split ends எதனால் ஏற்படுகிறது?

அக்கா, எனக்கு சிறு வயதிலிருந்தே நீளமான அடர்த்தியான முடி இப்பொழுது முடி கொட்டிவிட்டது. என்னுடைய தோழிகள் எல்லோரும் முடியை பார்த்து கவலைபடுகிறார்கள். எனக்கு பொடுகு கொஞ்சம் உள்ளது. மேலும் என்னுடைய முடியின் நுனி பகுதி வெடித்து உள்ளது. முடியை வெட்டினாலும் மறுபடியும் வெடித்தே வளர்கிறது. நான் தலைக்கு நிகார் ஆயில் மற்றும் head and shoulders shampoo தான் போடுகிறேன். என்னுடைய பிரச்சனைக்கு தீர்வு சொல்லுங்களேன்

வருவதர்க்கு நிரைய காரணங்கள் இருக்கு,
1) அதிகமான ட்ரயர் யுஸ்
2) அதிகமான கெமிக்கல்ஸ் யுஸேஜ்(Hair colors,Perms,etc)
3) சுட்ரு சூலல்(Environmental factors like heat,cold,wind)
4)using inferior products (Gel etc)
5)Over Washing, etc etc...

ஆயில் மசாஜ் செய்து , தலைக்கு குளிக்களாம்.
Else Regular use of conditioner can work out.

இவ்வளவுதான் எனக்கு தெரிந்தது.
மட்ற சகோதரிகள் டிப்ஸ் தருவார்கள். :)

அக்கா நான் இத்தனை நாள் காத்திருந்தேன். நீங்க தான் முதல் முதலா பதில் அனுப்பியிருக்கீங்க நன்றி அக்கா. நான் ஷாம்பூ தவிர எந்த கெமிக்கல்ஸும் யூஸ் பண்ணதில்லை. ஆயில் மசாஜுக்கு எந்த ஆயில் பயன்படுத்தலாம்(என்னுடைய முடி வெளியே ட்ரை ஆகவும் உள்ளே ஆயிலாகவும் இருக்கும்)

டியர் அரசி வாரம் இரு முறை (நல்லேண்ணை தேங்காய் எண்ணை,) முடிந்தால் ஆவிவ் எண்ணையும் சேர்த்து நல்ல சூடுபடுத்தி அதில் நல்ல ஒரு கைபிடி அளவு கருவேப்பிலை காயவைத்து திரிச்சி போட்டு (மிளகு , அரிசி,வெந்தயம் சீரகம் ) எல்லாம் கால் தேக்கரண்டி போட்டு அடுப்பை ஆஃப் பண்ணி விடவும் இரண்டு முன்று நாள் நன்கு ஊறியதும் அந்த எண்ணை நல்ல தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து அரை மணி நேரத்துலிருந்து ஒரு மணி நேரம் வரை ஊறவைத்து குளிக்கவும்.

அபப்டி இல்லை நல்லெண்ணை தேங்காஅய் எண்ணை சூடுபடித்தி ஆறவைத்து தேய்த்தாலே போதுமானது.

ஷாம்பு நிறைய போடாதீர்கள். கொஞ்சம எடுத்து தண்ணீரில் நல்ல நுரைபொங்க கரைத்து பிரகு தேக்கவும்.
ஜலீலா

Jaleelakamal

ஹெட் அண்ட் சோல்டர் நல்ல சேம்புதான் அதிலும் சில பிராண்ட் இருக்கு..உங்க தலைமுடிக்கு ஏற்ற பிராண்டை தேர்ந்தெடுத்து வாங்குங்க..அடி முடி இரண்டாக பிளவு படுகிறது என்கின்றீர்கள் தலைக்கு எண்ணை பைக்கும் போது முக்கியமா அந்த இடத்தில் எண்ணெய் விட்டு தேய்த்து மசாஜ் கொடுங்க அந்த இடத்தை டிரையாக விடாதீங்க அதோட சேம்பூவுடன் கண்டிஷ்னர் சேர்த்து (தரமானது) உபயோகிங்க மற்றபடி கண்ட மசாஜ்லாம் வேணாம் தெங்காய் எண்ணெய் போதுமானது..நிகாரை கொஞ்சம் விட்டுட்டு சுத்தமான தேங்காய் எண்ணெய் உபயோகித்து பார்கலாம்..

