உதவுங்கள் தோழிகளே...

உதவுங்கள் தோழிகளே...

எனக்கு 23 நாள் ஆன பெண் குழந்தை உள்ளது..சில சமயம் தாய்பால் போதாமல் அவ ரொம்ப அழுகை...நான் நல்லா தான் சாப்பிடரேன்..ஆனா எனக்கு சாப்பிடும் முறை பத்தி சொல்லுங்க..நான் பூண்டு,சுண்டைக்காய் வற்றல்,பாகற்காய்,Mothers Horlicks(atleast 5 times per day)இப்படி நிறய சாபிடரேன்...ஆனா எவ்ளோ நேரத்துக்கு ஒரு தடவை சாப்பிடனும்னு தெரியல...ஒரு தரம் பால் குடுத்தா உடனே சாப்பிட்டாதான் அடுத்த முறை பால் வரும்மா??நான் எப்பவும் ரைஸ் தான் சாப்பிடரேன்...வேர எதுவேனா சாப்பிடலாமா??பாப்பாக்கு கேஸ் problem இருக்கு போல stomach ரொம்ப்ப upset இருக்கறதுனால ரொம்ப்ப அழுகை எனக்கு தாங்க முடியல எதாவது சொல்லுங்கள்....Please...

ஓ தளிகா 3 பல் பூண்டு போதுமா...நான் நிறய போட சொல்லி சாப்டேங்க..அதான் பாப்பப்க்கு சூடு போல எதுவுமே அப்போ அளவாதான் சாப்பிடனும்..

Anitha..

Anitha..

மர்ழியா Sorry ங்க அவசரத்துல பெரிசா தலைப்ப போட்டுடேன்..ஒரே பாப்பாtension ... அதான் ஒன்னுமே புரியல...எனக்கு பாப்பா அழுதாலே ரொம்ப்ப பயம்..இதுக்கும் வீட்ல இப்போ பெரியவங்க தான் பாக்கராங்க இருந்தாலும் எனக்கு பயம்மா இருக்கு..சின்ன பாப்பா அதான்..இப்போ தான் 23 ஆகுது..
Anitha..

Anitha..

மர்லியா எப்படி பா கரெக்டா சொல்றீங்க கம்பை தூக்குவேன் என்று ஹி ஹி இதோ வரேன் ஏன்னா உங்களை பார்த்ததிலிருந்து கொட்டு வைக்க முடியாது என்று தெரிந்து கொண்டேன் . ஹா ஹா ஹா சிரிங்க.
ஜலீலா

Jaleelakamal

பூண்டு சாதம் என்குறிப்பில் முட்டை சோறு என்று இருக்கும்

ஜலீலா

Jaleelakamal

உங்க பதிவை படிக்கல நீங்க சொன்ன பிந்தான் மேலே இருக்கும் பதிவை கவனித்தேன்..அதுதான் சொன்னேனே நான் வழக்கமாக செய்வதுன்னு இதுகெல்லாம் எதுக்கு சாரி நாமெல்லாம் இரே இனம் ஹிஹி..

