ட்ரை நெத்திலி வறுவல்

தேதி: November 3, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நெத்திலி கருவாடு - 1/4 கிலோ
வேர்க்கடலை - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - வறுக்கத் தேவையான அளவு


 

நெத்திலி கருவாடை தலையை நீக்கி நன்கு அலம்பி சுத்தம் செய்து கொள்ளவும்.
சிறிது உப்பு, மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து கலந்து ஒரு நாள் முழுக்க பிரீசரில் வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து முதலில் வேர்க்கடலையை வறுத்துக்கொள்ளவும்.
அதே வாணலியில் நெத்திலி கருவாடை சிறிது சிறிதாக போட்டு மொறுமொறுப்பாக வறுக்கவும். அடுப்பை மிக நிதானமாக எரிய விடவும். அதிக சூட்டினால் கருவாடு தீய்ந்து விடும். மொறுமொறுப்பு கிடைக்காது.
வெங்காயத்தை தோல் நீக்கி சிப்ஸ் கட்டரினால் மெலிதாக, நீளநீளமாக சீவிக்கொள்ளவும்.
இதனையும் அதே எண்ணெயில் மொறுமொறுப்பாக வறுக்கவும்.
கடைசியாக கறிவேப்பிலையை பொரித்துப்போட்டு, அனைத்தையும் கலந்து நன்கு ஆற விட்டு ஒரு பாட்டிலில் போட்டு வைக்கவும். கூடவே டிஷ்யூ பேப்பர் ஒன்றினையும் போட்டு வைத்தால் அதிகப்படி எண்ணெய் உறிஞ்சப்பட்டு விடும்.
நன்கு மொறுமொறுப்பாக வறுத்து விட்டால் இது சுமார் 1 -2 வாரங்கள் வரை கெடாமல் இருக்கும். அவசரத்திற்கு உபயோகித்துக் கொள்ளலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நெத்திலி கருவாடுடன்,இந்த வேர்க்கடலை,வெங்காயம் கருவேப்பிலை ஐடியா சூப்பர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நன்றி ஆஸியா,இதெல்லாம் சேர்த்தால் வாசனை நன்றாக இருக்கும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஆ நெத்திலி கருவாடா சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுது.
வேர்கடலை கருவேப்பிலை மணத்துடன் சூப்பரா இருக்குமே//

ஜலீலா

Jaleelakamal

வெறும் நெத்திலி கருவாடே நன்றாக இருக்கும் அதில் வேர்கடலை, கருவேப்பிலை மணத்தோட சூப்ப்ர்ர்ர்ர் ஆக இருந்தது.

லதா

இப்படிக்கு
லதா

அன்பு ஜலி,ஆ நெத்திலிகருவாடா?என்கின்றீர்கள்.ரொம்ப பிடிக்குமா?கருவாடே சாப்பிடாத என் தெலுங்கு தோழி ஒருவருக்கு இதனை வறுத்துக்கொடுத்தேன்.ரொம்ப பிடித்துப்போய் விட்டது.நன்றி ஜலி.
அன்பு லதா,ஆமாம்,வேக்கடலை,கருவேப்பிலை சேர்த்து செய்தால் மிக்கமணமாக இருக்கும்.தாய்லாந்தில் இருந்து வரும் மிகப்பொடியான கருவாட்டை இதே முறையில் செய்து பாட்டிலில் அடைத்து வெளிநாட்டில் வசிக்கும் என் கணவர்,தம்பிகளுக்கு அனுப்புவேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website