சான்விச் ரெசிபீஸ்

தோழிகளே எனக்கு சான்விச் ரெசிபீஸ் நிறைய வேண்டும்..சேர்ச்ச் பன்னி பார்த்தால் உப்பு சப்பில்லாத சேன்ட்விசெஸ் தான் கிடைக்கிறது....நம் தளத்தில் சான்ட்விச் குறிப்புகள் அதிகம் இருந்தால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்...குறைந்தது 20 குறிப்பு இருந்தால் தான் தனிப்பிரிவாக அறுசுவையில் அதாஇ சேர்க்க முடியும்...நீங்கள் எல்லோரும் என்ன சொல்கிறீர்கள்?நான் மட்டும் தான் sandwiches தேடுகிறேனா இல்ல நீங்களுமா?
தெரிந்த சான்ட்விச் குறிப்புகளை இங்கு தந்துதவுங்களேன்.
என் கனவருக்கு ஆஃபிசுக்கு கொடுத்தனுப்ப தான் தேடுகிறேன்..அங்கு இந்தியன் உணவு கொன்டு போக முடியாது மசாலா வாடை வந்தால் ஒரு மாதிரி பார்ப்பார்கள்...சேன்ட்விச்சாக இருந்தால் கைய்யை நாசப்படுத்தாமல் சுலபமாக சாப்பிடவும் செய்யலாம்.ப்ட்ரெட் மட்டுமல்லாமல் ,ரொட்டி,பரோட்டாவில் செய்யும் சான்ட்விச்களையும் தந்துதவுங்கள்

இத்துடன் எனக்கு லன்ச்சுன்னு கொடுத்தனுப்ப அதே சமையம் அதிகம் வாடை வராத வகை உணவுகள் தருவீர்களா..ஓவென் பேக்ட் உணவுகள்,ரொட்டியில் பொதிந்தவை என.எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்

தளி நான் நிறையா சாண்ட்விச் சுஜாதா கேட்டபோது கொடுத்துள்ளேன்
கூடிய விரைவில் படத்துடன் வரும்

என்னுடைய சாண்ட்விச்சை எடுத்து போட்டாலே அது 10 ஐ தான்டும்
வேண்டுமானால் அந்த உணவெல்லாம் வெளிநாட்டு என்ற பிரிவில் போடவா
இன்னும் நிறைய சாண்ட்விச் வகைகள் இருக்கு தரேன்
ஜலீலா

Jaleelakamal

அய்யோ ஜலீலாக்காகொடுங்க கொடுங்க..என்கிட்ட ஒரு 5 அடிக்கடி செய்யும் முறை உண்டு..அது தவிற எப்படியோ செஞ்சு நல்லா வந்து மறந்து போன குறிப்பு அங்கிங்க உண்டு கொடுங்க.

Tuna 6 oz can
ெவங்காயம் 1/4 கப்
மிளகாய் 1
உப்பு
எலுமிச்சம் சாறு
தக்காளி சிறிது
கொத்தமல்லி தழை
mayonnaise 11/2 table spoon
olive oil 2 teaspoon
சட்டியில் ஆலிவ் எண்ணை சிறிது விட்டு, வெங்காயம், மிளகாய் லேசாக வதக்கி tuna இல் சேர்த்து, பின் mayo, salt, lemon juice( 5 drops) add பண்ணவும். பின் தக்காளியை பொடியாக வெட்டி இதில் சேர்த்து, விரும்பினால் கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
இதை toasted bread slice ல் வைத்து கொடுக்கவும்.

தளிகா பொண்ணு, மாலி அனைவரும் நலம். ரீமா குட்டி எப்படி இருக்கா? குறும்புகள் எல்லாம் குறைந்து இருக்கா:-)

சாண்ட்விச் நம்ம இஷ்டப்படி எப்படி வேண்டுமென்றாலும் செய்யலாம். சாண்ட்விச் ப்ரெட் கொஞ்சம் மொத்தமா இருந்ததுன்னா சாப்பிட வசதியா இருக்கும். sandwich wrap-ற்கான ரொட்டி இங்கெல்லாம் சில கடைகளில் இருக்கு. இல்லையென்றால் maida/wheat சப்பாத்தியே யூஸ் பண்ணலாம்.
சான்ட்விச்சுக்கு ஸ்ப்ரெட் தடவி செய்தால் நன்றாக இருக்கும். இதை செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.

