இலங்கை தோழிகள் சங்கம் பாகம் 2

சகோதரிகளே இங்கே வாருங்கள்

நன்றி இமா, நான் நலம். எனக்கும் ஒரே வேலை அதுதான் வர முடிவதில்லை. நான் வந்து இருந்தால் எனது மகள் மடியில் வந்து இருந்து விடுவா. (key board) எதையாவது தட்டிக் கொண்டே இருப்பா. எனக்கும் பிள்ளைகளோடு நேரம் போவதே தெரியாது. காயத்ரி, ுரேஜினி எப்படி இருக்கிறீர்கள்
Vany

நர்மதா,சுரேஜினி,அதிரா,வாணி,ப்ரியா,துஷி,இமா,ஜீவி எல்லாரும் எப்பிடி இருக்கிறீங்கள்.மகளோடு நேரம் போவதே தெரியாது.பதிவு போடவே நேரம் கிடைக்குதில்லை.நர்மதா மகள் என்ன செய்யிறா.வாணி நான் நலம்.ப்ரியாவைக் காணவேயில்லை.துஷி எப்பிடி இருக்கிறீங்கள்.இமா நீங்கள் வெலிங்டனிலா,அல்லது ஒக்லன்டிலா இருக்கிறீங்கள்,சுரேஜினி ஒட்டாவா வந்தால் எங்கட வீட்டுக்கு வாங்கோ
gayathiri

வாணி, காயத்ரி,
நான் நல்லா இருக்கிறன். எல்லாரும் ஆளுக்கொரு குட்டிப் பெண்ணை மடியில் வைத்துக் கொண்டு டைப் பண்ணுகிறீர்கள். குட்டிகள் எல்லோரும் நலம்தானே? அவர்களுக்கு என் அன்பு.
நான் ஒக்லன்டில்தான் இருக்கிறேன் காயத்ரி. உங்கள் உறவினர்கள் இங்கு இருப்பதாக முன்பு சொல்லியிருந்தீர்கள். அவர்களைப் பார்க்க வந்தால் என்னையும் வந்து பாருங்கள்.
இமா

‍- இமா க்றிஸ்

அன்புள்ள இமா, நீங்கள் நலமா? நான் அருசுவை பக்கம் வந்தாலும் 5 நிமிடத்திற்கு மேல் நிற்பதில்லை. என் மகன் ஸ்கூல் போய் வருவதால், அவரின் வேலைகளோடு நேரம் போய் விடும். சுரேயினி பாட்டு பாடி கலக்குகின்றார். காயத்ரி நலமா? எங்கே ஆளையே காணவில்லை?
வாணி

நான் நலம்,நீங்கள் நலமா?அறுசுவையை ஒவ்வொருநாளும் பார்த்திருவன். ஆனால் பதிவு போட நேரம் கிடைக்கிறதில்லை.பிள்ளைகள் எப்பிடி இருக்கிறாங்க? எப்ப கனடா வர்ரீங்க

அனைத்து தோழிகளுக்கும் ஒரு ஹாய்,
நீண்ட காலமாக இங்கு பதிவு போடாமல் விட்டுவிட்டேன்.... நான் எட்டி எட்டிப் பார்த்திட்டுப் போவதால்தான் அப்படி.
நர்மதா போனபதிவில் நீங்கள் எங்களூர்ப் பிள்ளை பூத் தருவார் என்றனீங்கள். உண்மையில் நான் பிறந்ததுமட்டும் தான் ஊரில் பின் ஒவ்வொரு விடுமுறைக்கும் தவறாது வருவோம், அம்மாம்மா கச்சான் அல்வாவும் புளூட்டோவும் வாங்கி வைத்திருப்பா... சாப்பிட்டுச் சாப்பிட்டு விழையாடுவோம், பின் திரும்பும்போது நெஞ்செல்லாம் என்னவோ செய்யும் , தொண்டைக்குள் ஏதோ வந்து அடைக்கும், கண்கள் முட்டி வாய் திறக்க முடியாமல் இருக்கும் வாசலில் கார் நிற்கும் ஸ்ரேஷனுக்குப் போக, காரில் ஏறும்போது திரும்பிப் பார்ப்பதுமில்லை, போவிட்டுவாறம் எனச் சொல்வதுமில்லை,,, இப்படித்தான் அந்தக்காலம் போனது ஆனால் அந்த காரின் பெற்றோல் வாசனை மட்டும் அப்படியே நெஞ்சில் இருக்கிறது எப்ப பெற்றோல் மணத்தாலும் உடனே வருவது ஊர் ஞாபகம் தான். கடைசியாக இடம் பெயரும்போதுதான் சில வருடங்கள் ஊரென்று இருந்தேன். அப்பப்பா அது ஒரு அழகிய பொற்காலம்.

