எல்லோரும் இங்கே வாங்க அரட்டைக்கு

சுகன்யா அரட்டை த்ரெட்டும் நிரம்பிடுச்சு. அதனால் எல்லோரும் இங்கே வந்து அரட்டைய தொடங்குக. சந்தோஷமா பேசுவோம் வாங்க...வாங்க....வாங்கப்பா எல்லோரும்

ஹாய் தனிஷா அப்ராக்கு இப்ப எப்படி இருக்கு?நானே முதல் பதிவை போட்டுடேன் போதுமா!!!

நானும் நம்ம ஆசியா உமர் அக்கா வீட்டுக்கு போனப்ப அவங்களுக்கு ஒரே சந்தோஷம். நல்ல கவனிச்சாங்க. ரொம்ப சாப்ட் அவங்க. வெஜ்சூப், சிக்கன் கட்லட், கேக் என்று கலக்கீட்டாங்க. அவங்க பொண்ணு நல்ல ஜாலியா பேசினா. பையன் எக்ஸாம்ல பிஸி. ரொம்ப பொறுமை ஆசியா அக்கா. அவங்களோட அன்பு ரொம்ப பிடிச்சிருந்தது. என்ஹஸ்பண்ட அவங்க தம்பினு கூப்பிட்டது என்னை ரொம்ப சந்தோஷபடுத்தியது. நம்ம ரிலேஷன் வீட்டுக்கு போயிட்டு வந்த மாதிரி பீலிங் எனக்கு.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் தோழீஸ்,நம்ம மனோகரி மேடம்,செல்வி மேடம் எல்லாரும் எங்கேபா,அவங்க பதிவுகளை பார்த்து ரொம்ப நாளாச்சு?தெரிந்த தோழிகள் சொல்லவும்.

நம்ம செல்விமாவுக்கு உடம்பு சரியில்லை. நான் நேத்து பேசும் போது கட் ஆயிடிச்சு. செல்விமா இப்போ எப்படி இருக்கீங்க

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அந்தநாள் உண்மையில் மறக்க முடியாத நாள்.
சாதிகா வீட்டில்
குட்டிப்பையன் ஆமீர் என் கைப்பையை எடுத்துக்கொண்டு குடுகுடுவென்று ஓடியது.
எல்லா நிஜ சிரித்த முகங்கள். உண்மை சிரிப்பை கண்ணில் கண்டு பிடிக்கலாம்.
அருமையான காலை உணவு.
என்னைப்பற்றி முக்கால்வாசி (இல்லை அதற்கும் மேல்) கணித்து எழுதி வைத்திருந்த சாதிகாவின் குறிப்பு

மர்ழி வீட்டில்
உயர்ந்த பெண். குட்டியாக எட்டிப்பார்க்கும் வயிறு.
க்யூட் மரியம் - கிளம்பும்போது எங்க போறாங்க. எதுக்குப்போறாங்க இங்கேயே இருக்கட்டும்ன்னு சின்னச்சிணுங்கல்.
அரட்டை அரங்கத்தை மிஞ்சும் அரட்டை.
போட்டோவில் பார்த்தது - இலா, அதிரா, ஜலீலா
ஆஹா - நிஜமாகவே ஜாலிலோ ஜிம்கானாதான்.

ஜலீலா - நான் ஒண்ணும் ஒல்லி இல்லை. பழைய மாமி ஒல்லி மாமி. இப்ப குண்டு மாமிதான். எங்க வீட்டில் நாந்தான் குண்டு.
அன்புடன்
ஜெயந்தி மாமி

நீங்க சொன்னது உடனே கால் செய்தேன் பாவமா இருக்குப்பா ஹாஸ்பிடல் கிளம்பிட்டு இருக்காங்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

Vanakkam

நேத்து எங்கிட்ட பேசும்போது கூட அவங்களால் பேசக்கூட முடியல.எனக்கே ரொம்ப கஷ்டமாயிட்டு. லைன் வேற கிடைக்க மாட்டேங்குது.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் மர்லி,தனிஷா எப்படி இருக்கீங்க?செல்விம்மாக்கு உடம்பு முடியலைன்னு கேக்கறதுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு.மர்லி எனக்கு முடிஞ்சா அவங்க நம்பர் மெயில் பண்ணுவீங்களா?ஒருமுறை ஆன்லைனில் சாட் பண்ணினேன்,நம்பர் வாங்கவில்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உங்க முதல் பதிவ இப்போதான் பார்த்தேன். அப்ரா நல்லாயிருக்கா. என்னை படுத்தி வைக்குது.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்