1.மயோனைஸ் வித் தக்காளி கெச்சப்

Reduced fat/fat free மயோனைஸ் - கால் கப்
தக்காளி கெச்சப்- 2 டீ ஸ்பூன்
பொடியாக அறிந்த பூண்டு - ஒரு பல்
லெமன் ஜூஸ் - 2 டீ ஸ்பூன்
நறுக்கிய கொத்துமல்லி அல்லது பார்சிலி இலை - 1 டீ ஸ்பூன்
மிளகு தூள் - சிறிது
எல்லவற்றையும் நன்கு கலந்து சான்ட்விச்சுக்கு நடுவில் வைக்கும் சிக்கன்/காய்கள் மேல் 2 டீ ஸ்பூன்
அளவிற்கு தடவி குடுக்கலாம்

2. மயோனைஸ் வித் லெமன் ஜூஸ்
மேலே சொன்னதுதான். தக்காளி கெட்சப் மட்டும் சேர்க்க வேண்டாம்.
நம்முடைய கற்பனைக்கு ஏற்றவாரு என்னவேனுமென்றாலும் போடலாம். உதாரணமாக காரம் சாப்பிடுபவராயிருந்தால் மிளகுக்கு பதில் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி எண்ணையில் சற்று வதக்கி சேர்க்கலாம்.

3. அவகோடா ஸ்ப்ரெட்
நன்கு மசித்த அவகோடா பழம் - 2
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 அல்லது ஹாட் சாஸ் சிறிது
பொடியாக நறுக்கிய பூண்டு -1 பல்
லெமன் ஜூஸ் - 1
நறுக்கிய கொத்துமல்லி இலை - 1 டீஸ்பூன்

அப்புறம் இருக்கவே இருக்கு. நம்ம கொத்துமல்லி சட்னி. இதையும் ஸ்ப்ரெட் ஆக யூஸ் செய்யலாம்.

சிக்கன் நகட்ஸ் ஸான்ட்விச்

பொரித்த/பேக் செய்த சிக்கன் நகட்ஸ் - தேவையான அளவு
வட்டமாக அறிந்த தக்காளி
லெட்யூஸ் இலைகள் சிறிது
சான்ட்விச் ஸ்ப்ரெட் - சிறிது
இரண்டு பர்கர் பன்னில் லேஸாக ஸ்ப்ரெட் தடவி லெட்யூஸ், தக்காளி, நகட்ஸ், சிறுது ஸ்ப்ரெட் ,தக்காளி,லெட்யூஸ் இப்படி அடுக்கி குடுக்கலாம். வீடாயிருந்தால் வட்டமாக அறிந்த வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

இதேபோல் கிரில் சிக்கன் சான்ட்விச் செய்யலாம். சிக்கனுக்கு பதில் முட்டை ஆம்லெட் வைத்தால் எக் சான்ட்விச்.

கிரில்ட் வெஜ்ஜி சான்ட்விச்
கத்திரி, சுக்கினி,குட மிளகாய் கால் இன்ச் அளவிற்கு மொத்தமாக நறுக்கி, வெங்காயத்தை வட்டமாக நறுக்கி உப்பு, மிளகு தூள் , ஆலிவ் எண்ணெயில் நன்கு பிரட்டி கிரில்லிலோ, அவனிலோ சுட்டு ப்ரெட்டிற்கு நடுவில் வைத்து குடுக்கலாம். இதற்கு அவகோடா ஸ்ப்ரெட் நன்றாக இருக்கும். குழந்தைகள் என்றால் சீஸ் வைத்து குடுக்கலாம்.

தளிகா பிறகு ஞாபகம் வரும்போது மீண்டும் வருகிறேன்.

வாணி டூனா செய்முறை நல்லா இருக்கு..நான் இஞ்சி பூண்டு மிளகு மல்லியெல்லாம் போடுவேன் அதனால் வாடை வராதா என்ற டவுட் இருந்தது இது ஸ்மெள் வராது போலிருக்கு.தேன்க்ஸ்பா
அன்பு வானதி.சந்தோஷமா இருக்கு ரொம்ப நாளைக்குபிறகு பேச..பொண்ணு நல்லா இருக்கா..அதுக்கடுத்து எழுதின வரி இருக்கே அது படிச்ச பின் என் பேச்சு வர மாட்டேஙுது:-D
கைவசம் எல்லோரும் இவ்வளவு ரெசிபீஇஸ் வச்சிருக்கீங்களா..அட்மின் அட்மின் ஓடிவாங்கோ பாருங்க எப்டி பிச்சு ஒதர்ராங்கன்னு..தனிப்பிரிவு வேண்டும் வேண்டும் வேண்டும்
வானதி அனுப்பின எல்லா குறிப்பும் சூப்பரா இருக்கு..டான்னு நாலு குறிப்பை கொடுத்துட்டீங்க...நான் ஸ்ப்ரெட்டா இதுவரை மயோனைஸ் மட்டுமே வச்சிருக்கேன் .இப்போ தான் இப்படி செய்ய போறேன்.
இதனை மிக்ஸ் பன்னி ஃப்ரிட்ஜில் வச்சாலும் கெடாதில்லையா.கண்டிப்பா செய்வேன்

எத்த்னை வகையன ரெஸிபிஸ் எனக்கும் யூஸா இருக்கு அனைவருக்கும் நன்றி..

