புரோக்கோலி, வாழைக்காய் ஃப்ரை

தேதி: November 1, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புரொக்கோலி - ஒன்று
வாழைக்காய் - ஒன்று
பேபி கார்ன் - 6
வெங்காயம் - ஒன்று
குடைமிளகாய் - ஒன்று
பச்சைமிளகாய் - ஒன்று
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு - 4 பல்
மல்லி இலை - சிறிது
மிளகாய்தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லிதூள் - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - 3/4 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - சிறிது
எண்ணெய் - 4 தேக்கரண்டி


 

புரோக்கோலியை தனித்தனியாக பிரித்து எடுத்து சுடுத்தண்ணீரில் போட்டு வைக்கவும்.
வெங்காயம், குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். பேபி கார்னை வட்டமாக நறுக்கவும்.
வாழைக்காயை 5 துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து 7 நிமிடம் வேக விட்டு வெந்ததும் எடுத்து தோல் நீக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து அதில் நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு நறுக்கின பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும்.
பின்னர் பேபி கார்ன், குடைமிளகாயை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி விட்டு அதனுடன் புரோக்கோலியை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
வதக்கிய காய்களுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் தெளித்து 10 நிமிடம் வேக விடவும்.
10 நிமிடம் கழித்து வேக வைத்து நறுக்கிய வாழைக்காய், தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
கடைசியாக கரம் மசாலா தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு ஒரு முறை கிளறி விட்டு இறக்கி விடவும்.
சுவையான புரோக்கோலி வாழைக்காய் ப்ரை தயார். இதை சப்பாத்தி, நாண், பராத்தா, பூரி ஆகியவற்றுடன் பக்க உணவாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
அறுசுவையில் மஹிஸ்ரீ என்ற பெயரில் சமையல் குறிப்புகள் வழங்கி வரும் <b> திருமதி. ஸ்ரீகீதா மகேந்திரன் </b> அவர்கள் வழங்கியுள்ள செய்முறை இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மஹி உங்க ப்ரொக்கலி ஃப்ரை ரொம்ப நல்லா இருக்குப்பா.
உங்கலை பார்த்தால் இதையெல்லாம் சமைக்கும் பெண்ணாகத் தெரியவில்லையே.இப்பதான் ஸ்கூலிலிருந்து வந்த மாதிரி தெரியுது.hi hi thappaa eduththukkaadhiingka.
இன்னைக்கே செய்யப்போரேன்பா

புரோகலி அவ்வளவும் அயர்ன்
ரொம்ப நல்ல இருக்கு ரெசிபி.
ஜலீலா

Jaleelakamal

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

ஆமாம் ஜலீலா மேடம், நான் கூட வாரத்தில் 2 (அ) 3 முறை புரோக்கோலி செய்து விடுவேன். இது உடம்பிற்கு மிகவும் நல்லது. உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது.இது அறுசுவை தோழிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........