தேதி: October 31, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கடலைப்பருப்பு - 1 கப்
வெள்ளைக்காராமணி - 1/4 கப்
பச்சைபயறு - 1/2 கப்
மொச்சை - 1 கப்
வெள்ளை கொண்டைக்கடலை - 1/2 கப்
வேர்க்கடலை - 1/2 கப்
முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்
ரீபைன்ட் ஆயில் - 1/2 லிட்டர்
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பிளேக் சால்ட் - 1 பின்ச்
உப்பு - சுவைக்கு
பயறுவகைகளை தனித்தனியாக முதல் நாளிரவே ஊற விடவும்.
மொச்சை மட்டும் தோலுரித்துக்கொள்ளவும். சிறிது கடினமாக இருந்தாலும் நன்கு ஊற வைத்தால் சற்று சுலபமாக உரிக்க வரும்.
மற்ற அனைத்துப் பயறு வகைகளையும் நன்கு அலம்பி தண்ணீர் வடிய விட்டு நிழல் உலர்த்தலாக வைக்கவும்.
எண்ணெய்யை வாணலியில் விட்டு நன்கு காய்ந்ததும் பயறு வகைகளை சிறிது, சிறிதாகப் போட்டு கரகரப்பாக வறுத்து எடுக்கவும்.
வடிதட்டில் போட்டு எண்ணெய் நன்கு வடிய விடவும்.
கடைசியாக கறிவேப்பிலையை பொரித்துப்போடவும். உப்பு, காரம் சேர்த்து கலந்து ஏர்டைட் கண்டெய்னரில் போட்டு வைக்கவும்.
மழை காலத்துக்கேற்ற நல்லதொரு ஸ்நாக்ஸ்.
Comments
ஸாதிகா,
நவதானியம் வறுக்க எண்ணை அளவு சொல்லலையே,கொஞ்சம் போதுமா,எவ்வளவு தேவைப்படும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
ஆஸியா -காரநவதானியம்
ஆஸியா.இப்பொழுது எண்ணை அளவு கொடுத்துள்ளேன்.பாருங்கள்.பின்னூட்டத்திற்கும்,எண்ணெய் பற்றி ஞாபகப்படுத்தியதற்கும் நன்றி.
ஸாதிகா
arusuvai is a wonderful website