வெங்காய தக்காளி சட்னி

தேதி: November 3, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

வெங்காயம் - ஒன்று (நறுக்கியது)
தக்காளி - ஒன்று (நறுக்கியது)
மிளகாய் வற்றல் - 3
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு


 

எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றல், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும்.
இதில் வெங்காயம் சேர்த்து லேசான பொன்னிறமாக வதக்கியப்பின் தக்காளியும் சேர்த்து குழைய வதக்கவும்.
பச்சை வாசம் போக வேண்டும். இந்த கலவையில் உப்பு சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து சட்னியாக அரைக்கவும்.


இது இட்லி, தோசைக்கு ஏற்றது. தேவைப்பட்டால் வழக்கம் போல் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கலக்கலாம். மாறுதலுக்கு சிறிது தேங்காய் சேர்த்தும் அரைக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் வாணி
நானும் இப்படிதான் செய்வேன் ,ஆனால் சிறிது புளி சேர்ப்பேன் ,சிறிது புளிப்பா நல்லா இருக்கும்.

நானும் இப்படிதான் செய்வேன்,ஒரு மிக சிறிய துண்டு இஞ்சி சேர்ப்பேன்.நன்று.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

கண்டிப்பாக நீங்கள் சொன்ன முறையையும் நான் செய்து பார்க்கிறேன். நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புளி,இஞ்சி சேர்த்து செய்தேன்.ரொம்ப நல்லாயிருந்தது வனிதா

மிக்க நன்றி மேனகா. :) நானும் ஒரு முறை நீங்க சொன்னது போல் அரைத்து பார்க்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா,
நானும்கூட இப்படிதான் செய்வேன், ஆனால் கடலை பயறு இல்லாமல் - சிறிது புளி சேர்த்து செய்வேன். இந்த சட்னி நேற்று முன் தினம் செய்தேன். ரொம்பவே நன்றாக இருந்து, தோசையுடன் சாப்பிட. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மிக்க நன்றி சுஸ்ரீ. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா இந்த சட்னி செய்தேன். ரொம்ப நல்லா இருந்தது. ரவா தோசை, தோசை இரண்டுக்கும் மிகவும் பொருத்தமா இருந்தது. நன்றி உங்களுக்கு.

மிக்க நன்றி வின்னி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா