காணாமல் போகும் பட்டிமன்ற நடுவர்களைத் தேடுவோர் சங்கம்

எதுக்கெதுக்கோ ஒரு சங்கம் தொடங்கறாங்க! அவ்வப்போது காணாமல் போகும் நடுவர்கள், திரும்பி வரவும், விரைவில் குணமாக ப்ரார்த்திக்கவும், ஒரு சங்கம் தொடங்கினால் என்னப்பா? கடைசி நேரத்தில் நடுவர்கள் காணாமல் போவது நம் அறுசுவையின் ராசி, அதான் ஆளுக்கொரு பூதக்கண்ணாடி எடுத்திட்டு தேடலாம்னு! சும்மா ஜாலிக்கு தான் யாரும் எதுவும் நினச்சுக்காதீங்கப்பா!!!

கண்ணு சுஹைனா உங்களை மாதிரி சின்னப்பொண்ணுங்களுக்கு பொறுமையை வளர்க்கத்தான் நாங்க இப்படி காணாமப்போகிறோம். (குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல)
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஹாய் சுஹைனா வாங்க தேடலாம்.தேடலாம் சொலிலிட்டு சும்மா இருந்தா எப்படி பா

எனக்கொரு சந்தேகம்,
சுஹைனா, உங்கள் பெயரை "சுஹைனா மழர்" என்றுதானே போட்டிருக்கிறீங்கள், அல்லது "மலர்" என்பதைத்தான் நியூமரோலாஜி ப்படி மாற்றிப்போட்டிருக்கிறீங்களா? தெளிய வையுங்கப்பா இல்லாட்டில் அதிராக்கு நித்திரையே வராது...

செல்வியக்கா சீக்கிரம் நலமாகி வந்திடுவா, இதைப்பார்த்தால் செல்வியக்கா அவசரப்பட்டிட வேண்டாம் ஆறுதலாக ஓய்வெடுத்து வாங்கோ... நல்ல தலைப்போடு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எங்கே போய்ட்டீங்க?ப்ளீஸ் எங்கிருந்தாலும் அருசுவைக்கு வரவும் .உங்களைக்காண ஆவலுடன் அனைவரும் காத்திருக்கோம்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆ.. சுஹைனா,
அப்படியா சங்கதி... என் சந்தீகம் தீர்த்து வைத்ததற்கு ரொம்ப நன்றி, இத யோசித்து யோசித்தே நேற்று என் நித்திரை போச்சு.... இனிமேல் தான் கொஞ்சம் ஓய்வெடுக்கப்போகிறேன்....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

காணாமல் போக வேண்டும் என்ற எண்ணத்தில் யாரும் போவதில்லை. எங்களைப் போல் வேலைக்கு செல்பவர்களுக்கு கேட்கவே வேண்டாம். வீட்டு வேலைகளுக்கே நாங்கள் திட்டம் தீட்டியவாறு செய்ய முடியாது.

உங்களுடன் பேசியபின் என் நிலைமை மிக மோசம். டாக்டர் என்னை மருத்துவமனையிலேயே இருக்க சொல்லியும், வீட்டு நிலைமையை யோசித்து நான் வீட்டிலேயே அவ்வாறு இருப்பதாக சொல்லி வந்து விட்டேன். இப்போது சிறிது குணம் ஆனாலும்,ஸ்கேன் பார்த்து சொல்லும் ரிசல்ட்டில் தான் எல்லாமே இருக்கு.

தீர்ப்பை நான் சொல்லாமல் காத்திருந்ததற்கு முதல் காரணம் நான் எதிர்பார்த்த அளவு அதிகம் அதில் யாரும் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. இடையில் நான் வந்து கேட்டுக் கொண்டும் கூட, நான் சொன்ன விதிமுறைகள் காரணம் என்று அறிந்து, தீர்ப்பை சொல்லிவிட நினைத்த நேரத்தில் உடல்நிலை மோசமாகி விட்டது.

நான் ஒவ்வொருவரையும் தனித்தனியாக பாராட்டி, கருத்துக்களை சொல்லி தீர்ப்பு எழுத நினைத்தேன். ஆனால், நான் சொல்ல சொல்ல என் கணவர் அடித்தார். அதுவும் ரூமில் நெட் கனெக்ஷன் இல்லை. எனக்காக பிசியை ரூமிற்கு கொண்டு வந்து நோட்பேடில் அடித்து, பிறகு வெளியில் கொண்டு வந்து நெட் கனெக்ட் செய்து காப்பி செய்து அவர் அவ்வளவு போட்டதே பெரிய விஷயம். ஏற்கனவே நான் கொடுத்துக் கொண்டிருக்கும் கஷ்டஙகளுக்கு மத்தியில் அதற்கு மேலும் தொந்திரவு கொடுக்க நான் விரும்பவில்லை.

நான் முதலிலேயே சொன்னது போல் பட்டிமன்ற நடுவராக இருப்பது இதுவே முதல்முறை. அப்பவே என் கணவர் சொன்னார், உன் உடல்நிலையும் சரியில்லை, இப்ப வேண்டாம்னு சொல்லிடுன்னு. நான் தான் என்னை மதித்து அழைத்த ஜெயந்தி மேடத்திற்கு மரியாதை கொடுக்க நினைத்து ஏற்றுக் கொண்டேன். அது எனது தவறு தான். தீர்ப்பு சொல்ல உங்களையெல்லாம் ரொம்பவே காக்க வைத்ததிற்காக உங்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

வருத்தத்துடனும், வேதனையுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விமா இப்போ உங்க உடல்நலம் பரவாயில்லையா?சீக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
உங்க பட்டிமன்றம் தீர்ப்பு நன்றாக இருந்த்து.

ஹலோ செல்விமா,
இப்போது உடல் நலம் பரவாயில்லையா? நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளவும். நீங்கள் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். தீபாவளி என்று எல்லாம் வேலைகளை இழுத்துப் போட்டு செய்து கொண்டிருக்காதீர்கள். நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளவும்

அன்புடன்,
மணி.

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

மேலும் சில பதிவுகள்