சின்ன வெங்காய கார சட்னி

தேதி: November 3, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெங்காயம் - ஒன்று
சின்ன வெங்காயம் - 15 - 20
மிளகாய் வற்றல் - 4
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை - சிறிது


 

எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றல், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இதை உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் சட்னியாக அரைக்கவும்.
அரைத்த விழுதை மீண்டும் சிறிது எண்ணெய் சேர்த்து வெங்காய வாசம் போகும் வரை வதக்கவும்.


தண்ணீர் சேர்த்தால் வெங்காய வாசம் போகாது. இது இட்லி, தோசைக்கு ஏற்றது.

மேலும் சில குறிப்புகள்


Comments

வனிதா சின்ன வெங்காய சட்னி செய்தேன்.நல்லா இருந்தது ஊரிலிருந்து எடுத்து வந்த வெங்காயம் இருந்ததால் இந்த சட்னி செய்ய முடிந்தது, தோசைக்கு நல்ல சுவையாக இருந்தது, நன்றி.

மிக்க நன்றி கவி. ஊரில் இருந்து வெங்காயம் எல்லாம் கொண்டு வர முடிகிறதா?! பரவாயில்லையே... நாங்கள் பக்கத்து நாட்டில் தான் வாங்க வேண்டி இருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா லக்கேஜோட லக்கேஜா என் வீட்டுக்காரருக்கு தெரியாம (தெரிஞ்சா வெங்காயமெல்லாம் வேண்டானு சொல்லுவார்)எடுத்துட்டு வந்தேன்:-)

இந்த சட்னி ரவா தோசைக்கு நன்றாக இருந்தது.

சவுதி செல்வி

மிக்க நன்றி செல்வி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா