உங்கள் ஆலோசனைக்கு

நான் இப்போது 4 வார கர்ப்பமாக இருக்கின்றேன் ஆனால் இதுவரை எனக்கு வாந்தியோ அல்லது உடல் ரீதியான மாற்றம் எதுவுமே ஏற்படவில்லை இது சாதாரண்மானதா? அல்லது நான் இது பற்றி டாக்டரிடம் ஆலோசனைகள் பெற வேண்டுமா? தயவுசெய்து உங்கள் ஆலோசனையை எனக்கு தாருங்களேன்.... (இது என்னுடய முதலாவது கர்ப்பம்)

முதலில் என் அன்பான வாழ்த்துகள்!

கர்பம்னா எல்லோருக்கும் இந்த மாதுரி சிம்டம்ச்லாம் இருக்கனும்னு இல்லை..இன்னும் சொல்லனும்னா இதெல்லாம் இருக்காமல் இருப்பது நல்லது அதிக ஸ்டைன் ஆகிடும் சோ வீண் கவலை வேணாம்..சிலருக்கு சாம்பல்,மாங்காய் பிடிக்கும் என் கணவர் அதை பார்த்து கேட்பார் நீ ஏன் சாப்டல இதைலாம்னு (நானும் 22 வார கர்பினிதான்) எனக்கு சிரிப்பு தாங்கல..இதெல்லாம் சாப்டாதான் கர்பினி என்றோ வாமிட் வந்தாதான் கர்பம் என்றோ அர்த்தம் இல்லை சரியா..நல்லா சாப்டுங்க எப்ப வேணாலும் வரலாம் வாமிட் சிலருகு 3 மாசத்திற்குள்ளோ சலருக்கு 3 மாசத்திற்க்கும் மேலோ கூட வரலாம்..ஸ்டைன் செய்துகாதீங்க..கர்பினிகளுக்குன்னு இங்கு இருக்கும் திரட்டில் நிறைய பேசி இருக்கோம் அதை பாருங்க யூஸாக இருக்கும்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் nive தாயாக போகும் உங்களுகு எனது வாழ்த்துகள் வாந்தி ஒன்னும் இல்லயெ என்ரு சந்தோசப் படுங்கள் இப்ப தான் உங்களால் நல்லா சாப்பிட முடியும் நல்லா சாபிடுங்க நிரய யூஸ் குடிங்க நிரய தண்ணி குடிங்க நானும் 7 வாரம் கர்பமா இருகேன். அப்புரம் சொல்ல மறந்திட்டன் கஷ்ரமான வேலை ஒன்னும் 3 மாததிட்கு செய்யதிங்க

அன்புடன் துஷி

உங்கள் மூவருக்கும் என் வாழ்த்துக்கள்.NIVE நீங்கள் நிறைய சினிமா பார்ப்பீங்க போல!சினிமாவில் தான் கர்ப்பம் வாந்தி & மயக்கத்தில் தெரியும்,ஹிஹிஹி...........சும்மா தமாஷ் பண்ணினேன்.எனக்கு 6 வாரத்தில் தான் நான் கர்ப்பமாக இருக்கிரேன் என்றே தெரியும்.அதுவரை எனக்கு எந்த SIMPTOMS-ம் இல்லை.சொல்ல போனால் 2 1/2 மாதத்தில் தான் எனக்கு வாந்தி ஆரம்பித்தது,மயக்கம் இல்லை,3 1/2 மாததில் மசக்கை தெலிந்து விட்டது,இப்போது என் மகள் பிறந்து 17 மாதங்கள் ஆகிறது.நீங்கள் எந்த கவலையும் இல்லாமல் மனதை சந்தோஷமாக வைத்திருங்கள்,

Eat healthy

எனக்கு கர்ப்பம் ஆரம்பித்த நாள் முதல் குழந்தை பிறக்கும் வரை ஒரு தடவை கூட வாந்தி வந்தது இல்லை..வயிறும் கூட 5மாதத்திற்கு தெரியவில்லை..வெயிட் கூட முதல் 4மாதத்தில் கூடவே இல்லை..எனக்கு நான் கர்ப்பமாக இருக்கிறோம என்று பமுறை சந்தேகம் வந்துள்ளது..ஆனால் அதுபின் நிறைய எடை கூடியதும் பின் இப்போது குறைக்க முடியாமல் கஷ்டபடுவதும் வேறு விஷயம்.எனவே ஒருத்தருக்கு இருப்பது போல் இன்னொருத்தருக்கு இருக்காது..ரெகுலரா செக்கப் போங்க..நல்லா சாப்பிடுங்க..மனதை போட்டு குழப்பாமல் சந்தோசமாக இருங்க..எல்லோரும் சொல்வது போல முதல் 3 மாதத்திற்கு கடினமான வேலை செய்யாமல் வெயிட் தூக்காமல் இருந்தால் நல்லது..வாழ்த்துக்கள்

உங்க வாழ்த்துக்கு நன்றிமா துஆ செய்யுங்க என் குடும்ப ஹக்கில்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

வாழ்த்துக்கள் மர்ழியா, துஷி, ரோஜா. க்ரூப்பா இருந்து டிஸ்கஸ் பண்றீங்க. பார்க்க சந்தோஷமா இருக்கு. உங்கள் மூவருக்கும் மூன்று குட்டீஸுக்கும் சேர்த்து ப்ரே பண்ணுகிறேன்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி இமா. எப்போதும் சந்தோஷமா இருங்க

ஹாய் துஷி வணக்கம்.எப்படிப்பா இருக்கீங்க?

ஹாய் தனு நான் நல்லா இருகன் நீங்கள் எப்படி இருக்றீங்கள்
தனு நீங்கள் எந்த நாட்டில் இருக்ரீங்கல்

மேலும் சில பதிவுகள்