தளி ஆமாப்பா இப்ப டாக்டர்ட்ட போனப்ப உலக அதிசயமா சாண்விஜ் சாப்டேன் டேஸ்ட் ரொம்ப பிடிச்சு போச்சு எல்லாம் குழந்தை வயிற்றில் இருப்பதாலோ என்னவோ தெரியல..

டியர் வானதி உங்க மெயிலை பார்த்தபின் சந்தேகம் போச்சு விரைவில் பதில் போடுகிறேன்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆமாம் தளிகா அந்த ஸ்ப்ரெட்டெல்லாம் செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். கெடாது. அப்புறம் சான்ட்விச் ப்ரெட்டை நம் விருப்பப்படி டோஸ்ட் செய்து கூட சாப்பிடலாம். க்ரில்ட் வெஜ்ஜி சான்ட்விச் ப்ரெட்டை மட்டும் முதலில் அவனில் லேசாக பிரவுன் நிறத்திற்கு பேக் செய்து பிறகு காய்களை வைத்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.

மர்ழி நல்லா சாப்பிடுங்க.உடம்ப நல்லா பார்த்துக்கோங்க. மெயில் பொறுமையா பண்ணுங்க.

இங்க பாருங்க.. பிச்சி உதறிகிட்டு இருக்காங்க.. சீக்கிரம் போடுங்க ஒரு பகுதி.. நானும் செய்து பின்னூட்டம் அனுப்புவேன்
"Miracles sometimes occur, but one has to work terribly hard for them."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் வானதி, எப்படி இருக்கீங்க? உங்க பொண்ணுக்கு சர்ஜரின்னு படிச்சேன். எனக்கு இப்பதான் தெரியும். இப்போ எப்படி இருக்கா? குழந்தைங்க சீக்கிரம் ரெகவரி ஆகிடுவாங்க. ஆனாலும் உங்களுக்கு ரொம்ப வேலை இருந்திருக்கும் இல்லையா. உங்க பொண்ணு பேர் என்ன? உங்க கூட பேசியே நாளாச்சு. ரொம்ப பிசியா. சாண்ட்விச் ஸ்ப்ரெட் ரெசிப்பீஸ் நல்லா இருக்கு.

தளிகா, எனக்குத் தெரிஞ்ச சாண்ட்விச் ரெசிப்பீஸ், ராப் ரெசிப்பீஸ் நேரம் கிடைக்கும்போது எழுதறேன். இப்பலாம் நான் சமையல் குறிப்பு எழுதறதே இல்லை. இனியாவது அப்பப்ப ஒழுங்கா எழுதணும். இங்கே சிம்பிளான சாண்ட்விச், முட்டையை வேகவெச்சு ப்ராசசரில் அடிச்சு, அதில் மிளகுத்தூள், தேவையென்ற்றால் உப்பு கலந்து, லெட்டூஸ் வைத்து செய்வதுதான் இருப்பதிலேயே சிம்பிளான ரெசிப்பி. அடுத்து சிக்கனை போச்சிங் (வேக வைத்து) செய்து, அதனுடன் நமக்கு பிடிச்ச அவகேடோ, மஸ்டர்ட் மயோனைஸ், லெட்டூஸ் வைத்து செய்யலாம். க்ரியேட்டிவா அப்படியே குடைமிளகாய்,கேரட், அவகேடோன்னு ஒவ்வொண்ணா யோசிச்சு சேர்க்கலாம். ட்யூனா சாண்ட்விச் ஸ்மெல் அடிக்காது. அதேபோல் ரோஸ்ட் மீட் வெச்சும், காய்கறி அல்லது Relish வைத்தும் சாண்ட்விச் செய்யலாம். ரெஸ்டாரண்ட்களில் கிடைக்கும் சாண்ட்விச்சுகள் சில செய்முறைகள் எனக்கு தெரியும். அதன் செய்முறைகளையும் எழுதுகிறேன். சதுர வடிவ சாண்ட்விச் பிரெட், பர்கர் பிரெட்டுகளைவிட பிரத்யேகமான பெக்காசியோ, பானினி போன்ற (வட்ட வடிவ பன் போன்று) வெரைட்டி பிரெட்டுகள் விற்கிறார்கள். சாதாரண ஒயிட் பிரெட்டை விட மல்ட்டி கிரெயின் பிரெட் நன்றாக இருக்கும்.

மேலும் சில பதிவுகள்