முதலில் வாழ்த்துகள்..குழந்தைக்கு கேஸ் பிராப்லம்னா தாயிடம்தான் மிஸ்டேக் இருக்கும்..ஒன்று குழந்தைக்கு சரிவர பால் கிடைக்காமல் போவதால் கேஸ் பிராப்லம் வரும் இரண்டாவது நீங்க டைமுக்கு சாப்பிடாமல் இருப்பதால் அது குழந்தைக்கு வரும்..நீங்க உணவை டைமுக்கு சாப்டனும்..அதோட காலையில் ஓமத்தணீர் குடிக்கலாம் குழந்தைக்கு ஈஸியா ஜூரணமாகும்,கேஸ் பிராப்லமும் வராது,பாலும் சுரக்கும்,அதோட அசைவம்னா சிறிய மீன்களுக்கு பால் சுரக்கும் அதை சாப்டுங்க..அடிக்கடி பால் குடிங்க நீங்க இந்த டைமில் எது சாப்டாலும் உடனே அது பாலாக குழந்தைக்கு போகும்..இன்னும் இருக்கு இது போதும்னு நினைக்கிறேன் :-)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்ன ஆன்லைனா உங்களுக்கு,தளிக்கு,இலாக்கு மெயில் போடதான் வந்தேன்.இலா இப்ப ஆன்லைன் பேசிடறேன் உங்க இருவருக்கும் கொஞ்ச நெரத்தில் மெயில் வரும் ஸ்கேன் ஓகே!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நான் தான் சொன்னேன்லபா,பயப்படாதீங்க?குழந்தைன்னா அழ தான் செய்யும்.சில சமயம் எந்த வலியும் இல்லாம சும்மாவே அழுவாங்க.எங்கம்மா மடியிலே குழந்தையை படுக்க வச்சு அப்படியே கழுத்தை கையில் பிடிச்சபடி தாலாட்டுவாங்க.அழுகையை நிறுத்திடும்.எங்கம்மா தாலாட்டை நிறுத்தினதும் அழ ஆரம்பிப்பா.பெரியவங்க கூட இருக்கும் போது நீங்க இந்தளவுக்கு பயப்படதேவையில்லை.

மாம்பழம் சூடு,அதுக்காக் நீங்க குளிர்ச்சியா இருக்குற பொருளையும் நிறைய எடுத்துக்க கூடாதுபா.அத்வும் பாப்பாக்கு ஜலதோஷம் பிடிக்க வச்சிடும்.அப்புறம் நான் என்ன் தான் சாப்பிடறதுன்னு கேட்டா நீங்க எப்பவும் சாப்பிடுற சாப்பாடே சாப்பிடலாம்.இது தான்னு,அதுதான்னு இல்ல,எதையும் பிடிச்சு சாப்பிடுங்க.பெரியவங்க எது செய்தாலும் நல்லதுக்குன்னு அவங்க கிட்ட விடுறது தான் பெஸ்ட்பா.எந்த வைத்தியம் செய்தாலும் பயப்படாம அமைதியா இருக்கனும்,இல்லாட்டி அவங்களுக்கு பயம் வந்துடும்.

ஆமாங்க மர்ழியா கேஸ் நான் சாப்பிடரதுல தான் வந்திருக்கும்..ஆனா நான் ரொம்ப்ப பாத்து பாத்து தான் சாப்பிடரேன் அதான் புரியல

Anitha..

Anitha..

ஹாய் அனிதா,முதலில் வாழ்த்துக்கள்.உங்க குட்டி(23நாள்)செல்லத்துக்கும்தான்பா!பாப்பாஸ்னாலே அழுவாச்சி என்பது ஒரு ஸ்பெசாலிட்டிபா.கொஞ்ச நேரம் அழுதுட்டு அப்புறம் தன் பொக்கைவாயால் ஒரு ஸ்மைல் தருவாங்க பாருங்க!நீங்க அதையும் ரசிச்சுட்டு இருப்பீங்களே இப்ப .சாப்பாட்டை பொருத்தவரை உங்களோட ஆஸ்யுச்வல் டயட்+உங்க வீட்டு. பெரியவங்க கொடுப்பாங்களேப்பா.பத்திய சாப்பாடு+லேகியம்.அதே மாதிரி நம்ம தோழிகலாம் சொன்னாப்பல வாயு ஐயிட்டம்ஸ் அவாயிட் பண்ணிடலாம்.நம்மளும் குழந்தையா இருக்கிறச்சே இப்படிதான் அழுதிருப்போம்(உட்வர்ஸ் கொடுக்கலாம்)கவலைப்படாம பாப்பாவுக்கு ங்கா கொடுத்திட்டு நீங்களும் ஹெல்த்தியா சாப்பிட்டு உடம்பை கவனித்துக்கொள்ளவும்

எனக்கு அதை நீங்கதான் கண்டு பிடிக்கனும் குழந்தைக்கு சரியாக வYஇறு நிறையும் அளவிற்க்கு பால் கிடைக்கிறதா இல்லை உங்கமேல் என்ன தவறு இருக்குன்னு பார்த்து நடங்க எல்லாம் சரியாகும் கவலை வேணாம்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்