தேங்காய் மசாலா

தேதி: April 1, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய் - 1
பச்சை மிளகாய் - 4
பெரிய வெங்காயம் 1
மஞ்சள்பொடி - சிறிதளவு
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு கட்டு
புளி - ஒரு கோலி அளவு
பூண்டு - 5 பல்
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சீரகம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
தேங்காயை அரைத்து கெட்டிப்பால், தண்ணீர் பால் என்று இரண்டு வகையாக தனியே எடுத்து வைக்கவும்.
தண்ணீர் பால், புளிக்கரைசல், வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள்பொடி, கொத்தமல்லி, அரிசிமாவு, பூண்டு விழுது ஆகியவற்றை உப்புச் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
மிதமான தீயில் வைத்துப் பத்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
பிறகு, கெட்டியான தேங்காய்ப்பாலை ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.


மேலும் சில குறிப்புகள்