிலேயே உணர்ந்தேன். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

Thank you for everything.

உங்களோட பதிலை இப்போதுதான் பார்த்தேன். மிகவும் சந்தோஷம். கவலைப்படாதீங்க. நல்லதே நடக்கும். இந்த குழந்தை விஷயம் மட்டும் ஏன் இப்படி நாளாகுதுன்னு யோசிக்கவே கூடாது. நிச்சயம் நடக்கும்னு நம்பணும். அனுபவத்துல சொல்றேன். உங்க நம்பிக்கையே உங்க ஆசையை நிறைவேத்தும். உங்க மனநிலை மாறி இப்போது சந்தோஷமாக இருப்பது அறிந்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த புது வருடத்தின் துவக்கம் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் எல்லாவித சந்தோஷங்களையும் தர என் வாழ்த்துக்கள்.

உங்கள் பதிலுக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம். இப்போ பிறக்கும் வருடம் எனக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் நல்லதொரு ஆண்டாக அமைய நானும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

மேலும் சில பதிவுகள்