தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

அனைத்து அறுசுவை சகோதர, சகோதரிகளுக்கும் என் இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

நன்றி மேடம்,தங்களுக்கும்,அறுசுவை சகோதரிகளுக்கும் என் இதயங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

உங்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்..எப்படி ஷார்ஜாவில் வருடா வருடம் தீபாவளி கொண்டாடுகிறீர்கள்?இங்கு நான் தீபாவளி கொண்டாட்டத்தை இது வரை கண்டதில்லை

அறுசுவை சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

அறுசுவை சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள். எல்லோரும் இனிமையா தீபாவளி கொண்டாடி முடித்து இருப்பீர்கள். தளிகாவின் போல்தான் எனக்கும். இங்கு யாரேனும் ஒரு பட்டாசு கொளுத்துவார்களா என்று பார்த்தேன். ம்ஹூம்.. சார்ஜாவிலேனும் தீபாவளி தெரிகிறதா.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

வாழ்த்துக்களுக்கு என் நன்றி! தீபாவளியை நாங்கள் எப்போதும் கொண்டாடுவதில்லை. தைப் பொங்கலைத்தான் எங்கள் இல்லத்தில் சிறப்பாகக் கொண்டாடுவோம். ஷார்ஜாவில் பல இல்லங்களில் மத்தாப்பூக்கள் இரவில் பூச்சொரிவதை நான் பார்த்திருக்கிறேன். நிறைய வீடுகளின் வாசலில் கோலம் போட்டு தீபங்களால் அலங்கரித்திருப்பார்கள். எங்கள் பக்கத்து வீட்டில்கூட அதுபோல அலங்கரித்திருக்கிறார்கள்.

வாழ்த்துக்களுக்கு என் நன்றி!! நாங்கள் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை. என் மாமனார்-மாமியார் தமிழர் பண்டிகையாக பொங்கலைத்தான் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். அவர்கள் வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம். முன்பெல்லாம் இங்கே பட்டாசுகள் கொளுத்துவதைத் தடை செய்திருந்தார்கள். சமீபத்தில் தடைகளை சிறிது தளர்த்தியிருப்பதாக கேள்விப்பட்டேன். இங்கே ஷார்ஜாவில் பட்டாசுகளை சாலையிலும் பால்கனியிலும் வெடிப்பதை எனக்குத் தெரிந்தவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

இப்போதுதான் என் கணவர் தெரிவித்தார்கள், ஷார்ஜாவில் பட்டாசு வெடித்ததால் ஒரு தீ விபத்து இரண்டு வருடங்களுக்கு முன் ஏற்பட்டதால் பட்டாசு வெடிப்பதில் கடுமையான தடை அமுலில் இருக்கிறதாம்.

என் தோழி வீட்டில் கூட தீபாவளியைவிட பொங்கலை சிறப்பாக கொண்டாடுவார்கள். அது அவர்களின் குலவழக்கம் என்று கூறுவாள். நீங்களும் அப்படிதான் என்று புரிந்து கொண்டேன். சார்ஜாவிலாவது மத்தாப்பூ கொளுத்துவதை பார்த்து இருக்குறீர்கள். அபுதாபியில் எதுவும் இல்லை. ஊருக்கு அம்மாவுக்கு போன்செய்த போது அதில்தான் வெடிசத்தத்தை கேட்டேன்.

இங்கு பெட்ரோல் கிடைப்பதால் பட்டாசு கொளுத்துவதால் அதிகமாக திவிபத்து ஏற்படும் என நினைக்கிறேன். அதனால்தான் தடை செய்து இருப்பார்கள்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்