தேவா படிச்சு இருந்தால் நிச்சயம் பதில் கொடுத்து இருப்பாங்க பாவம் அவங்க நர நர ந்னு பல்களை கடிச்சுட்டு இருக்காங்க அட்மின் வரவுக்காக அதனால் பதில் போட வில்லை போல :)

உங்க பதிவு யார் கண்ணிலும் பட வில்லை இப்பாதான் பார்க்க முடிஞ்சது..யாரும் பார்த்து இருந்தால் பதில் போட்டு இருப்பாங்கமா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

Dear arasi.முடி பிளவு ஏற்படுவதற்கு ஊட்டசத்து முழு நீள முடிக்கு போதவில்லை .அதாவது நாம் உண்ணும் உணவில் இருந்து முடிஅதுக்கு தேவையா சத்துகளை எடுத்து கொள்ளும்.உங்களுக்கு நீள முடி என்பதால் சத்து முழு நீள முடிக்கு சென்றடையவில்லை.முடியை cut பண்ணியவுடன் சத்தான உண்ணவா சாப்பிடுங்க.ஆயில் மாசாஜ் க்கு நல்லண்ணெய்+விளக்கெண்ணெய்+தேங்காயெண்ணை மிக்ஸ் பண்ணி தலைக்கு தேய்ச்சு மசாஜ் பண்ணுங்க.துண்டை warm water ல்
முக்கி தலையில் கட்டி கொள்ளுங்கள்.இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்...இதல்லாம் எனக்
கு Doctorசொன்ன advice.நான் aswini hair oli use பன்னுகிறேன்.இப்போ கொட்டுவது குறைந்துள்ளது.

ப்ரீதா

ப்ரீதா

முடியில் உள்ள ஸ்ப்ளிட் எண்ட்ஸை தவிர்க்க வேண்டுமானால், சில தவிர்ப்பு முறைகளை முன்கூட்டியே கடைபிடிக்கலாம். ஆனால் ஸ்ப்ளிட் எண்ட்ஸ் வந்தப்பிறகு ஹேர் கட் தவிர, அதனைப் போக்க எதுவும் செய்ய இயலாது. முதலில் ஸ்ப்ளிட் எண்ட்ஸ் உண்டாக சில காரணங்களைப் பார்ப்போம். நீங்கள் ஹெட் அண்ட் ஷோல்டர் ஷாம்பூ உபயோகிப்பதாக சொல்லி இருக்கிறீர்கள். இப்படி ஆண்ட்டி டாண்ட்ரப் ஷாம்பூ உபயோக்கும்போது முடியில் உள்ள ஈரப்பதம் நீங்க வாய்ப்புண்டு. அதனால் ஷாம்பூ போட்டு முடியை அலசியப் பிறகு, தரமான கண்டிஷணர் உபயோகியுங்கள். இதனால முடி ஈரப்பதம் இழக்காமல் இருக்கும். ஹேர் ட்ரையர், ஸ்ட்ரெயிட்னிங் அயர்ன் போன்றவற்றை அதிகம் உபயோகிக்காதீர்கள். அதிக சூடு முடிக்கு ஸ்ப்ளிட் எண்ட்ஸ் பிரச்சணையை ஏற்படுத்தும். அதிக வெயிலில் வெளியில் செல்ல நேர்ந்தால் முடியை கவர் செய்து செல்லுங்கள். எண்ணெய் தடவுவது மட்டும் முடி வெடிப்புக்கு நல்ல தீர்வு அல்ல. உங்களால் வேறு விதங்களில் முடி வெடிப்பதை தவிர்க்க இயலாவிட்டால், தலை குளித்ததும் மாய்ச்சுரைசிங் ஹேர் க்ரீம் அல்லது மூஸ் உபயோகியுங்கள். முடி வறண்டு போகாமல் இருக்க இந்த க்ரீம் உதவும். ஹேர் கலரிங் செய்ய ஆசைப்பட்டால் ஹெர்பல் அல்லது ஹென்னா கலரிங் செய்துக் கொள்ளுங்கள். இது எல்லாவற்றையும் விட சிறந்த வழி,, சலோன் சென்று ஹேரை அட்லீஸ்ட் 2 மாதத்திற்கு ஒரு முறையேனும் ட்ரிம்மிங் செய்து கொள்ளுங்கள். பார்லரில் ஸ்ப்ளிட் எண்ட்ஸ் இருக்கிறது, அதனை ட்ரிம் செய்து விடுங்கள் என்று சொன்னால் நிச்சயம் செய்வார்கள். ரெகுலரான ட்ரிம்மிங் முடி வெடிப்பதை தவிர்க்கும். முடியின் நீளத்தை குறைக்க தேவையில்லை. ஆனாலும் நீளமான முடியே , குட்டை முடியைவிட அதிகம் வெடிக்கும். ஏனென்றால் முடியில் நீளம் அதிகரிக்க அதிகரிக்க அடியில் அடி முடியில் உள்ள க்யூட்டிக்கல் குறைந்து வெடிப்பு ஏற்படுகிறது. ஹேர் ட்ரிம்மிங்கோடு நான் சொன்ன இந்த எளிய வழிமுறைகளையும் பின்பற்றினால் முடி வெடிப்பதை தவிர்க்கலாம்.