அதனால் எனக்கு உறவினரைத் தவிர பெரும்பாலும் யாரையும் தெரியாது... இன்னும் நிறையக் கதைக்கிறீங்கள்.. பூனை நாய் என்றெல்லாம் எனக்கும் எழுத நிறைய இருக்கு நேரமுள்ளபோது தொடர்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வணக்கம் வணக்கம் வணக்கம்.காயத்3,நர்மதா,வாணி,இமா,ஜீவி, அதிரா, பிரியா, அம்முலு,சுரேகா,துஷி,நைவ்,துஷியந்தி ,ஈழவனண்னா எல்லாரும் எப்பிடி சுகம்.?கிரிஸ்மஸ் வருதில்லா?எல்லாரும் குட்டிகளுக்கு கிப்ட் வாங்கியாச்சா? இப்பவே யோச்சு வாங்கி வச்சுடுங்கோ.

நன்றி ஈழவன் அண்ணா நீங்கள் சொன்னபடி பெரிய கஸ்ரப்பட்டு தேடிதேடி பார்த்தேன்.நன்றி.

அவசர அவ்சரமா அடுத்த வருடமும் வந்திட்டுது.என்னே வேகமான வாழ்க்கை இந்தப்பூமியில பாத்தீங்களோ?குளிரின் வருகை சரியாகக் கஸ்டப்படுத்துகிறது இல்லையா?

அதிரா வாழ்க்கையில் ஆயிரம் நிகழ்வுகள் வந்து போனாலும் ஊர் வாழ்க்கை நினைவுகள் அழியாமலே நமக்குள் இன்னும் வாழுவதை நீங்கள் வெளிக்காட்டுவது மனதைத்தொடுகிறது.

ஊரில் நாம் வாழ்க்கையை வாழ்ந்தோம்.இங்கு அவசர அவசரமாக தினமும் ஏதோ கடமைகளை செய்கிறோம் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. வந்து எல்லாரும் கதையுங்கோ வாங்கோ...

ஹய்!
எல்லாரும் எப்படி இருக்கிறீங்கள்? சுரேயினி இன்னும் கிறிஸ்மஸ்ஸிற்கு ஒன்றும் வாங்கேல்ல. கொஞ்சம் health problem அது தான். வாணி கனடா வாறீங்களா? வெல்கம் ரு கனடா...

வணக்கம்

அன்புத்தோழிகளே, இங்கே வெளிநாடுகளில் இருப்பது போன்று Medical Insurance Policies or Plans இந்தியாவில், நம் ஊரிலும் இருக்கிறதா?
சில நிறுவனங்களைச் சார்ந்தவர்களுக்கு நிறுவனங்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் என கேள்விப் பட்டு இருக்கிறேன். ஆனால், சாதாரணமாகவோ, நாமே எதேனும் திட்டத்தில்(medical policy) சேர முடியுமா?

"உடல் ஆரோக்கியம் » சிகிச்சை அனுபவங்கள் "என்ற தலைப்புக்குக் கீழே, இந்த கேள்வியைச் சேர்த்து உள்ளேன். ஆனால், என்னால் அப்பக்கத்தில், உள் நுழைய முடியவில்லை. தயவு செய்து இது பற்றி விவரம் அறிந்தவர்கள் கூறவும். ஹாசினி, மிகவும் நன்றி. அப்பா பேசுகிறார். நலமாக உள்ளார். சிகிச்சை தொடர்கிறது.
மன்னிக்கவும். இப்பதிவை வேறு தலைப்புக்குக் கீழே போடமுயற்சி செய்தேன். உங்கள் உரையாடலுக்குள் வந்து விட்டது. எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள். அதிரா, உங்கள் பெயருக்கு என்ன அர்த்தம். சொல்வீர்களா? (நீண்ட நாட்களாக எனக்கு கேட்கத் தோன்றியது).
அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

Jeevi,

நீங்கள் கனடாவில் எங்கு இருக்கிறீர்கள்? நான் எனது அப்பா, அம்மா வை பார்க்க கனடா போகின்றேன். சுரேயினி, ஊரை பற்றி எழுத நிறைய இருக்கு, நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன். காயத்ரி, நான் நலம். பிள்ளைகள் சுகம். உங்கள் மகள் சுகமா?

மேலும் சில பதிவுகள்