மர்ழியா, பல்லை நற நறன்னு கடிச்சு என்ன பிரயோஜனம். நான் மாட்டினது மாட்டினதுதானே. என்னதான் இருந்தாலும் நேரில் சண்டை போடற மாதிரி வருமா? அதான் இந்தியாவில் இருக்கறதால தப்பிச்சுடறாரே. நான் கெட் டு கெதருக்கெல்லாம் வரல. எனக்கும் இந்த முதல் 5 மாதம் வாமிட், மயக்கம்லாம் இல்லை. ஆனால் அதிசயமா 5 வது மாசத்திலிருந்து ஆரம்பிச்சுது. 8 மாசம் வரை வாமிட்டா இருந்தது. ஆனாலும் அந்த எக்ஸ்பீரியன்ஸ் ரொம்ப நல்லா இருந்தது.

ஸ்ப்லிட் எண்ட்ஸ் எப்படி இருக்கும் பார்க்க? எனக்கு ஸ்ப்லிட் எண்ட்ஸ் இருக்கு/ இல்லனு எப்படி தெரிஞ்சுக்கறது?! என்ன தேடி பார்த்தாலும் விளக்கமா சொல்லும் படம் கிடைக்கவில்லை இணையத்தில்.. சொல்லுங்கப்பா இல்லனா தலை வெடிச்சுடும் எனக்கு :(

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

hello Hema akka, split ends என்றால் முடியின் நுனி இரண்டு, மூன்றாக வெடித்து இருக்கும். ஹலோ, எனக்கு பதில் அனுப்பிய எல்லோருக்கும் நன்றி. அக்கா, எனக்கு தனியா தேங்காய் எண்ணெய் ஸ்மெல் பிடிக்காது. அதனுடன் வேறு எதையாவது போட்டு காச்சி தேய்க்கலாமா?

காலங்காத்தால எழுந்து ஆஃபீஸ் போறதுக்கு முன்னாடி வந்து பாத்தா எனக்கொரு தங்கச்சி! என்னம்மா அரசி, 85க்கு அப்புறம் பிறந்தீங்களா? அப்போ நீங்க இளவரசினா, அரசி எப்படி ஆக முடியும் இத்தனை பேரு முன்னாடி இருக்காங்களே பெரியவங்க :)

ஸ்ப்லிட் எண்ட்ஸ் பத்தி சொன்னதுக்கு நன்றி!

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

ஆயிசா உங்களுக்கு சைனஸ் பிராப்லம் இல்லைனா தாராளமாக தேய்க்கலாம் ஜலீலக்கா எதோயோ போட்டு தேய்க்க சொன்னதாக நியாபகம்..

தேவா!ஆமாம் தேவா நிச்சயமாக சந்தோச நாட்கள்தான்..முதல் பொண்ணுக்கு இந்த அளவிற்க்கு இல்லைப்பா இப்ப வயிற்றில் இருக்கும் சுட்டிதான் என்னை பாடா படுத்துது :)

நீங்களும் இந்தியா வாரீங்கன்னு நினைத்தேன்..எப்படியும் வரதானே செய்வீங்க அப்ப மொத்தமா கொடுங்க :-)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்